Home
Mobile

போடுறா ஆர்டரு.. மிட்-ரேஞ்ச்ல 6000mAh பேட்டரி.. SONY கேமரா.. AMOLED டிஸ்பிளே.. புது மின்ட் கிரீன்.. எந்த மாடல்?

இந்திய மார்கெட்டில் 6000mAh பேட்டரி, 80W ஃபாஸ்ட் சார்ஜிங், சோனி சென்சார் கேமரா, அமோலெட் டிஸ்பிளே மட்டுமல்லாமல், அண்டர் வாட்டர் ரெசிஸ்டன்ட் கொடுக்கும்படி IP69 ரேட்டிங் போன்ற பீச்சர்களுடன் வெளியான ஓப்போ ரெனோ14 5ஜி (OPPO Reno14 5G) போனின் புதிய கலர் வேரியண்ட் அறிமுகமாகி இருக்கிறது. இப்போது, விற்பனைக்கும் கிடைக்கிறது. இந்த புதிய வேரியண்ட்டின் முழு விவரங்களை இப்போது தெரிந்தது கொள்ளலாம்.

மிட்-ரேஞ்ச் விலையில் கிடைக்கும் ஸ்மார்ட்போன் பிரியர்களிடையே ஓப்போ ரெனோ14 5ஜி மிகப்பெரும் வரவேற்பு பெற்றது. பிரீமியம் டிசைன் மட்டுமல்லாமல், கார்னிங் கொரில்லா கிளாஸ் புரொடெக்சன், IP66 ரேட்டிங் + IP68 ரேட்டிங் மற்றும் IP69 ரேட்டிங் கொண்ட டஸ்ட் & வாட்டர் ரெசிஸ்டன்ட் போன்ற குவாலிட்டி பீச்சர்களிலும் பட்டையை கிளப்பியது.

போடுறா ஆர்டரு.. மிட்-ரேஞ்ச்ல 6000mAh பேட்டரி.. SONY கேமரா.. மாடல்?

பேர்ல் ஒயிட் (Pearl White) மற்றும் ஃபாரெஸ்ட் கிரீன் (Forest Green) ஆகிய 2 கலர்களில் மட்டுமே விற்பனைக்கு கிடைத்தது. இப்போது, பிரீமியம் லுக் மட்டும் கால்ம் பீல் கொடுக்கும்படியான மின்ட் கிரீன் (Mint Green) என்னும் புதிய கலர் வேரியண்ட் வெளியாகி இருக்கிறது. இதில் கலர் மட்டுமே அப்கிரேட் செய்யப்பட்டுள்ளது. மற்ற பீச்சர்கள் அப்படியே இருக்கின்றன.

ஓப்போ ரெனோ14 5ஜி அம்சங்கள் (OPPO Reno14 5G Specifications): இந்த ஓப்போ போனின் கேமரா பிரீமியம் மாடல்களுக்கு நிகராக இருக்கிறது. சோனி ஐஎம்எக்ஸ்882 சென்சார் கொண்ட 50 எம்பி மெயின் கேமரா வருகிறது. இதில் ஓஐஎஸ் டெக்னாலஜி பேக் செய்யப்பட்டுள்ளது. மேலும், ஓம்னிவிஷன் ஓவி08டி சென்சாருடன் 8 எம்பி அல்ட்ரா வைடு கேமரா கிடைக்கிறது.

இதுபோக 50 எம்பி பெரிஸ்கோப் டெலிபோட்டோ கேமராவையும் இந்த ஓப்போ கொடுக்கிறது. இதில் ஓஐஎஸ் டெக்னாலஜி மட்டுமல்லாமல், 3.5X பெரிஸ்கோப் ஜூமிங் கிடைக்கிறது. 4K வீடியோ ரெக்கார்டிங் கிடைக்கிறது. IP69 ரேட்டிங் கொடுப்பதால், அண்டர் வாட்டர் போட்டோகிராபிக்கு ஓரளவு மேட்ச் செய்யும்படி அவுட்புட் கொடுக்கும்.

இதேபோல 4K வீடியோ ரெக்கார்டிங்குடன் 50 எம்பி செல்பீ கேமரா கிடைக்கிறது. இதில் சாம்சங் ஜேஎன்5 சென்சார் உள்ளது. டிஸ்பிளேவில் வழக்கம்போல பிரீமியம் காட்டி இருக்கிறது. கார்னிங் கொரில்லா கிளாஸ் 7ஐ பாதுகாப்பு மற்றும் 3840Hz PWM டிம்மிங் ஃபிரிகொன்சி கொண்ட 6.59 இன்ச் (2760 x 1256 பிக்சல்கள்) அமோலெட் (AMOLED) டிஸ்பிளே கிடைக்கிறது.

இந்த டிஸ்பிளேவுக்கு 120Hz ரெஃப்ரெஷ் ரேட், 240Hz டச் சாம்பிளிங் ரேட் மற்றும் 1200 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் கிடைக்கிறது. கலர்ஓஎஸ் 15 (ColorOS 15) மற்றும் ஆண்ட்ராய்டு 15 ஓஎஸ் (Android 15 OS) கொண்ட ஆக்டா கோர் மீடியாடெக் டைமன்சிட்டி 8350 4என்எம் சிப்செட்டை பேக் செய்துள்ளது. அதோடு 12 ஜிபி ரேம் கிடைக்கிறது. ஆகவே, பர்ஃபாமென்ஸ் பிரீமியமாக இருக்கும்.

இந்த ஓப்போ ரெனோ14 5ஜி போனில் 6000mAh பேட்டரி கிடைக்கிறது. இந்த பேட்டரி கொடுக்கப்பட்டும், வெறும் 7.32 எம்எம் தடிமனில் ஸ்லிம் லுக் மற்றும் பாடி கொடுக்கிறது. இந்த பெரிய பேட்டரிக்கு 80W சூப்பர்வூக் (SuperVOOC) ஃபாஸ்ட் சார்ஜிங் கிடை்கிறது. இந்த பீச்சர்களை போலவே விலையிலும் எந்தவித மாற்றமும் கிடையாது.

ஆகவே, 8 ஜிபி ரேம் + 256 ஜிபி ஸ்டோரேஜ் கொண்ட மாடலின் விலை ரூ.37,999ஆகவும், 12 ஜிபி ரேம் + 256 ஜிபி ஸ்டோரேஜ் கொண்ட மாடலின் விலை ரூ.39,999ஆகவும் இருக்கிறது. மேலும், 12 ஜிபி ரேம் + 512 ஜிபி ஸ்டோரேஜ் கொண்ட மாடலின் விலை ரூ.42,999ஆக இருக்கிறது. அமேசான், பிளிப்கார்ட், ஓப்போ ஸ்டோர் ஆகியவற்றில் விற்பனைக்கு கிடைக்கிறது.

More from GizBot

Best Mobiles in India

English summary
OPPO Reno14 5G With Mint Green Colour Launched Available From Amazon Check Specifications Price
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X