Home
Mobile

OPPO ஒரே போடு.. ரூ.8000 ரேட் கட்ல 5600mAh பேட்டரி, 80W சார்ஜிங்.. 50MP கேமரா, AMOLED டிஸ்பிளே.. எந்த மாடல்?

ஓப்போ நிறுவனத்தின் மிட்-பிரீமியம் மாடல்களாக ஓப்போ ரெனோ15 சீரிஸ் 5ஜி மாடல்கள் இந்திய மார்கெட்டில் அறிமுகம் செய்யப்பட உள்ளன. ஓப்போ ரெனோ13 5ஜி (OPPO Reno13 5G) மற்றும் ஓப்போ ரெனோ13 ப்ரோ 5ஜி (OPPO Reno13 Pro 5G) ஸ்மார்ட்போன்களுக்கு ரூ.8,000 விலை குறைப்பு கிடைக்கிறது. பிளிப்கார்ட் தளத்தில் இந்த விலை குறைப்பில் ஆர்டர் செய்து கொள்ளலாம்.

ஓப்போ ரெனோ15 5ஜி, ஓப்போ ரெனோ15 ப்ரோ 5ஜி ஆகிய ஸ்மார்ட்போன்கள் இன்று அறிமுகம் செய்யப்பட உள்ளன. இதனால், முன்னதாக வெளியான ரெனோ மாடல்களின் விலை குறைக்கப்பட்டுள்ளது. பேங்க் கார்டுகள் இல்லாமலேயே ரூ.8,000 நேரடி விலை குறைப்பில் ஓப்போ ரெனோ13 சீரிஸ் மாடல்கள் வாங்கி கொள்ள கிடைக்கின்றன.

OPPO ஒரே போடு.. ரூ.8000 ரேட் கட்ல 5600mAh பேட்டரி, 80W சார்ஜிங்!

இந்தியாவில் அறிமுகமான போது, ஓப்போ ரெனோ13 5ஜி ஸ்மார்ட்போனின் 8 ஜிபி ரேம் + 128 ஜிபி மெமரி வேரியண்ட்டின் விலை ரூ.37,999 ஆகவும், 8 ஜிபி ரேம் + 256 ஜிபி மெமரி வேரியண்ட்டின் விலை ரூ.39,999ஆகவும் இருந்தது. இப்போது, பிளிப்கார்ட் தளத்தில் ரூ.29,999 விலைக்கு 8 ஜிபி ரேம் + 128 ஜிபி மெமரி வேரியண்ட் கிடைக்கிறது.

ரூ.35,699 விலைக்கு 8 ஜிபி ரேம் + 256 ஜிபி மெமரி வேரியண்ட் கிடைக்கிறது. ரூ.8,000 விலை குறைப்பில் வாங்கி கொள்ளலாம். மேலும், ஓப்போ ரெனோ13 ப்ரோ 5ஜி ஸ்மார்ட்போன் அறிமுகமான போது, 12 ஜிபி ரேம் + 256 ஜிபி மெமரி வேரியண்ட்டின் விலை ரூ.49,999ஆக இருந்தது. இப்போது, பிளிப்கார்ட் தளத்தில் ரூ.38,999 விலையில் கிடைக்கிறது.

ஓப்போ ரெனோ13 5ஜி அம்சங்கள் (OPPO Reno13 5G Specifications): ஆக்டா கோர் டைமன்சிட்டி 8350 4என்எம் (Octa Core Dimensity 8350 4nm) சிப்செட்டை இந்த ஓப்போ ரெனோ13 5ஜி ஸ்மார்ட்போன் கொடுக்கிறது. 6.59 இன்ச் (2760 x 1256 பிக்சல்கள்) அமோலெட் (AMOLED) டிஸ்பிளே, 1.5K ரெசொலூஷன், 120 Hz ரெஃப்ரெஷ் ரேட், 240 Hz டச் சாம்பிளிங் ரேட் மற்றும் 1200 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் உள்ளது.

ஆண்ட்ராய்டு 15 ஓஎஸ் (Android 15 OS), கலர்ஓஎஸ் 15 (ColorOS 15) உள்ளது. 50 எம்பி மெயின் கேமரா (சோனி எல்ஒய்டி 600 சென்சார்) + 8 எம்பி அல்ட்ரா வைடு கேமரா (ஓவி08டி) + 2 எம்பி மோனோகுரோம் கேமரா (ஓவி02பி1பி) உள்ளது. 50 எம்பி செல்பீ கேமரா (சாம்சங் ஜேஎன்5) உள்ளது. IP66 ரேட்டிங் + IP68 ரேட்டிங் + IP69 ரேட்டிங் உள்ளது. 80W பாஸ்ட் சார்ஜிங் மற்றும் 5600mAh பேட்டரி உள்ளது.

ஓப்போ ரெனோ13 ப்ரோ 5ஜி அம்சங்கள் (OPPO Reno13 Pro 5G Specifications): ஆக்டா கோர் டைமன்சிட்டி 8350 4என்எம் சிப்செட் மற்றும் ஆண்ட்ராய்டு 15 ஓஎஸ், கலர்ஓஎஸ் 15 இந்த ரெனோ13 ப்ரோ 5ஜி போனில் கிடைக்கிறது. 6.83 இன்ச் (2800 x 1272 பிக்சல்கள்) அமோலெட் டிஸ்பிளே உள்ளது. 1.5K ரெசொலூஷன், 120 Hz ரெஃப்ரெஷ் ரேட், 240 Hz டச் சாம்பிளிங் ரேட், 1200 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் உள்ளது.

50 எம்பி மெயின் கேமரா (சோனி ஐஎம்எக்ஸ்890 சென்சார்) + 8 எம்பி அல்ட்ரா வைடு கேமரா (ஓவி08டி10) + 50 எம்பி பெரிஸ்கோப் கேமரா (சாம்சங் ஜேஎன்5) கிடைக்கிறது. 50 எம்பி செல்பீ கேமரா (சாம்சங் ஜேஎன்5) கிடைத்துள்ளது. 80W பாஸ்ட் சார்ஜிங் மற்றும் 5800mAh பேட்டரி உள்ளது. IP66 ரேட்டிங் + IP68 ரேட்டிங் + IP69 ரேட்டிங்கை இந்த ரெனோ13 ப்ரோ 5ஜி போன் கொண்டுள்ளது.

More from GizBot

Best Mobiles in India

English summary
OPPO Reno13 5G OPPO Reno13 Pro 5G Price Dropped Ahead of OPPO Reno 15 Series 5G Launch in India
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X