OPPO Reno13 Pro 5G: AI-யின் சக்தி மூலம் உங்களுடைய தினசரி ப்ரொடெக்டிவிட்டியை மேம்படுத்துங்கள்!

ப்ரொடெக்டிவிட்டி என்பது அதாவது உற்பத்தித்திறன் என்பது ஒரு புதிய ஸ்மார்ட்போனை வாங்கும் போது அதிகம் கவனிக்கப்படாத ஒரு அம்சமாக இருக்கிறது. குறிப்பாக நமது அன்றாட வாழ்வில் ஸ்மார்ட்போன்களை நாம் எவ்வளவு நம்பியிருக்கிறோம் என்பதை அறிந்தும் கூட ப்ரொடெக்டிவிட்டி கவனிக்கப்படாத அம்சமாக உள்ளது. இந்த இடத்தில் தான் OPPO Reno13 Pro 5G உள்ளே வருகிறது. இது உங்கள் உள்ளங்கையில் பொருந்தக்கூடிய ஒரு வொர்க்ஹார்ஸ் ஆகும்!
கூடவே இது ஸ்மார்ட் AI அம்சங்கள், மென்மையான செயல்திறன், நம்பமுடியாத பேட்டரி லைஃப் மற்றும் நேர்த்தியான மற்றும் ரக்டு ஆன வடிவமைப்பையும் கொண்டுள்ளது. மேலும், OPPO வின் தனியுரிம X1 Chip ஆனது மென்மையான, பின்னடைவு இல்லாத கேமிங் அனுபவத்தை உறுதிசெய்கிறது மற்றும் குறைந்த முயற்சியுடன் ஒரு நாள் முழுவதும் உங்களை கனெக்டட் ஆக வைத்து இருக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதன் வெர்சடைல் ட்ரிபிள் கேமரா செட்டப், அதிவேக சார்ஜிங் மற்றும் அதிவேக டிஸ்பிளே ஆகியவற்றை குறிப்பிடவே தேவையில்லை. சரி வாருங்கள் எந்தவிதமான சுற்றி வளைக்கும் பேச்சுக்களும் இல்லாமல் OPPO Reno13 Pro 5G ஆனது அதன் ஸ்மார்ட் AI அம்சங்களுடன் உங்கள் அன்றாட உற்பத்தித்திறனை எவ்வாறு மேம்படுத்துகிறது மற்றும் இது ப்ரொபெஷனல்களுக்கான சரியான தினசரி துணையாக இருப்பதற்கான ஐந்து முக்கிய காரணங்கள் என்னென்ன என்பதை பற்றி விரிவாக பார்ப்போம்.

AI இன் சக்தி மூலம் ஸ்மார்ட் உற்பத்தித்திறன்
Reno13 Pro 5G ஸ்மார்ட்போனின் ப்ரொடெக்டிவிட்டி அனுபவத்தின் மையத்தில் மேம்பட்ட AI அம்சங்களின் தொகுப்பு உள்ளது, இது மிகவும் சிக்கலான மற்றும் தேவைப்படும் பணிகளை எளிதாக முடிக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.
• நீங்கள் ஒரு சக ஊழியரிடமிருந்து ஒரு நீண்ட மின்னஞ்சலை பெற்றுளீர்கள் என்று கற்பனை செய்து கொள்ளுங்கள். AI Summary மூலம், அந்த இமெயிலில் உள்ள ஒவ்வொரு விவரத்தையும் முக்கிய புள்ளிகளின் வழியா உடனடியாக புரிந்துகொள்ளலாம். இது ஒரு பெர்சனல் அசிஸ்டன்ட்-ஐ போன்றது, இது உங்கள் மெசேஜ்களை படித்து பில்டர் செய்து கொடுக்கும், உங்கள் நேரத்தை மிச்சப்படுத்தும் மற்றும் இதனால் உங்களுடைய
மற்ற வேளைகளில் நீங்கள் தொடர்ந்து கவனம் செலுத்த முடியும்.
• சில நேரங்களில் சரியான பதில்களை உருவாக்குவது சவாலானதாக இருக்கலாம், குறிப்பாக நீங்கள் நேரமின்மை காரணமான அழுத்தத்தில் இருக்கும் போது. AI Reply உங்களுக்கு உதவும். இது சூழல்-விழிப்புணர்வு மிக்க பதில்களை கொடுக்கும், நீங்கள் திறம்படவும் உடனடியாகவும் கம்யூனிகேட் செய்வதை உறுதி செய்யும்.
