Home
Mobile

OPPO விஸ்வரூபம்.. SONY கேமரா.. 12GB ரேம்.. AMOLED டிஸ்பிளே.. 5600mAh பேட்டரி.. 80W சார்ஜிங்.. எந்த மாடல்?

இந்திய ஓப்போ பிரியர்களை மரண வெயிட்டிங் மோடில் போடும்படியான பீச்சர்களுடன் ஓப்போ ரெனோ13 (OPPO Reno13) களமிறங்கி இருக்கிறது. 1.5K ரெசொலூஷன் கொண்ட அமோலெட் டிஸ்பிளே, சோனி ஐஎம்எக்ஸ் சென்சார் கொண்ட 50 எம்பி கேமரா, சாம்சங் சென்சார் கொண்ட 50 எம்பி செல்பீ ஷூட்டர், 80W சூப்பர்வூக் சார்ஜிங் மற்றும் 5600mAh பேட்டரி போன்ற பீச்சர்களுடன் வெளியாகி இருக்கிறது. இந்த ஓப்போ ரெனோ13 போனின் விற்பனை தேதி, முழு பீச்சர்கள் மற்றும் விலை விவரங்கள் இதோ.

சீன மார்கெட்டில் ஓப்போ ரெனோ13 சீரிஸ் வெளியாகி இருக்கிறது. இந்தியாவில் அடுத்த சில வாரங்களில் வெளியாக இருக்கிறது. இதில் ஓப்போ ரெனோ13 மாடலில் கிடைக்கும் பீச்சர்கள் இப்போதே இந்திய ஸ்மார்ட்போன் பிரியர்களை மரண வெயிட்டிங் மோடில் போட்டு வைத்துள்ளது. காம்பாக்ட் டிசைன், கலர்ஓஎஸ் 15, டூயல் கோர் சிப்செட் கிடைக்கிறது.

OPPO விஸ்வரூபம்.. SONY கேமரா.. 12GB ரேம்.. AMOLED டிஸ்பிளே.. மாடல்?

ஓப்போ ரெனோ13 அம்சங்கள் (OPPO Reno13 Specifications): இந்த ஓப்போவில் கலர்ஓஎஸ் 15 (ColorOS 15) மற்றும் ஆண்ட்ராய்டு 14 ஓஎஸ் (Android 14 OS) கொண்ட ஆக்டா கோர் டைமன்சிட்டி 8350 4என்எம் (Octa Core Dimensity 8350 4nm) சிப்செட் வருகிறது. ஆகவே, பர்ஃபாமென்ஸ் பிரீமியமாக இருக்கும். கலர்ஓஎஸ் 15 வருவதால், கூடுதலாக ஏஐ பீச்சர்கள் வருகின்றன.

ஆகவே, ஸ்மார்ட் டாக்குமென்ட்ஸ் (Smart Documents), ஸ்மார்ட் நோட்ஸ் (Smart Notes) மற்றும் ஏஐ ரைட்டிங் (AI Writing) சப்போர்ட் இருக்கிறது. மேலும், ஒன் சர்க்கிள் கொஸ்டின் (One Circle Question) மற்றும் ஒன்-டச் டிரான்ஸ்பர் (One-touch Transfer) போன்ற பீச்சர்கள் இருக்கின்றன. 1.5K ரெசொலூஷன் கொண்ட 6.59 இன்ச் அமோலெட் (AMOLED) டிஸ்பிளே வருகிறது.

கேமிங் பிரியர்களுக்காக பிளாட் டிசைனில் எட்ஜ் கர்வ்ட் கொடுக்கிறது. அதேபோல 120Hz ரெஃப்ரெஷ் ரேட் மற்றும் 240Hz டச் சாம்பிளிங் கிடைக்கிறது. மேலும், 1200 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் மற்றும் 3840Hz PWM டிம்மிங் ஃபிரிகொன்சி கிடைக்கிறது. மெயின், வைடு மற்றும் செல்பீ ஷூட்டர் என்று அனைத்திலும் பிரீமியம் சென்சார்கள் பேக் செய்யப்பட்டுள்ளன.

OPPO விஸ்வரூபம்.. SONY கேமரா.. 12GB ரேம்.. AMOLED டிஸ்பிளே.. மாடல்?

ஆகவே, சோனி ஐஎம்எக்ஸ்882 (Sony IMX882) சென்சாருடன் 50 எம்பி மெயின் கேமரா + சோனி ஐஎம்எக்ஸ்355 (Sony IMX355) சென்சாருடன் 50 எம்பி அல்ட்ரா வைடு கேமரா கிடைக்கிறது. இந்த கேமராவில் 4K வீடியோ ஷூட் மற்றும் ஆப்டிகல் இமேஜ் ஸ்டெபிலைசேஷன் (OIS) டெக்னாலஜி கிடைக்கிறது. 50 எம்பி செல்பீ ஷூட்டரில் சாம்சங் ஜேஎன்5 சென்சார் வருகிறது.

இந்த ஓப்போ போனில் IP69 மற்றும் IP68 ரெசிஸ்டன்ட் உள்ளது. மேலும், IP66 ரெசிஸ்டன்ட் கிடைக்கிறது. ஆகவே, வாட்டர் ப்ரூஃப், டஸ்ட் ப்ரூஃப் மற்றும் ஹாட் வாட்டர் ப்ரூஃப் கிடைக்கிறது. இதன் மூலம் அண்டர் வாட்டர் கேமரா சப்போர்ட் வருகிறது. ஏஐ கேமரா பீச்சர்களை பார்க்கையில் ஏஐ அல்ட்ரா எச்டி பிக்சல் (AI Ultra HD Pixels), ஏஐ ஆன்டி-ஸ்மீர் (AI Anti-smear) போன்றவை வருகின்றன.

மேலும், ஏஐ டீ-கிளார் (AI De-glare) பீச்சரும் கிடைக்கிறது. ஆகவே, இந்திய கேமரா பிரியர்களுக்கு பக்கா மாடலாக இருக்கிறது. இந்த ஓப்போ போனில் 80W ஃபாஸ்ட் சார்ஜிங் மற்றும் 5600mAh பேட்டரி வருகிறது. ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள் (Stereo Speakers), டைப்-சி ஆடியோ (Type-C Audio) கிடைக்கிறது. பட்டர்ஃபிளை பர்ப்பிள் (Butterfly Purple) கலர் உள்ளது.

மேலும், கேலக்ஸி ப்ளூ (Galaxy Blue). மிட்நைட் பிளாக் (Midnight Black) கலரும் இருக்கிறது. இந்த ஓப்போ ரெனோ13 போனின் 12 ஜிபி ரேம் + 256 ஜிபி மெமரி மாடலின் வேரியண்ட்டின் விலை ரூ.31,400ஆக இருக்கிறது. 12 ஜிபி ரேம் + 512 ஜிபி மெமரி வேரியண்ட்டின் விலை ரூ. 34,880ஆக இருக்கிறது. சீனாவில் வரும் நவம்பர் 29ஆம் தேதி விற்பனைக்கு வருகிறது.

More from GizBot

Best Mobiles in India

English summary
OPPO Reno13 With 50MP Camera 12GB RAM Sale From November 29 Check Specifications Price
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X