OPPO விஸ்வரூபம்.. 3D கர்வ்ட் டிஸ்பிளே.. SONY கேமரா.. 12GB ரேம்.. 5000mAh பேட்டரி.. எந்த மாடல்?
அல்ட்ரா பிரீமியம் லுக் மட்டுமல்லாமல், 3டி கர்வ்ட் டிஸ்பிளே, 12 ஜிபி ரேம், ஸ்பீடு எடிஷன் சிப்செட், சாம்சங் சென்சாருடன் டெலிபோட்டோ கேமரா, 80W சார்ஜிங் போன்ற அம்சங்களுடன் ஓப்போ ரெனோ12 ப்ரோ (OPPO Reno12 Pro) மாடல் களமிறங்கி இருக்கிறது.
ஓப்போ ரெனோ12 ப்ரோ அம்சங்கள் (OPPO Reno12 Pro Specifications): இந்த ப்ரோ மாடலில் 6.7 இன்ச் ஃபுல்எச்டிபிளஸ் (FHD+) 3டி கர்வ்ட் ஓஎல்இடி (3D curved OLED) டிஸ்பிளே வருகிறது. இந்த டிஸ்பிளேவில் 1.5K ரெசொலூஷன், 120Hz ரெஃப்ரெஷ் ரேட், 240Hz டச் சாம்பிளிங் ரேட் மற்றும் 1200 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் வருகிறது.

மேலும், 2160Hz PWM டிம்மிங் மற்றும் கார்னிங் கொரில்லா கிளாஸ் விக்டஸ் 2 (Corning Gorilla Glass Victus 2) புரொடெக்சன் வருகிறது. இந்த ஓப்போ ரெனோ12 ப்ரோ போனில் டிரிபிள் ரியர் கேமரா சிஸ்டம் (Triple Rear Camera System) வருகிறது. 50 எம்பி மெயின் கேமரா சோனி ஐஎம்எக்ஸ்890 (Sony IMX890) சென்சாருடன் வருகிறது.
8 எம்பி அல்ட்ரா வைடு கேமரா + சாம்சங் ஜேஎன்5 (Samsung JN5) சென்சாருடன் 50 எம்பி டெலிபோட்டோ கேமரா வருகிறது. 20X டிஜிட்டல் ஜூமிங், 2X ஹைபிரிட் ஆப்டிகல் ஜூமிங் (Hybrid Optical Zooming), 4K வீடியோ ரெக்கார்டிங் மற்றும் ஓஐஎஸ் டெக்னாலஜி சப்போர்ட் வருகிறது.
50 எம்பி செல்பீ ஷூட்டரானது, சாம்சங் ஜேஎன்5 சென்சாருடன் வருகிறது. இந்த செல்பீயில் 4K வீடியோ ரெக்கார்டிங் மற்றும் ஆட்டோபோகஸ் சப்போர்ட் வருகிறது. ஆக்டா கோர் டைமன்சிட்டி 9200 பிளஸ் ஸ்டார் ஸ்பீடு வெர்ஷன் 4என்எம் (Octa Core Dimensity 9200+ Star Speed Edition 4nm) சிப் உள்ளது.

ஆண்ட்ராய்டு 14 ஓஎஸ் (Android 14 OS) பேஸ்டு கலர்ஓஎஸ் 14 (ColorOS 14) மற்றும் இம்மார்டலிஸ் ஜி715 ஜிபியு (Immortalis G715 GPU) கிராபிக்ஸ் கார்டு வருகிறது. இந்த கிராபிக்ஸ் மிட்-பிரீமியம் கேமிங் பர்பஃபாமென்ஸ் கொடுக்கும். இந்த ஓப்போவில் 12 ஜிபி ரேம் +256 ஜிபி மெமரி கொண்ட வேரியண்ட் வருகிறது.
மேலும், 12 ஜிபி ரேம் +512 ஜிபி மெமரி மற்றும் 16 ஜிபி ரேம் + 512 ஜிபி மெமரி கொண்ட வேரியண்ட்களும் விற்பனைக்கு வர இருக்கின்றன. இந்த போனில் IP65 டஸ்ட் மற்றும் வாட்டர் ரெசிஸ்டன்ட், ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள், அண்டர் டிஸ்பிளே ஃபிங்கர்பிரிண்ட் சென்சார் மற்றும் இன்பிராரெட் சென்சார் வருகிறது.
யுஎஸ்பி டைப்-டி ஆடியோ (USB Type-C Audio), டூயல் நானோ சிம் சிலாட் (Dual Nano SIM Slot) வருகிறது. இந்த ஓப்போ போனானது, 5ஜி எஸ்ஏ/என்எஸ்ஏ மற்றும் 4ஜி வோஎல்டிஇ கனெக்டிவிட்டி கொண்டிருக்கிறது. பக்கா பேக்கப் கொண்ட 5000mAh பேட்டரி மற்றும் 80W சார்ஜிங் ஃபாஸ்ட் சார்ஜிங் சப்போர்ட் கொண்டுள்ளது.
ஷாம்பெயின் கோல்டு (Champagne Gold), எபோனி பிளாக் (Ebony Black), மற்றும் சில்வர் மேஜிக் பர்பிள் (Silver Magic Purple) ஆகிய கலர்களில் விற்பனைக்கு வர இருக்கிறது. 12 ஜிபி ரேம் + 256 ஜிபி மெமரி மாடலின் விலை ரூ.39,050ஆகவும், 12 ஜிபி ரேம் + 512 ஜிபி மெமரி மாடலின் விலை ரூ.43,315ஆகவும் இருக்கிறது.
மேலும், 16 ஜிபி ரேம் + 512 ஜிபி மெமரி கொண்ட ஹை-எண்ட் மாடலின் விலை ரூ.46,830ஆகவும் இருக்கிறது. சீன மார்கெட்டில் ஆர்டருக்கு கிடைக்கிறது. மே 31ஆம் தேதி முதல் விற்பனை தொடங்குகிறது. இந்தியாவில் அதற்கு அடுத்த சில வாரங்களில் எதிர்பார்க்கலாம்.


Click it and Unblock the Notifications








