Home
Mobile

இது முதல்ல வரட்டும்.. அப்புறம் வேற பாக்கலாம்.. OPPO ரெனோ 14 5ஜி உறுதி.. குஷியில் இந்திய பிரியர்கள்!

ஓப்போ இந்தியா (OPPO India) நிறுவனமானது, ஓப்போ ரெனோ14 சீரிஸ் 5ஜி (OPPO Reno14 Series 5G) மாடல்கள் இந்திய மார்கெட்டில் வெளியாக இருப்பதை உறுதி செய்துள்ளது. குளோபல் மார்கெட்டில் வெளியான அதே கலரில் இங்கும் கிடைக்க இருப்பதையும் அதிகாரப்பூர்வ போஸ்டர் மூலம் உறுதி செய்திருக்கிறது. இதனால், ஓப்போ பிரியர்கள் இப்போதே வெயிட்டிங் மோடுக்கு சென்றுவிட்டனர். ஏனென்றால், ஓப்போ ரெனோ 14சீரிஸ் 5ஜி மாடல்கள் மிட்-ரேஞ்ச் பட்ஜெட்டில் பிரீமியம் பீச்சர்களை பேக் செய்ய இருக்கிறது.

கடந்த மே மாதத்தில் ஓப்போ ரெனொ14 (OPPO Reno 14) மற்றும் ஓப்போ ரெனொ14 ப்ரோ (OPPO Reno 14 Pro) மாடல்கள் சீன மார்கெட்டில் வெளியாகின. இதையடுத்து குளோபல் வெளியீடு மற்றும் இந்திய வெளியீடு இருக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. அதன்படியே, ஜப்பான் நாட்டில் குளோபல் வேரியண்ட் வெளியாகிவிட்டது.

அதே நேரத்தில் மலேசியாவில் ஜூலை 1ஆம் தேதி வெளியாகும் என்பதும் அறிவிக்கப்பட்டுள்ளது. மலேசியாவில் வெளியாக இருப்பதால், இந்தியாவிலும் விரைவில் எதிர்பார்க்கலாம் என்று எண்ணி முடிப்பதற்குள், ஓப்போ இந்தியா நிறுவனமே, எக்ஸ் (X) தளத்தில் அதை உறுதி செய்துவிட்டது. இந்தியாவில் கிரீன் கலரில் விரைவில் ரெனோ14 சீரிஸ் வெளியாகும் என்று போஸ்டர் மூலம் தெரிவித்துள்ளது.

ஆகவே, ஜூலை மாத தொடக்கத்தில் இந்தியாவில் எதிர்பார்க்கலாம். ஓப்போ ரெனொ14 போனானது, ஜப்பானில் வெளியாகிவிட்டதால், இது குளோபல் வேரியண்ட்டாக உறுதி செய்யப்பட்டுவிட்டது. ஆகவே, இந்த பீச்சர்களுடனேயே இந்தியாவிலும் வெளியாக அதிக வாய்ப்புகள் உள்ளது. இந்த குளோபல் வேரியண்ட்டின் விலை மற்றும் பீச்சர்களை இப்போது பார்க்கலாம்.

இது முதல்ல வரட்டும்.. அப்புறம் வேற பாக்கலாம்.. OPPO ரெனோ 14 5ஜி உறுதி!

ஓப்போ ரெனோ 14 5ஜி அம்சங்கள் (OPPO Reno 14 5G Specifications): இந்த குளோபல் வேரியண்ட்டில் கலர்ஓஎஸ் 15 (ColorOS 15) பேஸ்டு ஆண்ட்ராய்டு 15 ஓஎஸ் (Android 15 OS) வருகிறது. அதேபோல ஆக்டா கோர் மீடியாடெக் டைமன்சிட்டி 8350 (Octa Core MediaTek Dimensity 8350) சிப்செட் மற்றும் ஆர்ம் ஜி615 எம்சி6 (ARM G615 MC6) கிராபிக்ஸ் கார்டு கிடைக்கிறது.

கொரில்லா கிளாஸ் 7ஐ (Gorilla Glass 7i) புரொடெக்சன் கொண்ட 6.6 இன்ச் (2760 x 1256 பிக்சல்கள்) ஃபுல்எச்டிபிளஸ் (FHD+) ரெசொலூஷன் கொண்ட அமோலெட் (AMOLED) டிஸ்பிளே கிடைக்கிறது. இந்த டிஸ்பிளேவில் 120Hz ரெஃப்ரெஷ் ரேட், 1200 நிட்ஸ் பீக் பிரைட்னஸ், 240Hz டச் சாம்பிளிங் ரேட் மற்றும் 460 பிபிஐ பிக்சல் டென்சிட்டி வருகிறது.

50 எம்பி மெயின் கேமரா (OIS டெக்னாலஜி) + 8 எம்பி அல்ட்ரா வைடு கேமரா + 50 எம்பி டெலிபோட்டோ (OIS டெக்னாலஜி) கொண்ட டிரிபிள் ரியர் கேமரா செட்டப் கிடைக்கிறது. 50 எம்பி செல்பீ ஷூட்டர் (ஆட்டோ போகஸ்) கிடைக்கிறது. இந்த கேமராவிலும் அண்டர் வாட்டர் போட்டோகிராபி, 4K வீடியோ ரெக்கார்டிங் போன்ற பீச்சர்கள் கிடைக்கின்றன.

இது முதல்ல வரட்டும்.. அப்புறம் வேற பாக்கலாம்.. OPPO ரெனோ 14 5ஜி உறுதி!

அதேபோல 3.5X ஆப்டிகல் ஜூமிங் மற்றும் 18X டிஜிட்டல் ஜூமிங் சப்போர்ட் கிடைக்கிறது. செல்பீ ஷூட்டரில் 2X டிஜிட்டல் ஜூமிங் வருகிறது. இந்த குளோபல் வேரியண்ட்டில் 6000mAh பேட்டரி மற்றும் 80W சூப்பர்வூக் சார்ஜிங் கிடைக்கிறது. 12 ஜிபி ரேம் + 256 மெமரி கிடைக்கிறது. 12 ஜிபிக்கான விர்ச்சுவல் ரேம் உள்ளது. இந்த போனின் விலை விவரங்கள் வெளியாகவில்லை.

ஜப்பானில் ஜூலை 17ஆம் தேதி விற்பனை தொடங்குகிறது. ஆனால், ஜூலை 1ஆம் தேதி மலேசியாவில் வெளியாக இருக்கிறது. ஆகவே, அப்போது விலை தெரிந்துவிடும். இதுவொரு மிட்-ரேஞ்ச் மாடலாக இருப்பதால், ரூ.35,000 பட்ஜெட்டில் வெளியாகும் என்பதில் சந்தேகமில்லை. அதேபோல ஓப்போ ரெனோ14 ப்ரோ மாடலானது, ரூ.40,000 பட்ஜெட்டில் கிடைக்கலாம்.

Best Mobiles in India

English summary
OPPO Reno14 5G With Green Variant India Launch Confirmed Expected Specifications Price
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X