இவரு வேற ரகம்.. OPPO இறக்கிய SKY ப்ளூ.. அண்டர் வாட்டர் கேமரா.. 80W சார்ஜிங்.. 5600mAh பேட்டரி.. எந்த மாடல்?
இந்தியாவில் வெளியாகிய ஓப்போ போன்களிலேயே அல்ட்ரா பிரீமியம் பீச்சர்கள் மற்றும் அதிக விலை கொண்ட மாடல்களாக ஓப்போ ரெனோ 13 சீரிஸ் (OPPO Reno13 Series) களமிறங்கின. ஆனால், இந்த போனில் 2 கலர் வேரியண்ட்கள் மட்டுமே கிடைத்தன. இப்போது, ஸ்கை ப்ளூ (Sky Blue) கலர் வேரியண்ட் களமிறங்கி இருக்கிறது. இந்த புதிய கலர் வேரியண்ட்டின் விலை மற்றும் விற்பனை விவரங்களை இப்போது தெரிந்து கொள்ளலாம்.
ஹோலி பண்டிகையை முன்னிட்டு இந்த ஸ்கை ப்ளூ வேரியண்ட் களமிறங்கி இருக்கிறது. ஏஜி கிளாஸ் பாடியில் அல்ட்ரா பிரீமியம் லுக் கொடுக்கிறது. முந்தைய கலர் வேரியண்ட்களில் கிடைத்ததை போலவே அண்டர் வாட்டர் ரெசிஸ்டன்ட், ஹை-பிரசர் ரெசிஸ்டன்ட், டஸ்ட் மற்றும் ஸ்பிளாஷ் ரெசிஸ்டன்ட் கொடுக்கும்படி IP69, IP68 மற்றும் IP66 ரெசிஸ்டன்ட் கிடைக்கிறது.

ஓப்போ ரெனோ12 5ஜி அம்சங்கள் (OPPO Reno13 5G Specifications): இந்த ஓப்போ போனில் 1.5K ரெசொலூஷன் கொண்ட 6.59 இன்ச் (2760 × 1256 பிக்சல்கள்) அமோலெட் (AMOLED) டிஸ்பிளே வருகிறது. இந்த டிஸ்பிளேவில் கார்னிங் கொரில்லா கிளாஸ் 7ஐ (Corning Gorilla Glass 7i) புரொடெக்சன் மட்டுமல்லாமல், ஃபுல்எச்டிபிளஸ் (FHD+) ரெசொலூஷன், 1200 நிட்ஸ் பிரைட்னஸ் வருகிறது.
மேலும், 120Hz ரெஃப்ரெஷ் ரேட், 240Hz டச் சாம்பிளிங் ரேட், 460 பிபிஐ பிக்சல் டென்சிட்டி மற்றும் 3840Hz PWM டிம்மிங் ஃபிரிகொன்சி கிடைக்கிறது. இந்த ஸ்கை ப்ளூ கலரில் 12 ஜிபி ரேம் + 512 ஜிபி மெமரி வேரியண்ட் கிடைக்க இருக்கிறது. ஆனால், ஐவரி ஒயிட் மற்றும் லூமினஸ் ப்ளூ கலர்களில் 8 ஜிபி ரேம் + 128 ஜிபி மெமரி மற்றும் 8 ஜிபி ரேம் + 256 ஜிபி மெமரி மட்டுமே கிடைத்தது.
ஆகவே, இந்த புதிய கலர் வேரியண்ட் ஹை-எண்ட் மாடலாக களமிறங்கி இருக்கிறது. ஆண்ட்ராய்டு 15 ஓஎஸ் (Android 15 OS) கொண்ட ஆக்டா கோர் டைமன்சிட்டி 8350 4என்எம் (Octa Core Dimensity 8350 4nm) சிப்செட் மற்றும் ஏஐ பீச்சர்களுடன் கலர்ஓஎஸ் 15 (ColorOS 15) கிடைக்கிறது. ஏஐ பீச்சர்களை பார்க்கையில், ஏஐ சம்மரி, ஏஐ டிரான்ஸ்லேட்டர், ஏஐ ரைட்டர் போன்றவை கிடைக்கின்றன.
இதுபோக கேமராவிலும் ஏஐ பீச்சர்கள் பின்னி எடுக்கின்றன. ஆகவே, 2K ரெசொலூஷனில் ஏஐ லைவ் போட்டோ (AI Livephoto), ஏஐ கிளாரிட்டி என்ஹான்ஸ்சர் (AI Clarity Enhancer), ஏஐ எரைசர் 2.0 (AI Eraser 2.0), ஏஐ அன்பிளர் (AI Unblur) மற்றும் ஏஐ ரெஃப்ளெக்சன் ரீமூவர் (AI Reflection Remover) கிடைக்கிறது. மேலும், ஏஐ கிளியர் பேஸ் (AI Clear Face), ஏஐ பெஸ்ட் பேஸ் (AI Best Face) வருகிறது.
இந்த ஓப்போ ரெனோ12 5ஜி ஸ்கை ப்ளூ வேரியண்ட்டில் 50 எம்பி மெயின் கேமரா + 8 எம்பி அல்ட்ரை வைடு கேமரா + 2 எம்பி மோனோகுரோம் கேமரா கொண்ட டிரிபிள் ரியர் சிஸ்டம் கிடைக்கிறது. சோனி எல்ஒய்டி 600 (Sony LYT 600) + ஆப்டிகல் இமேஜ் ஸ்டெபிலைசேஷன் டெக்னாலஜி மெயின் கேமராவில் கிடைக்கிறது. ஓம்னிவிஷன் சென்சார் அல்ட்ரா வைடில் இருக்கிறது.
5600mAh பேட்டரி மற்றும் 80W சூப்பர்வூக் சார்ஜிங் உள்ளது. 12 ஜிபி ரேம் + 512 ஜிபி மெமரி வேரியண்ட்டின் விலை ரூ.43,999ஆக இருக்கிறது. இதுபோக ஸ்கை ப்ளூ கலரில் 8 ஜிபி ரேம் + 256 ஜிபி மெமரி கொண்ட வேரியண்ட்டின் விலை ரூ.39,999ஆக இருக்கிறது. ரூ.3,750 பேங்க் டிஸ்கவுண்ட் போக விற்பனைக்கு வர இருக்கிறது. ஹோலி பண்டிகையில் விற்பனை ஆரம்பிக்கும்.


Click it and Unblock the Notifications








