Home
Mobile

இந்தா வந்துடாப்ல.. மிட்-ரேஞ்ல SONY கேமரா.. AMOLED டிஸ்பிளே.. AI போர்ட்ராய்டு.. 5600mAh பேட்டரி.. எந்த மாடல்?

ஓப்போ பிரியர்களை வெயிட்டிங் மோடில் போட்டு வைத்த ஓப்போ ரெனோ13 5ஜி சீரிஸ் (OPPO Reno13 5G Series) இந்திய மார்கெட்டில் வெளியாகிவிட்டது. இதில் ஓப்போ ரெனோ13 5ஜி போன் மிட்-ரேஞ்ச் செக்மெண்ட்டில் ஏஐ பீச்சர்களுடன் பின்னிப்பெடல் எடுக்கிறது. இந்த ஓப்போ ரெனோ13 5ஜி போனின் முழு பீச்சர்கள், விலை மற்றும் விற்பனை விவரங்களை இப்போது தெரிந்து கொள்ளலாம்.

ஓப்போ ரெனோ13 5ஜி அம்சங்கள் (OPPO Reno13 5G Specifications): இந்த ஓப்போவில் 1.5K ரெசொலூஷன் மற்றும் கொரில்லா கிளாஸ் 7ஐ (Gorilla Glass 7i) பாதுகாப்பு கொண்ட 6.59 (1256 x 2760 பிக்சல்கள்) ஃபுல்எச்டிபிளஸ் (FHD+) அமோலெட் (AMOLED) டிஸ்பிளே வருகிறது. இந்த டிஸ்பிளேவில் 240Hz டச் சாம்பிளிங் ரேட், 460 பிபிஐ பிக்சல் டென்சிட்டி மற்றும் 120Hz ரெஃப்ரெஷ் ரேட் கிடைக்கிறது.

இந்தா வந்துடாப்ல.. மிட்-ரேஞ்ல SONY கேமரா.. AMOLED டிஸ்பிளே.. மாடல்?

1200 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் கிடைக்கிறது. 8 ஜிபி ரேம் + 128 ஜிபி மெமரி மற்றும் 8 ஜிபி ரேம் + 256 ஜிபி மெமரி கொண்ட 2 வேரியண்ட்கள் விற்பனைக்கு வருகின்றன. இந்த ரெனோ12 போனில் ஆண்ட்ராய்டு 15 ஓஎஸ் (Android 15 OS) மற்றும் ஏஐ பீச்சர்களை கொடுக்கும் கலர்ஓஎஸ் 15 (ColorOS 15) கிடைக்கிறது. மாலி ஜி615 ஜிபியு (Mali G615 GPU) கிராபிக்ஸ் கார்டு கிடைக்கிறது.

4என்எம் ஆக்டா கோர் டைமன்சிட்டி 8350 எஸ்ஓசி (4nm Octa Core Dimensity 8350 SoC) சிப்செட் கிடைக்கிறது. ஏஐ லைவ்போட்டோ, ஏஐ கிளாரிட்டி சூட், ஏஐ கிளாரிட்டி என்ஹான்சர், ஏஐ அன்பிளர் மற்றும் ஏஐ ரிப்லெக்சன் ரிமூவர் போன்ற போட்டோகிராபி பீச்சரகள் கிடைக்கின்றன. முந்தை வெர்ஷனில் வந்த ஏஐ எரைசர் 2.0 பீச்சரும் இருக்கிறது. இதுபோக போர்ட்ராய்டு பிரியர்களுக்கும் இருக்கிறது.

ஏஐ போர்ட்ராய்டு, ஏஐ கிளியர் பேஸ் மற்றும் ஏஐ பெஸ்ட் பேஸ் போன்ற பீச்சர்கள் இருக்கின்றன. மேலும், ரெனோ12 சீரிஸ் மாடல்களில் கிடைத்த ஏஐ லிங்க்பூஸ்ட் மற்றும் பீச்சர்லிங் பீச்சர்களும் கொடுக்கப்பட்டுள்ளது. சோனி எல்ஒய்டி 600 சென்சாருடன் 50 எம்பி மெயின் கேமரா ஓம்னிவிஷன் ஓவி08டி சென்சாருடன் 8 எம்பி அல்ட்ரா வைடு கேமரா கிடைக்கிறது.

மேலும், ஓம்னிவிஷன் ஓவி02பி1பி சென்சாருடன் 2 எம்பி மோனோகுரோம் கேமரா கிடைக்கிறது. இந்த ஓப்போ ரெனோ13 5ஜி போனில் சாம்சங் ஜேஎன்5 (Samsung JN5) சென்சாருடன் 50 எம்பி செல்பீ ஷூட்டர் கிடைக்கிறது. ஆப்டிகல் இமேஜ் ஸ்டெபிலைசேஷன், எலக்ட்ரானிக் இமேஜ் ஸ்டெபிலைசேஷன், ஆட்டோ போகஸ் மற்றும் 4K ஷூட்டிங் சப்போர்ட் வருகிறது.

இந்த ஓப்போவில் 80W சூப்பர்வூக் சார்ஜிங் கிடைக்கிறது, ஆனால், வயர்லெஸ் சார்ஜிங் கிடையாது. இருப்பினும், 5600mAh பேட்டரி பேக் செய்யப்பட்டுள்ளது. இந்த ஓப்போ ரெனோ13 5ஜி போனின் 8 ஜிபி ரேம் + 128 ஜிபி மெமரி வேரியண்ட்டின் விலை ரூ.37,999ஆக இருக்கிறது. 8 ஜிபி ரேம் + 256 ஜிபி மெமரி வேரியண்ட்டின் விலை ரூ.39,999 ஆக இருக்கிறது.

ஜனவரி 11ஆம் தேதி முதல் விற்பனைக்கு வர இருக்கிறது. பிளிப்கார்ட் தளத்தில் ஆர்டர் செய்து கொள்ளலாம். இன்று ப்ரீ-ஆர்டர் செய்துகொள்ளலாம். இந்த ஓப்போ ரெனோ13 5ஜி போனில் லுமினஸ் ப்ளூ (Luminous Blue) மற்றும் ஐவரி ஒயிட் (Ivory White) கலர்கள் ஆர்டருக்கு கிடைக்க இருக்கின்றன. இந்த மாடலுடன் ஓப்போ ரெனோ13 ப்ரோ மாடலும் இந்தியாவில் வெளியாகி இருக்கிறது.

More from GizBot

Best Mobiles in India

English summary
OPPO Reno13 5G With 50MP Camera 8GB RAM Launched Sale From Check Specifications Price
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X