• ஒருவேளை நீங்கள் ஒரு ப்ரொபெஷனல் இமெயிலை உருவாக்கினால் அல்லது ஈர்க்கக்கூடிய சோஷியல் மீடியா போஸ்ட்டை உருவாக்கினால் AI Writer உங்களுடைய கிரியேட்டிவ் பார்ட்னர் ஆக இருக்கும். இது உங்கள் மெசேஜ்களை செம்மைப்படுத்தவும், தெளிவுபடுத்தவும் மற்றும் தாக்கத்தை உறுதிப்படுத்தவும் உதவுகிறது. மேலும் உங்கள் பார்வையாளர்களுக்கு ஏற்றவாறு வசீகரிக்கும் கன்டென்ட்டையும் உருவாக்கும்.
• கற்பனை செய்து பாருங்கள்: நீங்கள் ஒரு பணியில் ஈடுபட்டுள்ளீர்கள், ஆனால் அதே நேரத்தில் லேட்டஸ்ட் நியூஸ்களுடன் தொடர்ந்து அப்டேட் ஆக இருக்க விரும்புகிறீர்கள். AI Speak அம்சத்தால் உங்களுக்காக ஒரு வெப் பேஜை படிக்க முடியும், இது மற்ற பல பணிகளை திறமையாக செய்ய உங்களை அனுமதிக்கும்.
• மீட்டிங் அல்லது விரிவுரைகளின் போது நோட்ஸ் எடுப்பது மிகவும் அவசியமான வேலையாக இருக்கும். ColorOS 15 இன் AI-மேம்படுத்தப்பட்ட நோட்ஸ் ஆவ் மூலம், கன்டென்ட்-ஐ சுருக்கி எழுதுவது அல்லது விரிவுபடுத்துவது - சிரமமில்லாமல் செய்யும் ஒரு வேலையாக இருக்கும். இது உங்கள் எண்ணங்களை ஒழுங்கமைத்து, தெளிவுபடுத்தும் ஒரு எடிட்டரை போன்றது.
• பெரும்பாலான நேரங்களில் பல்வேறு வகையான ஆவண வகைகளை நிர்வகிப்பது சிரமமாக இருக்கும். புதிய AI-powered Documents app ஆனது டெக்ஸ்ட் டாக்குமெண்ட்ஸ், ஸ்ப்ரெட்ஷீட்ஸ் மற்றும் ப்ரெசன்ட்டேஷன்களை ப்ராசஸ் செய்யும், உங்கள் உற்பத்தித்திறனை மேம்படுத்தும். உங்கள் எல்லா ஆவணங்களையும் கையாள்வதில் திறமையான ஒரு பல்துறை உதவியாளர் உங்களிடம் இருப்பது போல் செயல்படும்.
• உங்கள் பன்முக AI அசிஸ்டென்ட் ஆன ஜெமினியை சந்திக்கவும். ஏதேனும் கேள்விக்கு பதில் வேண்டுமா? Gemini - கூகுளின் விரிவான தேடல் தரவுத்தளத்தை மேம்படுத்துவதன் மூலம் தகவலறிந்த பதில்களை வழங்குகிறது. டெக்ஸ்ட், கோடிங் அல்லது இமேஜ்கள் என எதுவாக இருந்தாலும், ஜெமினி உங்கள் கோரிக்கைகளை திறம்பட நிறைவேற்ற கூகுள் ஆப்கள் மற்றும் சர்வீஸ்களுடன் ஒருங்கிணையவும் செய்யும்.
• அறிமுகமில்லாத சொல் அல்லது படத்தை எப்போதாவது பார்த்து உண்டா? Circle-to-Search மூலம், அந்த கன்டென்ட்-ஐ வட்டமிடவும், அதை தனியாக பிரிக்கவும் அல்லது டேப் செய்யவும். கூகுளில் இருந்து உடனடி சேர்ச் ரிசல்ட்களை பெறுவீர்கள். இது உங்கள் விரல் நுனியில் தகவல்களைக் கொண்டுவரும் ஸ்மார்ட் பூதக்கண்ணாடியை போன்றது.
