Home
Mobile

வேற மாறி வெயிட்டிங்.. பட்ஜெட்ல OLED டிஸ்பிளே.. SONY கேமரா.. 12GB ரேம்.. 5000mAh பேட்டரி.. எந்த மாடல்?

3டி கர்வ்ட் டிஸ்பிளே, சோனி சென்சார் கேமரா, 20X ஜூமிங், 12 ஜிபி ரேம், 80W சூப்பர்வூக் சார்ஜிங், 5000mAh பேட்டரி போன்ற பிரீமியம் பீச்சர்களுடன் மிட்-ரேஞ்ச் பட்ஜெட்டில் வெளியாகி மிகப்பெரும் வரவேற்பு பெற்ற ஓப்போ ரெனோ12 (OPPO Reno12) போனின் குளோபல் வெளியீடு ஜூன் மாதம் நடக்க இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்திய ஸ்மார்ட்போன் பிரியர்களிடையே அந்த போனுக்கான எதிர்பார்ப்பு எகிறி இருக்கிறது. இந்த போனில் அப்படியென்ன இருக்கிறது, விலை எப்படி இருக்கும் உள்ளிட்ட விவரம் இதோ.

இந்த ஓப்போ ரெனோ 12 மாடலானது, சாம்சங் ஜேஎன்5 சென்சார் கொண்ட டெலிபோட்டோ கேமராவுடன் மே மாதம் சீனாவில் வெளியாகியது. கேமரா மட்டுமல்லாமல், டைமன்சிட்டி 8250 ஸ்டார் ஸ்பீடு எடிஷன் 4என்எம் சிப்செட்டில் அல்ட்ரா பர்ஃபாமென்ஸ் கொண்டிருந்தது. இதனால், மற்ற நாடுகளில் அந்த போனுக்கு எதிர்பார்ப்பு அதிகரித்தது.

வேற மாறி வெயிட்டிங்.. பட்ஜெட்ல OLED டிஸ்பிளே.. SONY கேமரா.. 12GB ரேம்!

இப்போது, ஜூன் மாதம் ஓப்போ ரெனோ 12 ப்ரோ மாடலுடன், இந்த ஓப்போ ரெனோ 12 போனும் வெளியாகும் என்று ஓப்போ நிறுவனம் தெரிவித்திருக்கிறது. இதனிடையே, அந்த போனின் பீச்சர்கள் கசிந்துள்ளன. இதில் சிப்செட் மற்றும் கேமராவில் சிறிது மாற்றங்கள் இருக்கின்றன. முதலில் சீன வேரியண்ட்டின் பீச்சர்களை பார்த்துவிடுவோம்.

ஓப்போ ரெனோ12 அம்சங்கள் (OPPO Reno12 Specifications): இந்த போனில் 6.7 இன்ச் ஓஎல்இடி OLED) டிஸ்பிளே வருகிறது. 3டி கர்வ்ட் டிசைனில் 120Hz ரெஃப்ரெஷ் ரேட், 1.5K ரெசொலூஷன், 1200 நிட்ஸ் பீக் பிரைட்னஸ், கார்னிங் கொரில்லா கிளாஸ் விக்டஸ் 2 (Corning Gorilla Glass Victus 2) புரொடெக்சன் வருகிறது.

50 எம்பி மெயின் கேமராவானது, சோனி எல்ஒய்டி 600 (Sony LYT-600) சென்சாருடன் வருகிறது. சோனி ஐஎம்எக்ஸ்355 (Sony IMX355) சென்சாருடன் 8 எம்பி அல்ட்ரா வைடு கேமரா வருகிறது. 20X டிஜிட்டல் ஜூமிங் மற்றும் சாம்சங் ஜேஎன்5 (Samsung JN5) சென்சாருடன் 50 எம்பி டெலிபோட்டோ வருகிறது.

வேற மாறி வெயிட்டிங்.. பட்ஜெட்ல OLED டிஸ்பிளே.. SONY கேமரா.. 12GB ரேம்!

50 எம்பி செல்பீ ஷூட்டரானது, சாம்சங் ஜேஎன்5 சென்சாருடன் வருகிறது. ஆக்டா கோர் டைமன்சிட்டி 8250 ஸ்டார் ஸ்பீடு எடிஷன் 4என்எம் (Octa Core Dimensity 8250 Star Speed Edition 4nm) சிப்செட் உள்ளது. ஆண்ட்ராய்டு 14 ஓஎஸ் பேஸ்டு கலர்ஓஎஸ் 14 வருகிறது. 12 ஜிபி ரேம் + 256 ஜிபி மெமரி கொண்டிருக்கிறது.

மேலும், 12 ஜிபி ரேம் + 512 ஜிபி மெமரி மற்றும் 16 ஜிபி ரேம் + 256 ஜிபி மெமரி மற்றும் 16 ஜிபி ரேம் + 512 ஜிபி மெமரி கொண்டுள்ளது. 80W சூப்பர்வூக் சார்ஜிங் மற்றும் 5000mAh பேட்டரி வருகிறது. இந்த ஓப்போ ரெனோ 12 போனின் 12 ஜிபி + 256 ஜிபி வேரியண்ட்டின் விலை ரூ.31,605ஆக இருக்கிறது.

16 ஜிபி + 512 ஜிபி மெமரி கொண்ட ஹை-எண்ட் வேரியண்ட்டின் விலை ரூ.36,755ஆக இருக்கிறது. இதே விலையில் குளோபல் வேரியண்ட் வெளியாகலாம். ஆனால், சிப்செட்டில் டைமன்சிட்டி 8250-க்கு பதிலாக டைமன்சிட்டி 7050 (Dimensity 7050) வருவதாக மார்கெட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

அதேபோல 50 எம்பி மெயின் கேமரா + 8 எம்பி அள்ட்ரா வைடு ஆங்கிள் கேமரா + 2 எம்பி டெப்த் கேமரா வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆகவே, டெலிபோட்டோ கேமராவை இந்த குளோபல் வேரியண்ட்டில் எதிர்பார்க்க முடியாது. இதனால், இந்த போனின் விலை சீன வேரியண்ட்டின் விலையைவிட குறைவாக இருக்கவும் வாய்ப்புள்ளது.

More from GizBot

Best Mobiles in India

English summary
Oppo Reno12 With 50MP Camera, 12GB RAM Launch Global Markets in June Check Specifications Price
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X