யாரு சாமி அவன்.. 6000mAh பேட்டரி.. 80W சார்ஜிங்.. 120X ஜூமிங்.. 50MP டெலிபோட்டோ.. 12GB ரேம்.. எந்த மாடல்?
கார்னிங் கொரில்லா கிளாஸ் புரொடெக்சன் கொண்ட அமோலெட் டிஸ்பிளே, 120X சூப்பர் டிஜிட்டல் ஜூம் கொண்ட 50 எம்பி டெலிபோட்டோ கேமரா, IP68 & IP69 ரேட்டிங் கொண்ட வாட்டர் ரெசிஸ்டன்ட், 80W ஃபாஸ்ட் சார்ஜிங் கொண்ட 6000mAh பேட்டரி போன்ற பீச்சர்களுடன் ஓப்போ ரெனோ14 5ஜி (OPPO Reno14 5G) போன் வெளியாகி இருக்கிறது.
ஓப்போ ரெனோ14 5ஜி அம்சங்கள் (OPPO Reno14 5G Specifications): இந்த ஓப்போ போனில் 6.59 இன்ச் (1256 x 2760 பிக்சல்கள்) அமோலெட் (AMOLED) டிஸ்பிளே கிடைக்கிறது. இந்த டிஸ்பிளேவுக்கு கார்னிங் கொரில்லா கிளாஸ் 7ஐ (Corning Gorilla Glass 7i) புரொடெக்சன், 460 பிபிஐ பிக்சல் டென்சிட்டி, 240Hz டச் சாம்பிளிங் ரேட், 120Hz ரெஃப்ரெஷ் ரேட் கிடைக்கிறது.

மேலும், 600 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் மற்றும் 1200 நிட்ஸ் எச்பிஎம் மோட் கிடைக்கிறது. இந்த போனில் மீடியாடெக் டைமன்சிட்டி 8350 (MediaTek Dimensity 8350) சிப்செட் கிடைக்கிறது. ஆர்ம் ஜி615 ஜிபியு (ARM G615) வருகிறது. கலர்ஓஎஸ் 15.0 (ColorOS 15.0) பேஸ்டு ஆண்ட்ராய்டு 15 ஓஎஸ் (Android 15 OS) கிடைக்கிறது. 8 ஜிபி ரேம் + 256 ஜிபி மெமரி உள்ளது.
மேலும், 12 ஜிபி ரேம் + 256 ஜிபி மெமரி மற்றும் 12 ஜிபி ரேம் + 512 ஜிபி மெமரி ஆகிய பிரீமியம் வேரியண்ட்கள் கிடைக்க இருக்கின்றன. இந்த ஓப்போ ரெனோ14 5ஜி போனில் 50 எம்பி மெயின் கேமரா + 8 எம்பி அல்ட்ரா வைடு கேமரா + 50 எம்பி டெலிபோட்டோ கேமரா கிடைக்கிறது. அதேபோல 50 எம்பி செல்பீ ஷூட்டர் கிடைக்கிறது.
மெயின் மற்றும் டெலிபோட்டோ கேமராவில் ஆப்டிகல் இமேஜ் ஸ்டெபிலைசேஷன் டெக்னாலஜி மற்றும் ஆட்டோ போகஸ் கிடைக்கிறது. செல்பீ ஷூட்டரிலும் ஆட்டோ போகஸ் உள்ளது. 4K வீடியோ ரெக்கார்டிங், ஏஐ டெலிபோட்டோ ஜூம் (AI Telephoto Zoom) கிடைக்கிறது. 120X சூப்பர் டிஜிட்டல் ஜூம் (Super Digital Zoom) கிடைக்கிறது. 3.5X சென்சார் ஜூம் உள்ளது.

ஏஐ பீச்சர்களை பார்க்கையில், ஏஐ எடிட்டர் 2.0 (AI Editor 2.0), ஏஐ ரீகம்போஸ் (AI Recompose), ஏஐ பர்ஃபெக்ட் ஷாட் (AI Perfect Shot), ஏஐ ஸ்டூடியோ (AI Studio) போன்ற பீச்சர்கள் கிடைக்கின்றன. பிரத்யேகமாக ஏஐ ஃபிளாஷ் லைவ்போட்டோ (AI Flash Livephoto), ஏஐ லைவ் போட்டோ எக்ஸ்போர்ட் (AI LivePhoto Export) போன்ற பீச்சர்கல் கிடைக்கின்றன.
ஏரோஸ்போஸ் கிரேட் அலுமினியம் ஃபிரேம் உள்ளது. IP68 ரேட்டிங் & IP69 ரேட்டிங் கொண்ட டஸ்ட் மற்றும் வாட்டர் ரெசிஸ்டன்ட் கிடைக்கிறது. 6000mAh பேட்டரி மற்றும் 80W சூப்பர்வூக் ஃபிளாஷ் சார்ஜிங் கிடைக்கிறது. ஹைப்பன் என்ஜின் மற்றும் ஏஐ ஹைப்பர் பூஸ்ட் 2.0 (AI HyperBoost 2.0) உள்ளது. இப்போது, விலை விவரங்களை தெரிந்து கொள்ளலாம்.
இந்த ஓப்போ ரெனோ14 போனின் 8 ஜிபி ரேம் + 256 ஜிபி மெமரி வேரியண்ட்டின் விலை ரூ.37,999ஆக இருக்கிறது. 12 ஜிபி ரேம் + 256 ஜிபி மெமரி வேரியண்ட்டின் விலை ரூ.39,999ஆகவும், 12 ஜிபி ரேம் + 512 ஜிபி மெமரி வேரியண்ட்டின் விலை ரூ.42,999ஆகவும் இருக்கிறது. ஜூலை 8ஆம் தேதி முதல் விற்பனைக்கு கிடைக்க இருக்கிறது.
பிளிப்கார்ட் (Flipkart), அமேசான் (Amazon) மற்றும் ஓப்போ ஸ்டோர் (OPPO Store) ஆகிய தளங்களில் ஆர்டர் செய்து கொள்ளலாம். 10 சதவீத கேஷ்பேக் போக விற்பனைக்கு கிடைக்க இருக்கிறது. 10 மாதங்களு 0 சதவீத டவுண்பேமெண்ட் வருகிறது. ஓபல் ஒயிட் (Opal White) மற்றும் லூமினஸ் கிரீன் (Luminous Green) கலர்களில் வர இருக்கிறது.


Click it and Unblock the Notifications