இந்த அம்சங்கள் உங்கள் டிஜிட்டல் அனுபவத்தை மிகவும் உள்ளுணர்வு மிக்கதாக மற்றும் திறமையானதாக மாற்றும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளன, உங்கள் தனிப்பட்ட மற்றும் தொழில்முறை தேவைகளில் எந்த தடையும் வராமல் பார்த்துக்கொள்கின்றன.

கலர்ஓஎஸ் 15: ரீபைண்ட் யூசர் எக்ஸ்பீரியன்ஸ்
OPPO-வின் கலர்ஓஎஸ் 15 ஆனது மிகவும் ரீபைண்ட் சாப்ட்வேர் அனுபவங்களை தொடர்ந்து வழங்குகிறது, உற்பத்தித்திறன் அம்சங்கள் மற்றும் தனிப்பயனாக்குதல் விருப்பங்களை மிகச்சரியாக சமநிலைப்படுத்தி, ப்ளோட்-ப்ரீ பயனர் அனுபவத்தை கொடுக்கிறது. OPPO மூன்று வருட ஓஎஸ் அப்டேட்கள் மற்றும் நான்கு வருட செக்யூரிட்டி பேட்ச்களுக்கு உறுதியளிக்கிறது, இது நீண்டகால ஆதரவு மற்றும் பாதுகாப்பை உறுதி செய்கிறது.
புதிய Tap-to-Share feature உடன் ஆண்ட்ராய்டு மற்றும் ஐஓஎஸ் இடையேயான இடைவெளியை குறைப்பதை கலர்ஓஎஸ் 15 நோக்கமாக கொண்டிருக்கிறது. இந்த பீச்சரின் உதவியுடன், யூசர்கள் ஒரு சிம்பிள் டேப் மூலம் இமேஜ்கள், ஃபைல்கள் மற்றும் பலவற்றை ஐஓஎஸ் யூசர்களுடன் எளிதாக ஷேர் செய்துகொள்ளலாம். OPPO Reno13 Pro 5G மட்டுமே ஐபோன்களுடன் லைவ்போட்டோ மற்றும் டாக்குமெண்ட் ஷேரிங்கை ஆதரிக்கும் ஒரே ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போனாக இருக்கிறது.
சுருக்கமாக, கலர்ஓஎஸ் 15-இன் ப்ரொடெக்டிவிட்டி பீச்சர்கள் ஆனது AI என்ஹான்ஸ்மெண்ட்கள், இன்ட்யூட்டி டிசைன் மற்றும் பர்ஃபாமென்ஸ் மேம்படுத்தல்கள் ஆகியவற்றை உள்ளடக்கியது, அதன் யூசர்களின் பல்வேறு தேவைகளை பூர்த்தி செய்யும் வகையில் தடையற்ற மற்றும் திறமையான பயனர் அனுபவத்தை வழங்க இது வடிவமைக்கப்பட்டுள்ளது.

பவர்-எஃபிசியன்ட் பர்ஃபாமென்ஸ் கையில் இருக்கக் கூடிய பணி முக்கியமல்ல
4என்எம் MediaTek Dimensity 8350 சிப்செட் மூலம் இயக்கப்படும் OPPO Reno13 Pro 5G ஆனது அதனுடைய ஆக்டா-கோர் சிபியு உடன் மல்டி-டாஸ்கிங் பர்ஃபாமென்ஸில் சிறந்து விளங்குகிறது. நான்கு கோர்டெக்ஸ்-ஏ715 பர்ஃபாமென்ஸ் கோர்கள் மற்றும் நான்கு கோர்டெக்ஸ்-ஏ510 பர்ஃபாமென்ஸ் கோர்களை கொண்ட இந்த டிவைஸ், 3.35ஜிகாஹெட்ஸ் வரை எட்டும், கடினமான பணிகளின் போதும் சீரான செயல்பாட்டை உறுதி செய்கிறது. சிக்ஸ்-கோர் மாலி-ஜி615 ஜிபியு ஃப்ளூயிட் கேமிங்கை ஆதரிக்கிறது, இன்டென்ஸிவ் செசன்களின் போதும் மின் நுகர்வை 15 சதவீதம் குறைக்கிறது.
