தூக்குங்கடா அந்த தங்கத்த.. ரூ.3,999 ஆஃபருக்கு Diwali எடிஷன்.. 6000mAh பேட்டரி.. SONY கேமரா.. 80W சார்ஜிங்!
ஓப்போ நிறுவனத்தின் ரெனோ14 5ஜி தீபாவளி எடிஷன் (Reno14 5G Diwali Edition) இந்தியாவில் களமிறங்கி இருக்கிறது. தீபாவளி பண்டிகைக்காக பிரத்யேக டிசைனுடன் வந்துள்ள இந்த ஸ்மார்ட்போனுக்கு ரூ.3,999 உடனடி டிஸ்கவுண்ட் கிடைக்கிறது. சோனி சென்சார் கேமரா, 6000mAh பேட்டரி, 80W ஃபாஸ்ட் சார்ஜிங் போன்ற பீச்சர்களை கொடுக்கிறது. இந்த ரெனோ14 5ஜி தீபாவளி எடிஷனில் முழு பீச்சர்கள், விலை மற்றும் விற்பனை விவரங்களை இப்போது தெரிந்து கொள்ளலாம்.
இந்தியாவில் முதல்முறையாக ஹீட்-சென்சிடிவ் கலர் சேஞ்சிங் டெக்னாலஜி கொண்ட பேக் பேனலுடன் இந்த ஓப்போ ரெனோ14 5ஜி தீபாவளி எடிஷன் கிடைக்கிறது. அதாவது, டெம்ப்ரேச்சருக்கு ஏற்ப பேக் பேனலில் குளோவ் கொடுக்கும் டெக்னாலஜியாகும். அதாவது, 28 டிகிரி செல்சியஸ் டெப்ம்ரேச்சரில் பிளாக் கலரில் இருக்கும். 35 டிகிரி செல்சியஸ் டெப்ம்ரேச்சரில் கோல்டு கலரில் மாறிவிடும்.

ஏற்கனவே, பேர்ல் ஒயிட் (Pearl White), பாரஸ்ட் கிரீன் (Forest Green) மற்றும் மின்ட் கிரீன் (Mint Green) ஆகிய கலர்களில் கிடைக்கிறது. இப்போது, தீபாவளி கோல்டு (Diwali Gold) என்னும் கலரில் விற்பனைக்கு வந்துள்ளது. இந்த கலர் மற்றும் டிசைனை தவிர மற்ற பீச்சர்கள் ஒரே மாதிரியாகவே இருக்கின்றன. ஆகவே, அதை பார்த்துவிட்டு, விலை விவரங்களை தெரிந்து கொள்ளலாம்.
ஓப்போ ரெனோ14 தீபாவளி எடிஷன் அம்சங்கள் (OPPO Reno14 5G Diwali Edition Specifications): இந்த ஓப்போவில் 1200 நிட்ஸ் பீக் பிரைட்ன்ஸ் கொண்ட 6.59 இன்ச் (2760 x 1256 பிக்சல்கள்) அமோலெட் டிஸ்பிளே கிடைக்கிறது. இந்த பிரீமியம் டிஸ்பிளேவுக்கு கார்னிங் கொரில்லா கிளாஸ் 7ஐ (Corning Gorilla Glass 7i) புரொடெக்சன் மற்றும் 120Hz ரெஃப்ரெஷ் ரேட் கிடைக்கிறது.
மேலும், 1.5K ரெசொலூஷன், 240Hz டச் சாம்பிளிங் ரேட் மற்றும் 3840Hz PWM டிம்மிங் கிடைக்கிறது. கலர்ஓஎஸ் 15 (ColorOS 15) கொண்ட ஆக்டா கோர் மீடியாடெக் டைமன்சிட்டி 8350 4என்எம் (Octa Core MediaTek Dimensity 8350 4nm) சிப்செட் கிடைக்கிறது. ஆண்ட்ராய்டு 15 ஓஎஸ் (Android 15 OS) மூலம் லேட்டஸ்ட் யுஐ கிடைக்கிறது. இதில் ஒரேவொரு வேரியண்ட் மட்டுமே கிடைக்கிறது.

ஆகவே, 8 ஜிபி ரேம் + 256 ஜிபி மெமரி கொண்ட வேரியண்ட்டை ஆர்டர் செய்து கொள்ளலாம். சோனி சென்சாருடன் 50 எம்பி மெயின் கேமரா மற்றும் ஓம்னிவிஷன் சென்சாருடன் 8 எம்பி அல்ட்ரா வைடு கேமரா கிடைக்கிறது. மேலும், சாம்சங் சென்சாருடன் 50 எம்பி டெலிபோட்டோ கேமரா கிடைக்கிறது. 50 எம்பி செல்பீ கேமராவிலும் சாம்சங் சென்சார் உள்ளது.
ஆப்டிகல் இமேஜ் ஸ்டெபிலைசேஷன் டெக்னாலஜி மற்றும் அண்டர் வாட்டர் போட்டோ கிராபி சப்போர்ட் கிடைக்கிறது. கொரில்லா கிளாஸ் மட்டுமல்லாமல், IP66 ரேட்டிங் + IP68 ரேட்டிங் + IP69 ரேட்டிங் கொண்ட டஸ்ட் & வாட்டர் ரெசிஸ்டன்ட் கிடைக்கிறது. 80W ஃபாஸ்ட் சார்ஜிங் மற்றும் 6000mAh பேட்டரி கொண்ட பேக்கப் சிஸ்டம் கொடுக்கப்படுகிறது.
இந்த ஓப்போ ரெனோ14 தீபாவளி எடிஷனின் 8 ஜிபி ரேம் + 256 ஜிபி மெமரி கொண்ட வேரியண்ட்டின் விலை ரூ.39,999ஆக இருக்கிறது. இருப்பினும், ரூ.3,999 உடனடி டிஸ்கவுண்ட் போக ஆர்டர் செய்ய கிடைக்கிறது. அதேபோல 6 மாதங்களுக்கு நோ-காஸ்ட் ஈஎம்ஐ சலுகை கிடைக்கிறது. மேலும், ரூ.3,000 எக்ஸ்சேஞ்ச் போனஸ் கிடைக்கிறது.
அமேசான் (Amazon), பிளிப்கார்ட் (Flipkart) மற்றும் ஓப்போ ஆகிய தளங்களில் ஆர்டர் செய்து கொள்ளலாம். இந்த தீபாவளி எடிஷனின் பேக்கிங்கும் பெஸ்டிவல் மோடில் கிடைக்கும். குளோவிங் டெக்னாலஜி கொண்ட மாடலாக இருப்பது மட்டுமல்லாமல், தீபாவளிக்கு ஏற்ப டிசைனில் கிடைப்பதால், பட்டையை கிளப்பும்படி வரவேற்பு இருக்கிறது.


Click it and Unblock the Notifications








