Home
Mobile

தூள் கிளப்புது.. Oppo-ல இப்படியொரு மிட்பட்ஜெட் ஸ்பெஷல் எடிஷன் போனா? ஆர்டர் பறக்குது.. சூப்பர் தீபாவளி ரிலீஸ்..

ஒப்போ (Oppo) நிறுவனம் ஒப்போ ரெனோ 12 ப்ரோ 5ஜி (OPPO Reno 12 Pro 5G) ஸ்மார்ட்போனை கடந்த ஜூலை மாதம் அறிமுகம் செய்த பிறகு, நிறுவனம் இப்போது ஒப்போ ரெனோ 12 ப்ரோ 5ஜி மனிஷ் மல்ஹோத்ரா லிமிடெட் எடிஷன் (OPPO Reno12 Pro 5G Manish Malhotra Limited Edition) ஸ்மார்ட்போன் மாடலை இன்று அறிமுகம் செய்துள்ளது. இந்த பண்டிகை காலத்தை சிறப்பிக்கும் வகையில், கோல்டன் நிறத்துடன் அழகிய பூக்களை பிரதிபலிக்கும் ப்ளோரால் டிஸைனுடன் இந்த சாதனம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதன் விலை மற்றும் முழுவிபரம் இதோ.

டெக்னாலஜியுடன் ட்ரடிஷன் சேர்ந்த ஒரு கலவையாக இந்த புதிய Reno12 Pro 5G Manish Malhotra Limited Edition ஸ்மார்ட்போன் சாதனம் இப்போது இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதை ஒப்போ நிறுவனம் சிறந்த வடிவமைப்புடன் வழங்கி இந்த தீபாவளி பண்டிகையை ஒப்போ ரசிகர்களுக்காக சிறப்பித்துள்ளது. இந்த ஸ்மார்ட்போன் சாதனம் பிளாக் நிற பேக் பேனலுடன், கோல்டன் நிற டிசைனிங்கை பெற்றுள்ளது.

தூள் கிளப்புது.. Oppo-ல இப்படியொரு மிட்பட்ஜெட் ஸ்பெஷல் எடிஷன் போனா?

ஒப்போ ரெனோ 12 ப்ரோ 5ஜி மனிஷ் மல்ஹோத்ரா லிமிடெட் எடிஷன் (OPPO Reno12 Pro 5G Manish Malhotra Limited Edition):

ஒப்போ ரெனோ 12 ப்ரோ 5ஜி மனிஷ் மல்ஹோத்ரா லிமிடெட் எடிஷன் (OPPO Reno12 Pro 5G Manish Malhotra Limited Edition) ஸ்மார்ட்போன் சாதனம் இந்தியாவில் ரூ. 36999 என்ற விலையுடன் 12GB ரேம் + 256GB ஸ்டோரேஜ் உடன் ஒரே ஸ்டோரேஜ் வேரியண்ட் விருப்பத்துடன் வருகிறது. இது அசல் ஒப்போ ரெனோ 12 ப்ரோ 5ஜி விலை போன்றது.

புதிய ஒப்போ ரெனோ 12 ப்ரோ 5ஜி மனிஷ் மல்ஹோத்ரா லிமிடெட் எடிஷன் (OPPO Reno12 Pro 5G Manish Malhotra Limited Edition) சாதனம் பிளிப்கார்ட் தளம், ஒப்போ ஒன்லைன் ஸ்டோர் மற்றும் சில்லறை விற்பனையாளர் கடைகள் வழியாக ஆர்டர் செய்ய கிடைக்கிறது. இது அக்டோபர் 03, 2024 ஆம் தேதி முதல் ஷிப்பிங் செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

ஒப்போ ரெனோ 12 ப்ரோ 5ஜி மனிஷ் மல்ஹோத்ரா லிமிடெட் எடிஷன் சிறப்பம்சம் (OPPO Reno12 Pro 5G Manish Malhotra Limited Edition Specifications):

இந்த ஸ்மார்ட்போன் சாதனம் ஒப்போ ரெனோ 12 ப்ரோ 5ஜி(OPPO Reno12 Pro 5G) போனில் இருக்கும் அதே அம்சங்களை பெறுகிறது. 6.7" இன்ச் FHD+ உடன் 2412 × 1080 பிக்சல் உடன் OLED டிஸ்பிளேவுடன் வருகிறது . இது கர்வுடு டிஸ்பிளே உடன் 120Hz ரெஃப்ரஷ் ரேட் உடன் வருகிறது. இது 1200 பீக் பிரைட்னஸ் உடை வருகிறது. இது கார்னிங் கொரில்லா கிளாஸ் 7i பாதுகாப்புடன் வருகிறது.

இந்த ஸ்மார்ட்போன் மீடியாடெக் டைமென்சிட்டி 7300 சிப்செட் உடன் 12GB LPDDR4X ரேம் அம்சத்தை பெறுகிறது. இந்த ரேம் அம்சம் 256GB மற்றும் 512GB UFS 3.1 ஸ்டோரேஜ் உடன் வருகிறது. இதன் எக்ஸ்டர்னல் ஸ்டோரேஜ் அம்சம் 1TB வரை மைக்ரோஎஸ்டி (microSD) ஆண்ட்ராய்டு 14 உடன் கலர்ஓஎஸ் 14.1 (Android 14 with ColorOS 14.1) உடன் வருகிறது.

50MP மெயின் கேமரா, OIS, 8MP 112º அல்ட்ரா வைட் கேமரா, 50MP 2x டெலிபோட்டோ கேமரா உடன் 20x டிஜிட்டல் ஜூம்மிங் உடன் 4K 30 fps வீடியோ ரெக்கார்டிங் ஆதரவை பெறுகிறது. 50MP செல்பி கேமரா உடன் வருகிறது. USB Type-C போர்ட், 5G SA/ NSA, டூயல் 4G VoLTE, Wi-Fi 6 802.11 ax (2.4GHz + 5GHz), ப்ளூடூத் 5.4, Beidou, GPS, GLONASS, Galileo, QZSS, போன்ற அம்சங்களுடன் 5000mAh பேட்டரியை 80W SuperVOOC பாஸ்ட் சார்ஜிங் உடன் வழங்குகிறது.

Best Mobiles in India

English summary
OPPO Reno12 Pro 5G Manish Malhotra Limited Edition Price and Specification Sale Details In India
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X