ஜன.11-க்கு குறிச்சாச்சு.. 3D டிஸ்பிளே.. SONY கேமரா.. 5800mAh பேட்டரி.. 80W சார்ஜிங்.. OPPO பிரீமியம் மாடல்!
ஏஐ லைவ் போட்டோ, ஏஐ கிளாரிட்டி போன்ற ஏஐ பீச்சர்களுடன் ஓப்போ ரெனோ13 ப்ரோ 5ஜி (OPPO Reno13 Pro 5G) இந்திய மார்கெட்டில் களமிறங்கி இருக்கிறது. 3டி கர்வ்ட் அமோலெட் டிஸ்பிளே, டைமன்சிட்டி 8350 சிப்செட், சோனி சென்சார் கேமரா, 12 ஜிபி ரேம், 5800mAh பேட்டரி, 80W சூப்பர்வூக் ஃபாஸ்ட் சார்ஜிங் போன்ற மற்ற பீச்சர்களும் பின்னிப்பெடல் எடுக்கும்படி இருக்கின்றன. இந்த ஓப்போ ரெனோ13 ப்ரோ 5ஜி போனின் விற்பனை தேதி, விலை மற்றும் பீச்சர்களை இப்போது தெரிந்து கொள்ளலாம்.
இந்திய கேமரா பிரியர்களுக்கு ஏற்ப போர்ட்ராய்டு மற்றும் ஏஐ பீச்சர்களை பேக் செய்துள்ளது. ஏஐ லைவ் போட்டோ பீச்சர் மூலம் 1.5 செகண்ட் 4K வீடியோவை கொடுக்கிறது. இதில் ஃபிரேம் பை ஃபிரேம் போட்டோக்களை பார்த்து கொள்ளலாம். கிளாரிட்டியான போட்டோக்களை அவுட்புட் எடுக்க ஏஐ கிளிரிட்டி சூட் சப்போர்ட் கிடைக்கிறது. 10X ஜூமிங் போட்டோக்களுக்கு ஏஐ கிளாரிட்டி என்ஹான்ஸ்சர் வருகிறது.

ஏஐ போர்ட்ராய்டு பீச்சர் மூலம் 10 பேஸ் ஃபிரேம்களை பெறலாம். இதில் பெஸ்ட் ஆப்ஷனை தேர்ந்தெடுக்கலாம். மேலும், ஏஐ நைட் போர்ட்ராய்டு, கிளியர் பேஸ் மற்றும் பெஸ்ட் பேஸ் போன்ற கேமரா பீச்சர்களை கொடுக்கிறது. இதுபோக குவாலிட்டியில் அல்ட்ரா பிரீமியம் காட்டி இருக்கிறது. IP66 டஸ்ட் ரெசிஸ்டன், IP68 வாட்டர் ரெசிஸ்டன்ட் மற்றும் IP69 ஹை-டெம்ப்ரேச்சர், ஹை-பிரஷர் ரெசிஸ்டன்ட் கொடுக்கிறது.
இதுபோக 3 ஓஎஸ் அப்டேட்களையும், 4 வருடங்களுக்கான செக்யூரிட்டி அப்டேட்களையும் கொடுக்கிறது. இப்படி கேமரா, குவாலிட்டி மற்றும் ஓஸ் அப்டேட்களில் பட்டையை கிளப்பி இருக்கிறது. இப்போது, டிஸ்பிளே, சிப்செட், பேட்டரி போன்ற மற்ற பீச்சர்களை தெரிந்து கொள்ளலாம். மிஸ்ட் லாவெண்டர் (Mist Lavender), கிராஃபைட் கிரே (Graphite Grey) ஆகிய கலர்களில் ஆர்டருக்கு கிடைக்க இருக்கிறது.
ஓப்போ ரெனோ13 ப்ரோ 5ஜி அம்சங்கள் (OPPO Reno13 Pro 5G Specifications): இந்த ரெனோ13 ப்ரோவில் கலர்ஓஎஸ் 15.0 (ColorOS 15.0) மற்றும் ஆண்ட்ராய்டு 15 ஓஎஸ் (Android 15 OS) கிடைக்கிறது. 12 ஜிபி ரேம் + 256 ஜிபி மெமரி மற்றும் 12 ஜிபி ரேம் + 512 ஜிபி மெமரி கொண்ட 2 வேரியண்ட்களில் கிடைக்க இருக்கிறது. கூடுதல் ஸ்டோரேஜ் கிடைக்க மைக்ரோ எஸ்டி கார்டு சிலாட் எதிர்பார்க்க முடியாது.

சாம்சங் ஜேஎன்5 (Samsung JN5) சென்சாருடன் 50 எம்பி பெரிஸ்கோப் கேமரா கிடைக்கிறது. அதேபோல சோனி ஐஎம்எக்ஸ்890 (Sony IMX890) சென்சாருடன் 50 எம்பி மெயின் கேமராவும், ஓவி08டி10 (OV08D10) சென்சாருடன் 8 எம்பி அல்ட்ரா வைடு கேமராவும் கிடைக்கிறது. இதுபோக 50 எம்பி செல்பீ ஷூட்டரிலும் சாம்சங் ஜேஎன்5 (Samsung JN5) சென்சார் கிடைக்கிறது. ஆகவே, பீச்சர்களுடன் சென்சார்களும் பிரீமியமாக இருக்கின்றன.
மேலும், ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள் (Stereo Speakers), இன்பிராரெட் சென்சார் (Infrared Sensor), இன்-டிஸ்பிளே ஃபிங்கர்பிரிண்ட் சென்சார் (In-display Fingerprint Sensor) மற்றும் டைப்-சி ஆடியோ (Type-C Audio) கிடைக்கிறது. இந்த ஓப்போ ரெனோ13 ப்ரோ 5ஜி போனில் 5800mAh பேட்டரி மற்றும் 80W சூப்பர்வூக் சார்ஜிங் கிடைக்கிறது. இருப்பினும், 7.55 மிமீ தடிமனில் அல்ட்ரா ஸ்லிம் லுக் கொடுக்கிறது. 195 கிராம் எடை உள்ளது.
இந்த ஓப்போ ரெனோ13 ப்ரோ 5ஜி போனின் 12 ஜிபி ரேம் + 256 ஜிபி மெமரி வேரியண்ட்டின் விலை ரூ.49,999ஆக இருக்கிறது. 12 ஜிபி ரேம் + 512 ஜிபி மெமரி வேரியண்ட்டின் விலை ரூ.54,999ஆக இருக்கிறது. ஜனவரி 11ஆம் தேதி விற்பனைக்கு வர இருக்கிறது. பிளிப்கார்ட் (Flipkart) தளத்தில் ஆர்டர் செய்யலாம். 256 ஜிபிக்கு ரூ.4,999 மற்றும் 512 ஜிபிக்கு ரூ.5,499 டிஸ்கவுண்ட் கிடைக்கும்.


Click it and Unblock the Notifications