Home
Mobile

ஒரே அடிடா சாமி.. ரூ.12,000 ரேட் கட்.. 5600mAh பேட்டரி.. 50MP கேமரா.. 80W ஃபாஸ்ட் சார்ஜிங்.. எந்த மாடல்?

அமேசான் கிரேட் இந்தியன் ஃபெஸ்டிவல் சேல் 2025 (Amazon Great Indian Festival Sale 2025) என்னும் சிறப்பு விற்பனையில் நேரடியாக ரூ.12,000 விலை குறைப்பில் ஓப்போ ரெனோ13 5ஜி (OPPO Reno13 5G) ஸ்மார்ட்போன் கிடைக்கிறது. இதுவரையில் கிடைக்காத தள்ளுபடி விலையில் வாங்க கிடைக்கிறது. கூடுதலாக பேங்க் டிஸ்கவுண்ட் கிடைக்கிறது. 5600mAh பேட்டரி, 80W ஃபாஸ்ட் சார்ஜிங், அமோலெட் டிஸ்பிளே, 50 எம்பி கேமரா போன்ற பீச்சர்களை கொடுக்கிறது. இந்த ஓப்போ ஸ்மார்ட்போனின் முழு விவரங்கள் இதோ.

இந்திய மார்கெட்டில் 8 ஜிபி ரேம் + 128 ஜிபி மெமரி கொண்ட வேரியண்ட்டின் எம்ஆர்பி ரூ.37,999ஆக இருக்கிறது. இதில் இருந்து நேரடியாக ரூ.12,000 விலை குறைப்பு செய்யப்பட்டு ரூ.23,999 பட்ஜெட்டில் வாங்க கிடைக்கிறது. இதுபோக ஆக்சிஸ் பேங்க் கிரெடிட் கார்டுக்கு ரூ.750 உடனடி டிஸ்கவுண்ட் கிடைக்கிறது. ஆகவே, ரூ.23,249 பட்ஜெட்டில் வாங்கி கொள்ளலாம்.

ஒரே அடிடா சாமி.. ரூ.12,000 ரேட் கட்.. 5600mAh பேட்டரி.. 50MP கேமரா!

இதே ஆக்சிஸ் பேங்க் கிரெடிட் கார்டு மூலம் ஈஎம்ஐ ஆப்ஷனில் ஆர்டர் செய்தால், ரூ.1,000 உடனடி டிஸ்கவுண்ட் கிடைக்கிறது. ஆகவே, ரூ.22,999 பட்ஜெட்டில் வாங்கி கொள்ளலாம். மேலும், ரூ.22,550 மதிப்பில் எக்ஸ்சேஞ்ச் போனஸ் கொடுக்கப்படுகிறது. IP66 ரேட்டிங் + IP68 ரேட்டிங் + IP69 ரேட்டிங் கொண்ட இந்த ஸ்மார்ட்போனின் முழு பீச்சர்கள் மிரளவிடுகின்றன.

ஓப்போ ரெனோ13 5ஜி அம்சங்கள் (OPPO Reno13 5G Specifications): இந்த ரெனோ ஸ்மார்ட்போனில் ஆக்டா கோர் மீடியாடெக் டைமன்சிட்டி 8350 4என்எம் (Octa Core Dimensity 8350 4nm) சிப்செட் மற்றும் அதற்கு கிடைக்கும் மாலி ஜி615 ஜிபியு (Mali G615 GPU) கிராபிக்ஸ் கார்டு வருகிறது. 3 ஜெனரேஷன் அப்டேட்களுடன் ஆண்ட்ராய்டு 15 ஓஎஸ் (Android 15 OS) கிடைக்கிறது.

மேலும், 4 வருடங்களுக்கு செக்யூரிட்டி அப்டேட்கள் கிடைக்கிறது. ஏஐ லிங்ஸ் பூஸ்ட் (AI Linkboost), பீக்கன்லிங்க் (BeaconLink), ஏஐ டூல்பாக்ஸ் 2.0 (AI Toolbox 2.0), ஏஐ சம்மரி (AI Summary), ஏஐ ரைட்டர் (AI Writer) மற்றும் ஸ்கிரீன் டிரான்ஸ்லேட்டர் (Screen Translator) போன்ற பீச்சர்களுடன் கலர்ஓஎஸ் 15 (ColorOS 15) கிடைக்கிறது. மேலும், ஏஐ கேமரா பீச்சர்களும் கிடைக்கின்றன.

ஏஐ லைவ் போட்டோ (AI Livephoto), ஏஐ கிளாரிட்டி என்ஹான்சர் (AI Clarity Enhancer), ஏஐ அன்பிளர் (AI Unblur), ஏஐ ரெஃப்ளெக்சன் ரிமூவர் (AI Reflection Remover), ஏஐ எரைசர் 2.0 (AI Eraser 2.0) ஆகிய பீச்சர்களும், ஏஐ போர்ட்ராய்டு, ஏஐ நைட் போர்ட்ராய்டு, ஏஐ கிளியர் பேஸ், ஏஐ பெஸ்ட் பேஸ் மற்றும் அண்டர் வாட்டர் போட்டோகிராபி போன்ற பீச்சர்களும் உள்ளன.

இந்த பீச்சர்களுக்கு ஏற்பசோனி எல்ஒய்டி 600 (Sony LYT 600) சென்சார் கொண்ட 50 எம்பி மெயின் கேமரா கிடைக்கிறது. இந்த கேமராவுக்கு ஓஐஎஸ் (OIS) டெக்னாலஜி மற்றும் 8 எம்பி அல்ட்ரா வைடு கேமரா + 2 எம்பி மோனோகுரோம் கேமரா கிடைக்கிறது. இந்த கேமராக்களில் ஓம்னிவிஷன் சென்சார்கள் கிடைக்கின்றன. 50 எம்பி செல்பீ கேமரா கொடுக்கப்படுகிறது.

இதில் சாம்சங் ஜேஎன்5 (Samsung JN5) சென்சார் கிடைக்கிறது. இந்த ஓப்போ ரெனோ13 ஸ்மார்ட்போனில் IP68 ரேட்டிங் + IP69 ரேட்டிங் உள்ளது. மேலும், IP66 ரேட்டிங்குடன் மொத்தமாக டஸ்ட் & வாட்டர் ரெசிஸ்டன்ட் கொடுக்கிறது. ஆகவே, பிரீமியம் டியூரபிலிட்டி எதிர்பார்க்கலாம். இதுபோக ஏரோஸ்பேஸ் கிரேடு அலுமினியம் பாடி கிடைக்கிறது.

6.59 இன்ச் அமோலெட் (AMOLED) டிஸ்பிளே, 1.5K ரெசொலூஷன், 1200 நிட்ஸ் பீக் பிரைட்னஸ்,120Hz ரெஃப்ரெஷ் ரேட், 3840Hz PWM டிம்மிங் கிடைக்கிறது. 80W ஃபாஸ்ட் சார்ஜிங் மற்றும் 5600mAh பேட்டரி கிடைக்கிறது. இந்த ஓப்போ ரெனோ13 5ஜி ஸ்மார்ட்போனில் ஐவரி ஒயிட் (Ivory White), லூமினஸ் ப்ளூ (Luminous Blue) மற்றும் ஸ்கை ப்ளூ (Sky Blue) கலர்கள் உள்ளன.

More from GizBot

Best Mobiles in India

English summary
OPPO Reno13 5G With 8GB RAM Gets Rs 14,000 Flat Discount in Amazon Great Indian Festival Sale 2025
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X