யாரு சாமி அவன்.. SONY கேமரா.. 3D டிஸ்பிளே.. 12GB ரேம்.. 5000mAh பேட்டரி.. 80W சார்ஜிங்.. எந்த மாடல்?
இந்திய ஸ்மார்ட்போன் பிரியர்களை தட்டித்தூக்கும் கேமரா பீச்சர்கள் மட்டுமல்லாமல், டிஸ்பிளே, பேட்டரி மற்றும் சிப்செட் போன்ற பீச்சர்களிலும் பின்னிப்பெடல் எடுக்கும்படி ஓப்போ ரெனோ12 (OPPO Reno12) போனானது, குளோபல் மார்கெட்டில் களமிறங்கி இருக்கிறது. 3டி கர்வ்ட் ஓஎல்இடி டிஸ்பிளே, சோனி சென்சார் கொண்ட 50 எம்பி கேமரா, 80W ஃபாஸ்ட் சார்ஜிங் கொண்ட 5000mAh பேட்டரி, 12 ஜிபி ரேம் போன்ற பீச்சர்களை கொண்ட இந்த ஓப்போ ரெனோ12 5ஜி போனின் முழு விவரங்களை இப்போது பார்க்கலாம்.
ஓப்போ ரெனோ12 அம்சங்கள் (OPPO Reno12 Specifications): இந்த ஓப்போவில் 50 எம்பி மெயின் கேமரா + 8 எம்பி அல்ட்ரா வைடு கேமரா + 2 எம்பி மேக்ரோ கேமரா கொண்ட பிரீமியம் டிரிபிள் ரியர் கேமரா சிஸ்டம் (Triple Rear Camera System) வருகிறது. இந்த மெயின் கேமராவில் சோனி எல்ஒய்டி 600 (Sony LYT-600) சென்சார் வருகிறது.

மேலும், ஆப்டிகல் இமேஜ் ஸ்டெபிலைசேஷன் சப்போர்ட் கொண்டிருக்கிறது. அதேபோல அல்ட்ரா வைடு கேமராவில் சோனி ஐஎம்எக்ஸ்355 (Sony IMX355) சென்சார் வருகிறது. மேக்ரோவிலும் ஓம்னிவிஷன் ஓவிஓ2பி10 (Omnivision OVO2B10) சென்சார் வருகிறது. பிரீமியம் கேமரா சென்சார்கள் வருவதால், போட்டோகிராபி அவுட்புட்டை பக்கா குவாலிட்டியாக எதிர்பார்க்கலாம்.
இந்த ஓப்போ ரெனோ12 மாடலின் 32 எம்பி செல்பீ ஷூட்டரிலும் ஜிசி32ஈ2 (GC32E2) சென்சார் வருகிறது. ஆகவே, போர்ட்ராய்டு மற்றும் நைட் போட்டோகிராபியில் பக்கா அவுட்புட் எதிர்பார்க்கலாம். இந்த மெயின் மற்றும் செல்பீயில் 4K வீடியோ ரெக்கார்டிங் சப்போர்ட் வருகிறது. இந்த ஓப்போ கேமராவில் ஏஐ சப்போர்ட் வருகிறது.
ஆகவே, ஏஐ பெஸ்ட் பேஸ் (AI Best Face), ஏஐ ஸ்டூடியோ (AI Studio), ஏஐ எரைசர் (AI Eraser), ஏஐ கிளியர் பேஸ் (AI Clear Face) போன்ற பீச்சர்கள் வருகின்றன. 6.7 இன்ச் (2412 × 1080 பிக்சல்கள்) 3டி கர்வ்ட் ஓஎல்இடி டிஸ்பிளே வருகிறது. இந்த டிஸ்பிளேவில் ஃபுல்எச்டிபிளஸ் (FHD+) ரெசொலூஷன், 120Hz ரெஃப்ரெஷ் ரேட் மற்றும் 1200 நிட்ஸ் பிரைட்னஸ் வருகிறது.

இந்த ரெனோ12 மாடலுக்கு கார்னிங் கொரில்லா கிளாஸ் 7ஐ (Corning Gorilla Glass 7i) புரொடெக்சன் வருகிறது. மேலும், 394 பிபிஐ பிக்சல் டென்சிட்டி, 1.07 பில்லியன் கலர் டெப்த் மற்றும் 240Hz டச் சாம்பிளிங் வருகிறது. 12 ஜிபி ரேம் + 256 ஜிபி மெமரி மற்றும் 12 ஜிபி ரேம் + 512 ஜிபி மெமரி கொண்டிருக்கிறது.
12 ஜிபிக்கான விர்ச்சுவல் ரேம் மற்றும் 1 டிபிக்கான மைக்ரோஎஸ்டி சிலாட் வருகிறது. இந்த ஓப்போவில் ஆண்ட்ராய்டு 14 ஓஎஸ் பேஸ்டு கலர்ஓஎஸ் 14,1 (ColorOS 14.1) வருகிறது. ஆக்டா கோர் மீடியாடெக் டைமன்சிட்டி 7300 எனர்ஜி 4என்எம் சிப்செட் மற்றும் மாலி-ஜி615 எம்சி2 ஜிபியு கிராபிக்ஸ் கொண்டிருக்கிறது. ஆகவே, மிட்-பிரீமியம் பர்ஃபாமென்ஸ் எதிர்பார்க்கலாம்.
5000mAh பேட்டரி, 80W ஃபாஸ்ட் சார்ஜிங், டைப்-சி போர்ட் மற்றும் ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள் வருகின்றன. IP65 டஸ்ட் & ஸ்பிளாஷ் ரெசிஸ்டன்ட், இன்-டிஸ்பிளே ஃபிங்கர்பிரிண்ட் சென்சார் கொண்டிருக்கிறது. மேட் பிரவுன், சன்செட் பிளாக் மற்றும் அஸ்ட்ரோ சில்வர் ஆகிய மூன்று பிரீமியம் கலர்கள் வெளியாகி இருக்கிறது.
இந்த ஓப்போ ரெனோ12 போனின் 12 ஜிபி ரேம் + 256 ஜிபி மெமரி மாடலின் விலை ரூ.44,660ஆக இருக்கிறது. இப்போது, குளோபல் மார்கெட்டில் களமிறங்கி இருப்பதால், ஐரோப்பிய நாடுகளில் முதல் விற்பனை தொடங்குகிறது. அதன்பிறகு இந்தியா உள்பட மற்ற நாடுகளில் அறிமுகம் செய்யப்படும். இந்த போன் சீனாவில் ஏற்கனவே வெளியாகிவிட்டது.


Click it and Unblock the Notifications