இந்த சிப்செட் கேமர்களுக்கு ஒரு வரப்பிரசாதமாகும், ஏனென்றால், குறைந்த சிக்னல் உள்ள நிலையிலும் கூட, சீரான கேம்பிளேவை உறுதி செய்யும் வகையில், தாமதமில்லாத கேமிங் அனுபவத்தை வழங்க OPPO-வின் செல்ப்-டெவலப்ட் சிக்னல்பூஸ்ட் எக்ஸ்1 சிப் வடிவமைக்கப்பட்டுள்ளது. கேமிங் எக்சலென்ஸ் கொடுக்க MediaTek 8350 மற்றும் நெட்வொர்க் பூஸ்ட் கொடுக்க வடிவமைக்கப்பட்ட OPPO-வின் செல்ப்-டெவலப்ட் எக்ஸ்1 சிப்செட் ஆகியவற்றை இணைக்கும் சக்திவாய்ந்த டூயல் சிப்செட் சிஸ்டம் ஆனது ஒரு உண்மையான லாக் கில்லராக இதை மாற்றுகிறது.
12ஜிபி எல்பிடிடிஆர்5எக்ஸ் ரேம் மற்றும் 512ஜிபி வரையிலான யுஎப்எஸ் 3.1 ஸ்டோரேஜூடன், Reno13 Pro 5G பல ஆப்களை சிரமமின்றி கையாளுகிறது, இது தடையற்ற பயனர் அனுபவத்தை வழங்குகிறது. AI HyperBoost டெக்னாலஜி ஆனது கேம்பிளே மற்றும் ப்ரொடெக்டிவிட்டியை மேம்படுத்துகிறது, அதிக பிரேம் விகிதங்களை பராமரிக்கிறது மற்றும் எஃபிசியன்ட் மல்டி-டாஸ்கிங்கை உறுதி செய்கிறது.
வெப்பத்தை கடத்தும் கிராஃபைட்டை பயன்படுத்துகிற அட்வான்ஸ்டு கூலிங் சிஸ்டம் ஆனது வெப்பச் சிதறலை 70 சதவீதம் மேம்படுத்துகிறது, நீட்டிக்கப்பட்ட பயன்பாட்டின் போது நிலையான செயல்திறனை செயல்படுத்துகிறது. என்பியூ 780 ஜெனரேட்டிவ் AI என்ஜின் 3.3எக்ஸ் சிறந்த ஒட்டுமொத்த செயல்திறனை வழங்குகிறது, இது டிவைஸின் மல்டிடாஸ்கிங் திறன்களை மேலும் அதிகரிக்கிறது.
TÜV Rheinland இன் சிறந்த நெட்வொர்க்-செயல்திறன் சான்றிதழ் மற்றும் TÜV SÜD இன் லேக்-ஃப்ரீ மொபைல் கேமிங் சான்றிதழ் உடன் இந்த Reno13 Pro 5G போன் வெளிவந்துள்ளது. குறிப்பாக இந்த போன் சிறந்த செயல்திறன் வழங்கும். அதேபோல் பயனர்கள் கேமிங், 4கே வீடியோ பதிவு செய்தல் அல்லது ஒரே நேரத்தில் பல்வேறு ஆப்ஸ்களைபயன்படுத்துதல் போன்றவற்றில் இந்த போன் மென்மையான அனுபவத்தை உறுதிசெய்கிறது. அதாவது எந்த ஆப்ஸ்களையும் இந்த போனில் தடையின்றி பயன்படுத்தலாம்.

நீண்ட காலங்களுக்குத் தாங்கும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது
Reno13 Pro 5G சிறந்த செயல்திறன் மற்றும் மென்பொருள் உடன் வெளிவந்துள்ளது. அதுவும் நீண்ட காலங்களுக்குத் தாங்கும் வகையில் இந்த போன் வடிவமைக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த ேபுானின் முன்புறம் மற்றும் பின்புறம் Corning Gorilla Glass 7i பாதுகாப்பு வசதி உள்ளது. சுருக்கமாக கூறவேண்டும் என்றால் கார்னிங் கொரில்லா கிளாஸ் மேம்பட்ட பாதுகாப்பு அம்சத்தை வழங்கும். அதேபோல் Reno13 Pro 5G ஆனது ஆனது ஏரோஸ்பேஸ்-கிரேடு அலுமினியம் பிரேம் உடன் வெளிவந்துள்ளது. குறிப்பாக இது சிறந்த உறுதியை வழங்குகிறது.
