இது வேற மாறி.. மிட்-ரேஞ்ச்ல OLED டிஸ்பிளே.. 16GB ரேம்.. 1TB மெமரி.. 6200mAh பேட்டரி.. எந்த மாடல்?
ஓஎல்இடி டிஸ்பிளே, 50 எம்பி டெலிபோட்டோ கேமரா, 80W சூப்பர்வூக் சார்ஜிங், 50W சூப்பர்வூக் வயர்லெஸ் சார்ஜிங், 6200mAh பேட்டரி மட்டுமல்லாமல், 16 ஜிபி ரேம் மற்றும் 1 டிபி மெமரி கொண்ட அல்ட்ரா பிரீமியம் மாடலாக ஓப்போ ரெனோ14 ப்ரோ (OPPO Reno14 Pro) போன் வெளியாகி இருக்கிறது. இந்த ப்ரோ மாடலின் பீச்சர்களை பார்த்துவிட்டு விலை விவரங்களை தெரிந்து கொள்ளலாம்.
ஓப்போ ரெனோ14 ப்ரோ அம்சங்கள் (OPPO Reno14 Pro Specifications): இந்த ஓப்போவில் 50 எம்பி பெரிஸ்கோப் டெலிபோட்டோ கேமரா + 50 எம்பி அல்ட்ரா கிளியர் மெயின் கேமரா + 50 எம்பி அல்ட்ரா வைடு ஆங்கிள் கேமரா கொண்ட பிரீமியம் டிரிபிள் ரியர் கேமரா சிஸ்டம் (Triple Rear Camera System) கிடைக்கிறது. மெயின் + டெலிபோட்டோவில் ஓஐஎஸ் (OIS) டெக்னாலஜி வருகிறது.

டெலிபோட்டோவில் 85எம்எம் போகல் லென்த் மற்றும் 3.5X ஆப்டிகல் ஜூம் கிடைக்கிறது. இதுபோக 120X அல்ட்ரா-ஹை-டெபனிஷன் ஜூம் கிடைக்கிறது. அல்ட்ரா வைடு கேமராவில் ஆட்டோ போகஸ் சப்போர்ட் வருகிறது. இதுபோக கலர் டெம்ப்ரேச்சர் சென்சாரும் (Color Temperature Sensor) வருகிறது. லைவ் போட்டோ (Live Photo), லைவ் பிராட்காஸ்ட் (Live Broadcast) பீச்சர்கள் கிடைக்கின்றன.
மேலும், ஃபிளாஷ் லைவ் போட்டோஸ் (Flash Live Photos) கிடைக்கிறது. கேமிங் பிரியர்களுக்கான பீச்சர்களை பார்க்கையில், கேம் லைவ் ரெக்கார்டிங் (Game Live Recording), ஹீட் கன்ட்ரோலுக்கு ஐஸ் கிரிஸ்டல் ஹீட் சிங்க் (Ice Crystal Heat Sink) போன்ற பீச்சர்கள் வருகின்றன. இதற்கு ஏற்ப அவுட்புட் கொடுக்க ஃபுல்எச்டிபிளஸ் ரெசொலூஷன் கொண்ட 6.83 இன்ச் ஓஎல்இடி (OLED) டிஸ்பிளே உள்ளது.
இந்த டிஸ்பிளேவுக்கு ஓப்போ கிரிஸ்டல் ஷீல்டு கிளாஸ் (OPPO Crystal Shield Glass) புரொடெக்சன் மட்டுமல்லாமல், 3840Hz PWM டிம்மிங் ஃபிரிகொன்சி, 1200 நிட்ஸ் பீக் பிரைட்ன்ஸ் மற்றும் 240Hz டச் சாம்பிளிங் ரேட் கிடைக்கிறது. இதுபோக 120Hz ரெஃப்ரெஷ் ரேட் கிடைக்கிறது. கலர்ஓஎஸ் 15 (ColorOS 15) மற்றும் மாலி ஜிபியு கிராபிக்ஸ் கார்டு கிடைக்கிறது.

இந்த ப்ரோ மாடலில் 12 ஜிபி ரேம் + 256 ஜிபி ஸ்டோரேஜ், 12 ஜிபி ரேம் + 512 ஜிபி ஸ்டோரேஜ் மற்றும் 16 ஜிபி ரேம் + 512 ஜிபி ஸ்டோரேஜ் கொண்ட வேரியண்ட்கள் விற்பனைக்கு வர இருக்கிறது. இதுபோக 16 ஜிபி ரேம் + 1 டிபி ஸ்டோரேஜ் கொண்ட டாப் எண்ட் வேரியண்ட் விற்பனைக்கு கிடைக்க இருக்கிறது. மைக்ரோஎஸ்டி சிலாட் (microSD Slot) சப்போர்ட் கிடையாது.
டைமன்சிட்டி 8450 4என்எம் (Dimensity 8450 4nm) சிப்செட் வருகிறது. சாம்சங் சென்சாருடன் 50 எம்பி செல்பீ ஷூட்டர் மற்றும் ஆன்-டிஸ்பிளே ஃபிங்கர்பிரிண்ட் சென்சார் கிடைக்கிறது. 80W சூப்பர்வூக் சார்ஜிங் மற்றும் 50W சூப்பர்வூக் வயர்லெஸ் சார்ஜிங் சப்போர்ட் கொண்ட 6200mAh பேட்டரி கிடைக்கிறது. ரீஃப் பிளாக், லில்லி பர்பிள், மெர்மெய்ட் கலர்களில் கிடைக்க இருக்கிறது.
12 ஜிபி ரேம் + 256 ஜிபி மெமரி வேரியண்ட்டின் விலை ரூ. 41,560ஆகவும், 12 ஜிபி ரேம் + 512 ஜிபி மெமரி வேரியண்ட்டின் விலை ரூ.45,105ஆகவும் இருக்கிறது. மேலும், 16 ஜிபி ரேம் + 512 ஜிபி மெமரி வேரியண்ட்டின் விலை ரூ.47,500ஆகவும், 16 ஜிபி ரேம் + 1 டிபி மெமரி வேரியண்ட்டின் விலை ரூ.53,435ஆகவும் இருக்கிறது. சீனாவில் மே 23ஆம் தேதி விற்பனைக்கு வருகிறது.


Click it and Unblock the Notifications








