Home
Mobile

மிரட்டிவிட்டாப்ல ஓப்போ.. QUAD கர்வ்ட் டிஸ்பிளே.. SONY கேமரா.. 24GB ரேம்.. 5000mAh பேட்டரி.. எந்த மாடல்?

குவாட் கர்வ்ட் டிஸ்பிளே, கொரில்லா கிளாஸ் விக்டஸ் புரொடெக்சன், 50 எம்பி டெலிபோட்டோ கேமரா, 20X டிஜிட்டல் ஜூமிங், 24 ஜிபி ரேம், 1 டிபி மெமரி, 80W ஃபாஸ்ட் சார்ஜிங் மற்றும் 5000mAh பேட்டரி போன்ற அல்ட்ரா பிரீமியம் பீச்சர்களை கொண்ட ஓப்போ ரெனோ12 ப்ரோ (OPPO Reno12 Pro) போனானது, குளோபல் மார்கெட்டில் வெளியாகி இருக்கிறது. இந்த போனின் பட்ஜெட் எப்படி இருக்கிறது? என்னென்ன பீச்சர்களை பேக் செய்கிறது? உள்ளிட்ட முழு விவரங்கள் இதோ.

ஓப்போ ரெனோ12 ப்ரோ அம்சங்கள் (OPPO Reno12 Pro Specifications): இந்த ப்ரோவில் 6.7 இன்ச் (2412 x 1080 பிக்சல்கள்) குவாட் கர்வ்ட் டிஸ்பிளே (Quad Curved Display) வருகிறது. இதுவொரு ஃபுல்எச்டிபிளஸ் (FHD+) ரெசொலூஷன் மற்றும் 1200 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் கொண்ட அமோலெட் (AMOLED) டிஸ்பிளே மாடலாகும். இந்த டிஸ்பிளேவில் 120Hz ரெஃப்ரெஷ் ரேட், 240Hz டச் சாம்பிளிங் ரேட் வருகிறது.

மிரட்டிவிட்டாப்ல ஓப்போ.. QUAD கர்வ்ட் டிஸ்பிளே.. SONY கேமரா மாடல்!

மேலும், 394 பிபிஐ பிக்சல் டென்சிட்டி மற்றும் எச்டிஆர்10பிளஸ் (HDR10+) வருகிறது. மொத்தமாக கார்னிங் கொரில்லா கிளாஸ் விக்டஸ் 2 (Corning Gorilla Glass Victus 2) புரொடெக்சன் கொண்டிருக்கிறது. ஆட்டோபோகஸ் (Autofocus), ஆப்டிகல் இமேஜ் ஸ்டெபிலைசேஷன் (OIS) மற்றும் சோனி எல்ஒய்டி 600 (Sony LYT 600) சென்சார் கொண்ட 50 எம்பி மெயின் கேமரா வருகிறது.

சோனி ஐஎம்எக்ஸ்355 சென்சாருடன் 8 எம்பி அல்ட்ரா வைடு கேமரா வருகிறது. 2X ஆப்டிகல் ஜூமிங் (Optical Zooming), 20X டிஜிட்டல் ஜூமிங் (Digital Zooming) மற்றும் சாம்சங் ஜேஎன்5 (Samsung JN5) சென்சார் கொண்ட டெலிபோட்டோ கேமரா வருகிறது. இந்த ஓப்போ ரெனோ12 ப்ரோ மாடலில் 4K வீடியோ ஷூட் சப்போர்ட் கொண்ட 50 எம்பி செல்பீ கேமரா வருகிறது.

இந்த கேமராவில் சாம்சங் ஜேஎன்5 (Samsung JN5) சென்சார், ஏஐ போர்ட்ராய்டு (AI Portrait), ஏஐ ஸ்மார்ட் இமேஜ் (AI Smart Image), ஏஐ ஸ்டூடியோ (AI Studio) உள்ளிட்ட பீச்சர்கள் வருகின்றன. இந்த ஓப்போ ரெனோ12 ப்ரோ போனில் 12 ஜிபி ரேம் + 12 ஜிபி விர்ச்சுவல் ரேம் வருகிறது. ஆகவே, 24 ஜிபி ரேம் + 256 ஜிபி மெமரி கொண்ட வேரியண்ட் வருகிறது.

மிரட்டிவிட்டாப்ல ஓப்போ.. QUAD கர்வ்ட் டிஸ்பிளே.. SONY கேமரா மாடல்!

மேலும், 24 ஜிபி ரேம் + 512 ஜிபி மெமரி கொண்ட ஹை-எண்ட் வேரியண்ட்டும் வருகிறது. 1 டிபிக்கான மைக்ரோஎஸ்டி கார்டு பயன்படுத்தி கொள்ளலாம். ஆண்ட்ராய்டு 14 ஓஎஸ் கொண்ட ஆக்டா கோர் மீடியாடெக் டைமன்சிட்டி 7300 எனர்ஜி 4என்எம் சிப்செட் வருகிறது. மாலி-ஜி615 எம்சி2 ஜிபியு கிராபிக்ஸ் கார்டு மற்றும் கலர்ஓஎஸ் 14.1 கொண்டிருக்கிறது.

இன்-டிஸ்பிளே பிராக்சிமிடி சென்சார் (In-display Proximity Sensor), இன்-டிஸ்பிளே ஆப்டிகல் சென்சார் (In-display Optical Sensor) மற்றும் இன்பிராரெட் சென்சார் (Infrared Sensor) வருகிறது. யுஎஸ்பி டைப்-சி ஆடியோ (USB Type-C Audio), ஸ்ட்ரீடியோ ஸ்பீக்கர்கள் (Stereo Speakers) மற்றும் IP65 டஸ்ட் மற்றும் ஸ்பிளாஷ் ரெசிஸ்டன்ட் வருகிறது.

இந்த ஓப்போ ரெனோ12 ப்ரோவில் 80W சார்ஜிங் கொண்ட 5000mAh பேட்டரி வருகிறது. ஸ்பேஸ் பிரவுன் (Space Brown), சன்செட் கோல்டு (Sunset Gold) மற்றும் நெபுலா சில்வர் (Nebula Silver) ஆகிய கலர்கள் கொண்டிருக்கிறது. இந்த ரெனோ12 போனின் ஆரம்ப விலை ரூ.53,610ஆக இருக்கிறது. இந்தியாவில் விரைவில் வெளியாக இருக்கிறது.

More from GizBot

Best Mobiles in India

English summary
OPPO Reno12 Pro With 50MP Telephoto Camera, 80W Charging Launched Globally Specifications Price
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X