உரிச்சு வெச்சருக்கு.. 50MP பெரிஸ்கோப்.. SONY சென்சார்.. 16GB ரேம்.. 5800mAh பேட்டரி.. 80W சார்ஜ்.. எந்த மாடல்?
ஓப்போ பிரியர்களிடையே மிகப்பெரும் எதிர்பார்ப்பை கிளப்பிவிட்ட ஓப்போ ரெனோ13 சீரிஸ் (OPPO Reno13 Series) வெளியாகிவிட்டது. ஐபோன்களை போன்ற மெட்டாலிக் டிசைனில் குவாலிட்டியான பாடி மற்றும் அல்ட்ரா பிரீமியமாக பீச்சர்களை கொடுக்கிறது. இதில் கேமரா, சிப்செட், பேட்டரி, ரேம் போன்ற அனைத்து பீச்சர்களிலும் பின்னிப்பெடல் எடுத்துள்ள ஓப்போ ரெனோ13 ப்ரோ (OPPO Reno13 Pro) இந்திய பிரியர்களையும் மூக்கில் விரல் வைக்க செய்துள்ளது. இந்த ஓப்போ ப்ரோ மாடலின் பீச்சர்கள், விலை விவரங்களை இப்போது தெரிந்து கொள்ளலாம்.
ஐபோன்களில் கிடைக்கும் பில்ட் குவாலிட்டி மற்றும் டிசைனை உரித்து வைத்ததை போல ஓப்போ ரெனோ13 ப்ரோ இருக்கிறது. மெட்டல் ஃபிரேம், IP66 மற்றும் IP68 ரெசிஸ்டன்ட் கிடைக்கிறது. மேலும், IP69 ரெசிஸ்டன்ட் இருக்கிறது. ஆகவே, ஐபோன்களுக்கு நிகரான வாட்டர் & டஸ்ட் ரெசிஸ்டன்ட் எதிர்பார்க்கலாம். அண்டர் வாட்டர் கேமரா ஷூட் கிடைக்கிறது.

ஓப்போ ரெனோ13 ப்ரோ அம்சங்கள் (OPPO Reno13 Pro Specifications): ஆப்டிகல் இன்-டிஸ்பிளே ஃபிங்கர்பிரிண்ட் சென்சாருடன் (Optical In-display Fingerprint Sensor) 6.83 இன்ச் (2800 x 1272 பிக்சல்கள்) அமோலெட் (AMOLED) டிஸ்பிளே வருகிறது. இந்த டிஸ்பிளேவில் 1.5K ரெசொலூஷன், 1200 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் மற்றும் 3840Hz PWM டிம்மிங் ஃபிரிகொன்சி கிடைக்கிறது.
120Hz ரெஃப்ரெஷ் ரேட் மற்றும் 240Hz டச் சாம்பிளிங் ரேட் போன்ற வழக்கமான டிஸ்பிளே பீச்சர்கள் கிடைக்கின்றன. கேமராவில் அல்ட்ரா பிரீமியம் சென்சார்கள் மற்றும் பீச்சர்கள் கிடைக்கின்றன. 50 எம்பி மெயின் கேமரா + 50 எம்பி பெரிஸ்கோப் கேமரா + 8 எம்பி அல்ட்ரா வைடு ஆங்கிள் கேமரா கிடைக்கிறது. மெயினில் சோனி ஐஎம்எக்ஸ்890 (Sony IMX890) சென்சார் உள்ளது.
அதேபோல ஆப்டிகல் இமேஜ் ஸ்டெபிலைசேஷன் டெக்னாலஜி மற்றும் 4K வீடியோ ஷூட் சப்போர்ட் கிடைக்கிறது. பெரிஸ்கோப் கேமராவில் சாம்சங் ஜேஎன்5 (Samsung JN5) சென்சாரும் அல்ட்ரா வைடு கேமராவில் சோனி ஐஎம்எக்ஸ்355 (Sony IMX355) சென்சாரும் பேக் செய்யப்பட்டுள்ளது. அல்ட்ரா வைடு கேமராவில் வரும் சென்சாருடன் 50 எம்பி செல்பீ ஷூட்டர் இருக்கிறது.

இந்த ஓப்போ ரெனோ13 ப்ரோ போனில் 12 ஜிபி ரேம் + 256 ஜிபி மெமரி, 12 ஜிபி ரேம் + 512 ஜிபி மெமரி மற்றும் 16 ஜிபி ரேம் + 512 ஜிபி மெமரி கொண்ட வேரியண்ட்கள் வெளியாகி இருக்கிறது. இந்த மூன்று வேரியண்ட்களுக்கு அடுத்து டாப்-வேரியண்ட்டாக 16 ஜிபி ரேம் + 1 டிபி மெமரி கொண்ட வேரியண்ட் சீன மார்கெட்டில் விற்பனைக்கு கிடைக்க இருக்கிறது.
ஆப்டிகல் சென்சாருக்கு அடுத்ததாத இன்பிராரெட் சென்சார் (Infrared Sensor) கிடைக்கிறது. இந்த ஓப்போவில் 80W சூப்பர்வூக் (SuperVOOC) ஃபாஸ்ட் சார்ஜிங் மற்றும் 50W ஏர்வூக் (AIRVOOC) வயர்லெஸ் சார்ஜிங் கொண்ட 5800mAh பேட்டரி வருகிறது. டைப்-சி சார்ஜிங் (Type-C Charging) மற்றும் ஆடியோ ஜாக் (Audia Jack) பேக் செய்துள்ளது. ஸ்டார்லிட் ஃபிங்க் (Starlight Pink) கலர் உள்ளது.
மேலும், பர்பிள் (Purple) மற்றும் பிளாக் (Black) கலர்களும் இருக்கிறது. இந்த ஓப்போவின் 12ஜிபி + 256ஜிபி மாடலின் விலை ரூ.39,535ஆகவும், 12ஜிபி + 512ஜிபி மாடலின் விலை ரூ.43,035ஆகவும், 16ஜிபி + 512ஜிபி மாடலின் விலை ரூ.46,525ஆகவும் இருக்கிறது. 16ஜிபி + 1டிபி மாடலின் விலை ரூ.52,345ஆக இருக்கிறது. சீனாவில் நவம்பர் 29ஆம் தேதியில் விற்பனை தொடங்குகிறது.


Click it and Unblock the Notifications








