Home
Mobile

வாரி வழங்கிய பிளிப்கார்ட்.. ரூ.3,500 டிஸ்கவுண்ட்.. 6200mAh பேட்டரி.. OIS கேமரா.. AMOLED டிஸ்பிளே.. எந்த மாடல்?

பிளிப்கார்ட் தளத்தில் ஓப்போ ரெனோ14 ப்ரோ 5ஜி (OPPO Reno14 Pro 5G) போனுக்கு நம்ப முடியாத டிஸ்கவுண்ட் கிடைக்கிறது. 6200mAh பேட்டரி, 80W வயர்டு சார்ஜிங், 50W வயர்லெஸ் சார்ஜிங், அமோலெட் டிஸ்பிளே, ஓஐஎஸ் கேமரா போன்ற பீச்சர்களில் பிரீமியம் காட்டி இருக்கிறது. இந்த ஓப்போ ரெனோ14 ப்ரோ 5ஜி போனின் விலை மற்றும் டிஸ்கவுண்ட் விவரங்களை இப்போது தெரிந்து கொள்ளலாம்.

பேர்ல் டிசைன் பாடியில் அல்ட்ரா பிரீமியம் லுக் கொடுக்கிறது. 7.6 எம்எம் தடிமனில் 6200mAh பேட்டரியை கொடுத்து இருக்கிறது. கார்னிங் கொரில்லா கிளாஸ் 7ஐ (Corning Gorilla Glass 7i) மற்றும் IP66 ரேட்டிங் + IP68 ரேட்டிங் + IP69 ரேட்டிங் கொண்ட வாட்டர் ரெசிஸ்டன்ஸ் கிடைக்கிறது. ஆகவே, வாட்டர் ஆக்டிவிட்டியின்போதும், இது பக்காவான டியூரபிலிட்டி கொடுக்கும்.

வாரி வழங்கிய பிளிப்கார்ட்.. ரூ.3,500 டிஸ்கவுண்ட்.. 6200mAh பேட்டரி!

வெல்வெட் கிளாஸ் (Velvet Glass) லுக்கில் சில்கி ஸ்மூத் டச் பீல் கொடுக்கும்படி பேர்ல் ஒயிட் (Pearl White) கலர் கிடைக்கிறது. அதேபோல ரக்கட் லுக் கொடுக்கும்படியான டைட்டானியம் கிரே (Titanium Grey) கலரும் கிடைக்கிறது. இந்த ஓப்போ ரெனோ14 ப்ரோ 5ஜி போனின் 12 ஜிபி ரேம் + 256 ஜிபி ஸ்டோரேஜ் வேரியண்ட்டின் விலை ரூ.49,999ஆக இருக்கிறது.

12 ஜிபி ரேம் + 512 ஜிபி ஸ்டோரேஜ் கொண்ட டாப்-எண்ட் வேரியண்ட்டின் விலை ரூ.54,999ஆக இருக்கிறது. இப்போது, பிளிப்கார்ட் தளத்தில் 2 வேரியண்ட்களுக்கும் ரூ.3,500 உடனடி பேங்க் டிஸ்கவுண்ட் கொடுக்கப்படுகிறது. ஆகவே, இந்த போனின் 12 ஜிபி ரேம் + 256 ஜிபி ஸ்டோரேஜ் வேரியண்ட்டை ரூ.46,499 பட்ஜெட்டில் வாங்கி கொள்ள முடியும்.

அதேபோல 12 ஜிபி ரேம் + 512 ஜிபி ஸ்டோரேஜ் கொண்ட வேரியண்ட்டை ரூ.51,499 பட்ஜெட்டில் வாங்கி கொள்ளலாம். ஐசிஐசிஐ கிரெடிட் கார்டு, எச்டிஎப்சி கிரெடிட் கார்டு ஆகியவற்றுக்கு இந்த பேங்க் டிஸ்கவுண்ட் கிடைக்கிறது. ஈஎம்ஐ ஆப்ஷனில் வாங்கினால், அதிகபட்சம் ரூ.5,000 வரையில் பேங்க் டிஸ்கவுண்ட் கொடுக்கப்படுகிறது. பீச்சர்கள் எப்படி இருக்கிறது?

வாரி வழங்கிய பிளிப்கார்ட்.. ரூ.3,500 டிஸ்கவுண்ட்.. 6200mAh பேட்டரி!

ஓப்போ ரெனோ14 ப்ரோ 5ஜி அம்சங்கள் (OPPO Reno14 Pro 5G Specifications): இந்த போனில் 50 எம்பி மெயின் கேமரா + 50 எம்பி டெலிபோட்டோ கேமரா + 50 எம்பி அல்ட்ரா வைடு கேமரா கொண்ட பிரீமியம் கேமரா சிஸ்டம் கிடைக்கிறது. ஓஐஎஸ் டெக்னாலஜி (OIS Technology), 3.5X பெரிஸ்கோப் ஜூமிங் மற்றும் 4K வீடியோ ரெக்கார்டிங்கை கொடுக்கிறது.

50 எம்பி செல்பீ கேமரா மற்றும் அதில் சாம்சங் சென்சார் கிடைக்கிறது. இந்த ரெனோவில் 6.83 இன்ச் (2800 x 1272 பிக்சல்கள்) அமோலெட் (AMOLED) டிஸ்பிளே, 120Hz ரெஃப்ரெஷ் ரேட், 1200 நிட்ஸ் பீக் பிரைட்னஸ், 3840Hz PWM டிம்மிங் ஃபிரிகொன்சி மற்றும் 240Hz டச் சாம்பிளிங் ரேட் கிடைக்கிறது. லேட்டஸ்ட் மாடலாக இருப்பதால், கலர்ஓஎஸ் 15 (ColorOS 15) கிடைக்கிறது.

ஆண்ட்ராய்டு 15 ஓஎஸ் (Android 15 OS) கொண்ட ஆக்டா கோர் மீடியாடெக் டைமன்சிட்டி 8450 4என்எம் சிப்செட் மற்றும் மாலி ஜி720 ஜிபியு கிராபிக்ஸ் கார்டு கிடைக்கிறது. இந்த ஓப்போ போனில் 6200mAh பேட்டரி கிடைக்கிறது. இந்த பெரிய பேட்டரிக்கு 80W சூப்பர்வூக் ஃபாஸ்ட் சார்ஜிங், 50W ஏர்வூக் வயர்லெஸ் ஃபாஸ்ட் சார்ஜிங் சப்போர்ட் கிடைக்கிறது.

More from GizBot

Best Mobiles in India

English summary
OPPO Reno14 Pro 5G With 12GB RAM Gets Discount Available Under Rs 47000 Check Flipkart Offer
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X