மேலும் இந்த போன் ஆல்-ரவுண்ட் ஆர்மர் பாடி, மேம்பட்ட Sponge Bionic குஷனிங்குடன் உறுதியான வெளிப்புறத்தை உறுதி செய்கிறது. அதேபோல் இந்த போனுக்குIP66, IP68 மற்றும் IP69 சான்றிதழ்கள் வழங்கப்பட்டுள்ளது. 30 நிமிடங்களுக்கு 2 மீட்டர் வரை மூழ்குதல் மற்றும் 80 டிகிரி செல்சியஸ் வரை வெப்பநிலையில் தாங்கும் திறன் கொண்டது இந்த போன். கரடுமுரடான உருவாக்கம் ஒருபுறம் இருக்க, Reno13 Pro 5G ஆனது மிஸ்ட் லாவெண்டர் மற்றும் கிராஃபைட் கிரே ஆகிய நிறங்களில் நேர்த்தியான மற்றும் ஸ்டைலான வடிவமைப்பைக் கொண்டுவெளிவந்துள்ளது.

மேம்படுத்தப்பட்ட இமேஜிங் திறன்கள் நீடித்த பேட்டரி ஆயுள்
Reno13 Pro 5G ஆனது 50MP Sony IMX890 பிரைமரி சென்சார் (f/1.88, OIS, 1/1.56″), 50MP Samsung JN5 டெலிபோட்டோ லென்ஸ் (3.5எக்ஸ் ஆப்டிகல் ஜூம் மற்றும் 120x வரை டிஜிட்டல் ஜூம்), 8MP OV08D அல்ட்ராவைடு லென்ஸ் (115° FOV, AF), மற்றும் JN5 சென்சார் கொண்ட 50MP செல்பி கேமரா ஆதரவு கொண்டுள்ளது. எனவே இந்த ஸ்மார்ட்போன் உதவியுடன் அசத்தலான படங்களை எடுக்க முடியும்.
ஏஐ கிளாரிட்டி என்ஹான்ஸர் 10எக்ஸ் ஜூம் உடன் மிகவும் கிளியர் ஆன கூர்மையான விவரங்களை வழங்குகிறது. அதே நேரத்தில் ஏஐ ரிப்லெக்ஷன் ரிமூவர் தேவையற்ற கண்ணாடி பிரதிபலிப்புகளை நீக்க உதவுகிறது. பிரத்தியேக மோட் உதவியுடன் இந்த சாதனம் நீருக்கடியில் காட்சிகளைப் படம்பிடிக்க அனுமதிக்கிறது. விண்டேஜ், ஸ்கைஃபை மற்றும் ஃபேண்டஸி போன்ற தீம் உடன் தனித்துவமான படங்களை எடுக்க ஏஐ ஸ்டுடியோ உடன் ஏஐ மேஜிக் அம்சத்தை பயன்படுத்துகிறது. AI Night Portrait, AI Unblur, AI Clear Face, AI Eraser 2.0 மற்றும் AI Best Face போன்ற அம்சங்கள் உடன் இந்த ஸ்மார்ட்போன் எந்த நிலையிலும் துவைப்ரன்ட், கிளியர், டீடைல் மற்றும் கவனச்சிதறல் இல்லாத படங்களை எடுக்க உறுதி செய்கிறது.
OPPO Reno13 Pro 5G ஸ்மார்ட்போன் சாதனம் 5,800mAh பேட்டரியுடன் வருகிறது. இது ஒரு முறை சார்ஜ் செய்தால் ஒன்றரை நாள் வரை மிதமான பயன்பாட்டை வழங்குகிறது. கூடுதலாக, பேட்டரி 80W SUPERVOOCTM ஃபிளாஷ் சார்ஜிங் அம்சத்தை ஆதரிக்கிறது. இது வெறும் 48 நிமிடங்களில் முழுமையாக சார்ஜ் செய்ய அனுமதிக்கிறது. OPPO ஐந்து வருட நிலையான பேட்டரி செயல்திறனை உறுதி செய்கிறது. இறுதி செக்யூரிட்டி பேட்ச் அப்டேட்டிற்கு பிறகும் மென்மையான மற்றும் நம்பகமான அனுபவத்தை உறுதி செய்கிறது.

