செய்கைனா இதுதான்.. ரூ.11,000 விலை குறைப்பு.. அடிமட்ட ரேட்டில் OPPO 5ஜி போன்.. 5600mAh பேட்டரி.. எந்த மாடல்?
ஓப்போ நிறுவனத்தின் மிட்-பிரீமியம் மாடலான ஓப்போ ரெனோ13 5ஜி (OPPO Reno13 5G) ஸ்மார்ட்போனுக்கு நேரடியாக ரூ.11,000 விலை குறைப்பு செய்யப்பட்டுள்ளது. பிளிப்கார்ட் தளத்தில் கூடுதலாக பேங்க் டிஸ்கவுண்ட் போக விற்பனைக்கு கிடைக்கிறது. 5600mAh பேட்டரி, 80W ஃபாஸ்ட் சார்ஜிங் மட்டுல்லாமல், அண்டர் வாட்டர் போட்டோகிராபி கொடுக்கும்படி IP69 ரேட்டிங் கொண்ட வாட்டர் ரெசிஸ்டன்ஸ் கிடைக்கிறது. இந்த ஓப்போ ரெனோ13 5ஜி ஸ்மார்ட்போனின் முழு விவரங்களை இப்போது தெரிந்து கொள்ளலாம்.
8 ஜிபி ரேம் + 128 ஜிபி மெமரி கொண்ட வேரியண்ட்டின் விலை ரூ.37,999ஆகவும், 8 ஜிபி ரேம் + 256 ஜிபி ரேம் கொண்ட வேரியண்ட்டின் விலை ரூ.39,999ஆகவும் இருக்கிறது. ஆனால், இப்போது, அதிகபட்சம் ரூ.11,000 விலை குறைப்பு போக பிளிப்கார்ட் தளத்தில் விற்பனைக்கு கிடைக்கிறது. ஆகவே, 8 ஜிபி ரேம் + 128 ஜிபி மெமரி வேரியண்ட்டை ரூ.26,999 பட்ஜெட்டில் வாங்கலாம்.

இந்த பட்ஜெட்டில் வாங்க கிரெடிட் கார்டு அல்லது டெபிட் கார்டு பயன்படுத்த வேண்டியது கிடையாது. இந்த ரூ.11,000 விலை குறைப்பு போக குறிப்பிட்ட பேங்க் கார்டுகளுக்கு ரூ.1,350 உடனடி டிஸ்கவுண்ட் கிடைக்கிறது. ஆகவே, விலை குறைப்பு மற்றும் பேங்க் டிஸ்கவுண்ட் போக ரூ.25,649 பட்ஜெட்டில் இந்த ஓப்போ ரெனோ13 5ஜி ஸ்மார்ட்போனை வாங்கி கொள்ளலாம்.
ஓப்போ ரெனோ13 5ஜி அம்சங்கள் (OPPO Reno13 5G Specifications): இந்த ஓப்போவில் 6.59 இன்ச் (2760 x 1256 பிக்சல்கள்) அமோலெட் (AMOLED) டிஸ்பிளே கிடைக்கிறது. இதில் 1.5K ரெசொலூஷன் மற்றும் 1200 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் கிடைக்கிறது. இதுபோக 120Hz ரெஃப்ரெஷ் ரேட், 240Hz டச் சாம்பிளிங் ரேட் மற்றும் 3840Hz ஹை-ஃபிரிகொன்சி PWM டிம்மிங் கிடைக்கிறது.
மிட்-ரேஞ்ச் பட்ஜெட்டில் வெளியாகியதால், அதற்கு ஏற்ப பர்ஃபாமென்ஸ் கொடுக்கும்படி ஆக்டா கோர் மீடியாடெக் டைமன்சிட்டி 8350 4என்எம் (Octa Core Dimensity 8350 4nm) சிப்செட் கொடுக்கிறது. இந்த சிப்செட்டுடன் மாலி ஜி615 ஜிபியு (Mali G615 GPU) கிராபிக்ஸ் கார்டு மற்றும் ஓப்போவின் கலர்ஓஎஸ் 15 (ColorOS 15) கிடைக்கிறது. ஆண்ட்ராய்டு 15 ஓஎஸ் (Android 15 OS) உள்ளது.

இந்த ஓப்போ ரெனோ13 5ஜி ஸ்மார்ட்போனில் சோனி எல்ஒய்டி 600 (Sony LYT 600) சென்சாருடன் 50 எம்பி மெயின் கேமரா மற்றும் ஆப்டிகல் இமேஜ் ஸ்டெபிலைசேஷன் டெக்னாலஜி கிடைக்கிறது. இதுபோக ஓம்னிவிஷன் ஓவி08டி (OV08D) சென்சாருடன் 8 எம்பி அல்ட்ரா வைடு கேமரா + ஓம்னிவிஷன் ஓவி02பி1பி (OV02B1B) சென்சாருடன் 2 எம்பி மோனோகுரோம் கேமரா கிடைக்கிறது.
இந்த கேமராவுக்கு அண்டர் வாட்டர் போட்டோகிராபி மற்றும் வீடியோகிராபி சப்போர்ட் கிடைக்கிறது. ஆகவே, IP66 ரேட்டிங் + IP68 ரேட்டிங் மட்டுமல்லாமல், IP69 ரேட்டிங் கொண்ட டஸ்ட் & வாட்டர் ரெசிஸ்டன்ட் கிடைக்கிறது. சாம்சங் ஜேஎன்5 (Samsung JN5) சென்சாருடன் 50 எம்பி செல்பீ கேமராவை இந்த ஓப்போ ரெனோ13 5ஜி ஸ்மார்ட்போன் கொடுக்கிறது.
கேமிங், ஓடிடி பிரியர்கள் விரும்பும்படி 80W ஃபாஸ்ட் சார்ஜிங் சப்போர்ட் கொண்ட 5600mAh பேட்டரி கிடைக்கிறது. ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள், இன்-டிஸ்பிளே ஃபிங்கர்பிரிண்ட் சென்சார் மற்றும் டைப்-சி ஆடியோ சப்போர்ட் கிடைக்கிறது. இந்த ஓப்போ போனை ஐவரி ஒயிட் (Ivory White) மற்றும் லூமினஸ் ப்ளூ (Luminous Blue) ஆகிய கலர்களில் ஆர்டர் செய்து கொள்ளலாம்.


Click it and Unblock the Notifications








