மிரண்டு போவீங்க.. OLED டிஸ்பிளே.. SONY கேமரா.. 12GB ரேம்.. 20X ஜூமிங்.. 80W சார்ஜிங்.. எந்த மாடல்?
3டி கர்வ்ட் டிஸ்பிளே, 12ஜிபி ரேம், சோனி எல்ஒய்டி மெயின் கேமரா, சாம்சங் ஜேஎன்5 செல்பீ ஷூட்டர், 80W சூப்பர்வூக் சார்ஜிங் போன்ற பிரீமியம் அம்சங்கள் மட்டுமல்லாமல், அல்ட்ரா பிரீமியம் டிசைனில் ஓப்போ ரெனோ12 (OPPO Reno12) போன் வெளியாகி இருக்கிறது.
கார்னிங் கொரில்லா கிளாஸ் டிஸ்பிளே புரொடெக்சன், ஆண்ட்ராய்டு 14 ஓஎஸ், டெலிபோட்டோ லென்ஸ், IP65 தர ரெசிஸ்டன்ட் போன்ற மற்ற அம்சங்களிலும் மார்கெட்டை மிரள விட்டுள்ளது. இந்த ஓப்போ ரெனோ12 போனின் முழு அம்சங்கள், விலை மற்றும் விற்பனை விவரங்களை இப்போது பார்க்கலாம்.

ஓப்போ ரெனோ12 அம்சங்கள் (OPPO Reno12 Specifications): இந்த ஓப்போவில் 6.7 இன்ச் (2772 × 1240 பிக்சல்கள்) ஃபுல்எச்டிபிளஸ் (FHD+) டிஸ்பிளே வருகிறது. இதுவொரு 1.5K ரெசொலூஷன் மற்றும் 1200 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் கொண்ட 3டி கர்வ்ட் ஓஎல்இடி (3D Curved OLED) டிஸ்பிளே மாடலாகும்.
இந்த டிஸ்பிளேவுக்கு கார்னிங் கொரில்லா கிளாஸ் விக்டஸ் 2 (Corning Gorilla Glass Victus 2) புரொடெக்சன் வருகிறது. மேலும், 240Hz டச் சாம்பிளிங் ரேட் மற்றும் 2160Hz PWM டிம்மிங் ஃபிரிகொன்சி வருகிறது. அல்ட்ரா பிரீமியம் டிஸ்பிளே அம்சங்கள் வருவதால், வீடியோ அவுட்புட் பட்டையை கிளப்பும்படி இருக்கும்.
கேமராவிலும் பிரீமியம் சென்சார்கள் மற்றும் பீச்சர்கள் வருகின்றன. சோனி எல்ஒய்டி 600 (Sony LYT-600) சென்சார் கொண்ட 50 எம்பி மெயின் கேமரா + சோனி ஐஎம்எக்ஸ்355 (Sony IMX355) சென்சார் கொண்ட 8 எம்பி அல்ட்ரா வைடு ஆங்கிள் கேமரா + சாம்சங் ஜேஎன்5 (Samsung JN5) சென்சார் கொண்ட 50 எம்பி டெலிபோட்டோ வருகிறது.
இதுவொரு 2எக்ஸ் டெலிபோட்டோ கேமரா மாடலாகும். இந்த டிரிபிள் ரியர் கேமரா சிஸ்டமானது, 20X டிஜிட்டல் ஜூமிங், 4K வீடியோ ரெக்கார்டிங் சப்போர்ட் கொண்டிருக்கிறது. அதேபோல 4K வீடியோ ரெக்கார்டிங் சப்போர்ட் மற்றும் சாம்சங் ஜேஎன்5 சென்சார் கொண்ட 50 எம்பி செல்பீ ஷூட்டர் வருகிறது.
பிரீமியம் சென்சார்கள் வருவதால், கேமரா அவுட்புட் எதிர்பார்க்கும்படி இருக்கும். பிரீமியம் பர்ஃபாமென்ஸ் கொடுக்கும் ஆக்டா கோர் டைமன்சிட்டி 8250 ஸ்டார் ஸ்பீடு எடிஷன் 4என்எம் (Octa Core Dimensity 8250 Star Speed Edition 4nm) சிப்செட் மற்றும் மாலி ஜி610 எம்சி6 ஜிபியு (Mali G610 MC6 GPU) கிராபிக்ஸ் வருகிறது.
லேட்டஸ்ட் கலர்ஓஎஸ் 14 (ColorOS 14) மற்றும் ஆண்ட்ராய்டு 14 ஓஎஸ் வருகிறது. 12 ஜிபி ரேம் + 256 ஜிபி மெமரி, 12 ஜிபி ரேம் + 512 ஜிபி மெமரி மற்றும் 16 ஜிபி ரேம் + 256 ஜிபி மெமரி கொண்ட வேரியண்ட்கள் வருகின்றன. 16 ஜிபி ரேம் + 512 ஜிபி மெமரி கொண்ட ஹை-எண்ட் வேரியண்ட்டும் வருகிறது.
ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள், அண்டர் டிஸ்பிளே சென்சார், இன்பிராரெட் சென்சார், டைப்-சி ஆடியோ, IP65 டஸ்ட் & வாட்டர் ரெசிஸ்டன்ட் வருகிறது. இந்த ஓப்போவில் 5000mAh பேட்டரி மற்றும் 80W சூப்பர்வூர் சார்ஜிங் வருகிறது. சாப்ட் பீச், எபோனி பிளாக் மற்றும் மில்லினியம் சில்வர் ஆகிய கலர்கள் கொண்டிருக்கிறது.
12 ஜிபி + 256 ஜிபி மாடலின் விலை ரூ.31,605ஆகவும், 12 ஜிபி + 512 ஜிபி மாடலின் விலை ரூ.35,120ஆகவும், 16 ஜிபி + 256 ஜிபி மாடலின் விலை ரூ.35,120ஆகவும் இருக்கிறது. அதேபோல 16 ஜிபி + 512 ஜிபி மாடலின் விலை ரூ.36,755ஆக இருக்கிறது. சீனாவில் மே 31ஆம் தேதி முதல் விற்பனைக்கு வருகிறது. இந்தியாவில் விரைவில் எதிர்பார்க்கலாம்.


Click it and Unblock the Notifications