இறுதியாக, Reno13 Pro 5G போன் மிகவும் பெரிய 6.83" இன்ச் 120Hz (1.5K ரெசல்யூஷன்) OLED டிஸ்பிளேவை வழங்கி விசுவல் அனுபத்தை சிறப்பாக மாற்றுகிறது. நீங்கள் பார்வையிடும் உள்ளடக்கத்தின் வகையைப் பொறுத்து தானாகவே 60Hz, 90Hz மற்றும் 120Hz ரெஃப்ரஷ் ரேட் இடையில் தானாக மாறும் ஸ்மார்ட் அடாப்டிவ் அம்சத்தை இது கொண்டுள்ளது. கூடுதலாக, டிஸ்ப்ளே வன்பொருள் அடிப்படையிலான குறைந்த நீல ஒளி பாதுகாப்பையும் கொண்டுள்ளது மற்றும் HDR ஆதரவுடன் பிரீமியம் வியூவிங் அனுபவத்தை வழங்குகிறது.

முடிவுரை
முடிவில், OPPO Reno13 Pro 5G ஸ்மார்ட்போன் இந்த 2025 ஆம் ஆண்டில் சிறந்த ஸ்மார்ட்போனாக திகழ்கிறது. மேம்பட்ட ஏஐ திறன்கள், வலுவான செயல்திறன் மற்றும் இணையற்ற உற்பத்தித்திறன் அம்சங்களை தடையின்றி இது ஒருங்கிணைத்திருக்கிறது. கலர் ஓஎஸ் 15 உடன், பயனர்கள் ஏஐ சம்மரி, ஏஐ ரிப்ளை மற்றும் ஏஐ ரைட்டர் போன்ற ஏஐ இயக்கப்பட்ட அம்சங்களை பெறுகிறார்கள். இது தினசரி பணிகளை நெறிப்படுத்துகிறது மற்றும் செயல்திறனை மேம்படுத்துகிறது.
இந்த போன் சக்திவாய்ந்த 4என்எம் MediaTek Dimensity 8350 சிப்செட் உடன் லேக் இல்லாத கேமிங் மற்றும் மல்டி டாஸ்கிங் அனுபவத்தை தொழில் வல்லுநர்கள் மற்றும் கேமர்களுக்கு வழங்குகிறது. கார்னிங் கொரில்லா கிளாஸ் 7i மற்றும் விண்வெளி-தர அலுமினிய ஃபிரேம் ஆகியவற்றைக் கொண்ட அதன் நீடித்த வடிவமைப்பு, நீண்ட ஆயுள் மற்றும் மீள்தன்மையை உறுதி செய்கிறது. Reno13 Pro 5G வெறும் ஸ்மார்ட்போன் அல்லஇது எல்லாவற்றிற்கும் மேல. இது உங்கள் வாழ்க்கை முறைக்கு ஏற்றவாறு மாற்றியமைக்கும், முடிவற்ற சாத்தியக்கூறுகளை வழங்கும் மற்றும் மொபைல் சிறப்பிற்கான புதிய தரத்தை அமைக்கும் ஒரு தவிர்க்க முடியாத துணை என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.

விலை மற்றும் கிடைக்கும் தன்மை:
இந்தியாவில் OPPO Reno13 Pro 5G விலை 12GB/256GB மாடலுக்கு ரூ. 49,999 இலிருந்து தொடங்குகிறது. இதன் 12GB/512GB ஸ்டோரேஜ் மாடல் ரூ. 54,999 விலையில் கிடைக்கிறது. இருப்பினும், அடிப்படை மாடலின் விலையை ரூ. 44,999 ஆகவும், டாப்-எண்ட் வேரியண்டை ரூ. 49,499 ஆகவும் குறைக்க OPPO பல சலுகைகளை அறிமுகப்படுத்தியுள்ளது. OPPO Reno13 Pro 5G ஸ்மார்ட்போன் சாதனம் Flipkart, OPPO E-store மற்றும் பிரதான சில்லறை விற்பனை நிலையங்களில் வாங்குவதற்கு தயாராக உள்ளது. எனவே உங்களுடையதை வாங்கி #LiveInTheMoment உணர்வை பெறுங்கள்.


Click it and Unblock the Notifications








