மிட்-ரேஞ்ச் மிரளுது.. 6200mAh பேட்டரி.. OIS கேமரா.. AMOLED டிஸ்பிளே.. 12GB ரேம்.. IP69 ரேட்டிங்.. எந்த மாடல்?
ஏரோஸ்பேஸ் கிரேடு அலுமினியம் ஃபிரேம் மட்டுமல்லாமல், கார்னிங் கொரில்லா கிளாஸ் 7ஐ புரொடெக்சன், IP66 ரேட்டிங், IP68 ரேட்டிங், IP69 ரேட்டிங் வாட்டர் ரெசிஸ்டன்ட் போன்ற பிரீமியம் டியூரபிலிட்டி பீச்சர்கள் மற்றும் ஏஐ கேமரா பீச்சர்களுடன் ஓப்போ ரெனோ14 ப்ரோ 5ஜி (OPPO Reno14 Pro 5G) போனானது இந்திய மார்கெட்டில் அறிமுகமாகி இருக்கிறது. மீடியாடெக் டைமன்சிட்டி 8450 சிப்செட் கொண்ட இந்த ஓப்போ ரெனோ14 ப்ரோ 5ஜி போனின் பீச்சர்கள், விலை விவரங்கள் இதோ.
இந்த ஓப்போ போனில் 12 ஜிபி ரேம் + 256 ஜிபி மெமரி மற்றும் 12 ஜிபி ரேம் + 512 ஜிபி மெமரி கொண்ட 2 வேரியண்ட்கள் விற்பனைக்கு கிடைக்க இருக்கின்றன. 256 ஜிபி மெமரி வேரியண்ட்டின் விலை ரூ.49,999ஆகவும், 512 ஜிபி மெமரி வேரியண்ட்டின் விலை ரூ.54,999ஆகவும் இருக்கிறது. ஜூலை 8ஆம் தேதி முதல் விற்பனைக்கு கிடைக்க இருக்கிறது.

பேர்ல் ஒயிட் (Pearl White) மற்றும் டைட்டானியம் கிரே (Titanium Grey) ஆகிய கலர்களில் ஆர்டர் செய்து கொள்ளலாம். அமேசான், பிளிப்கார்ட் மற்றும் ஓப்போ ஸ்டோர் ஆகிய தளங்களில் ஆர்டருக்கு கிடைக்க இருக்கிறது. 10 சதவீத உடனடி டிஸ்கவுண்ட் அல்லது 10 மாதங்களுக்கான 0 சதவீத டவுன் பேமெண்ட் சலுகை கிடைக்கிறது. 180 நாட்களுக்கான ஸ்கிரீன் டேமேஜ் புரொடெக்சன் வருகிறது.
மேலும், ரூ.5,000 மதிப்பில் ஓப்போ அப்கிரேட் எக்ஸ்சேஞ்ச் போனஸ் மற்றும் 3 மாதங்களுக்கான கூகுள் ஒன் சந்தா கிடைக்கிறது. இதில் 2 டிபிக்கான கிளவுட் ஸ்டோரேஜ் மற்றும் ஜெமினி அட்வான்ஸ்டு சலுகைகள் கிடைக்கிறது. 6 மாதங்களுக்கான 10 ஓடிடி ஆப்களின் சந்தா கிடைக்கிறது. ஆனால், இதற்கு ஜியோ ரூ.1199 திட்டத்தை ரீசார்ஜ் செய்ய வேண்டி இருக்கும்.
ஓப்போ ரெனோ14 ப்ரோ 5ஜி அம்சங்கள் (OPPO Reno14 Pro 5G Specifications): பேர்ல் (Pearl) டிசைனில் கிரேடியன்ட் ஆரா (Gradient Aura) பேனல் கிடைக்கிறது. வெல்வெட் கிளாஸ் பாடியில் ஆன்டி-ஃபிங்கர்பிரிண்ட் கோட்டிங் கிடைக்கிறது. அல்ட்ரா தின் ஸ்கிரீன் பெசல்கள் மற்றும் ஏரோஸ்போஸ் கிரேடு அலுமினியம் ஃபிரேம் (Aerospace-Grade Aluminum Frame) கிடைக்கிறது.

ஆகவே, பிரீமியம் லுக் மட்டுமல்லாமல், டியூரபிலிட்டியும் கிடைக்கிறது. டிஸ்பிளேவுக்கு கார்னிங் கொரில்லா கிளாஸ் 7ஐ புரொடெக்சன் மற்றும் பாடிக்கு IP66 ரேட்டிங், IP68 ரேட்டிங் மற்றும் IP69 ரேட்டிங் கொண்ட வாட்டர் ரெசிஸ்டன்ட் கிடைக்கிறது. இந்த ரெசிஸ்டன்ட் மூலம் அண்டர் வாட்டர் போட்டோகிராபி சப்போர்ட் எதிர்பார்க்க முடிகிறது.
இந்த ஓப்போ ரெனோ14 ப்ரோ 5ஜி போனில் ஆண்ட்ராய்டு 15 ஓஎஸ் (Android 15 OS) கொண்ட ஆக்டா கோர் மீடியாடெக் டைமன்சிட்டி 8450 4என்எம் (Octa Core MediaTek Dimensity 8450 4nm) சிப்செட் கிடைக்கிறது. கலர்ஓஎஸ் 15.0 (ColorOS 15.0) மட்டுமல்லாமல், ஏஐ ஹைப்பர்பூஸ்ட் 2.0 கிடைக்கிறது. 6200mAh பேட்டரி, 80W சூப்பர்வூக் சார்ஜிங் மற்றும் 50W ஏர்வூக் சார்ஜிங் கிடைக்கிறது.
ஏஐ நானோ டூயல் டிரைவ் கூலிங் சிஸ்டம் (AI Nano Dual-Drive Cooling System) வருகிறது. ஏஐ எடிட்டர் 2.0, ஏஐ ஃபிளாஷ் லைவ்போட்டோ போன்ற பீச்சர்களுடன் டிரிபிள் கேமரா உள்ளது. ஓஐஎஸ் கொண்ட 50 எம்பி மெயின் கேமரா வருகிறது. 50 எம்பி அல்ட்ரா வைடு மற்றும் 50 எம்பி டெலிபோட்டோ கேமரா உள்ளது. 50 எம்பி செல்பீ ஷூட்டர் கிடைக்கிறது.
இந்த கேமராவில் 3.5X ஆப்டிகல் ஜூமிங், 120X டிஜிட்டல் ஜூமிங், 4K வீடியோ ரெக்கார்டிங், 1080p ஸ்லோவ் மோஷன் ரெக்கார்டிங் போன்ற சப்போர்ட் கிடைக்கிறது. ஏஐ டிரான்ஸ்லேட் ஆப் கிடைக்கிறது. மேலும், ஏஐ வாய்ஸ் ஸ்கிரிப், ஏஐ கால் டிரான்ஸ்லேட்டர், ஏஐ கால் சம்மரி போன்ற ஏகப்பட்ட ஏஐ பீச்சர்களை கொடுக்கிறது. பட்ஜெட் கொஞ்சம் அதிகமாகவே இருக்கிறது.


Click it and Unblock the Notifications








