குவியுது ஆர்டர்.. கம்மி விலையில ஸ்பெஷல் எடிஷன் போன்.. யார் தான் வேணான்னு சொல்லுவா? தீபாவளிக்கு OPPO GIFT..
ஒப்போ (Oppo) நிறுவனம் சத்தியம் செய்தது போல, கடந்த வாரம் இந்தியாவில் அதன் ஸ்பெஷல் எடிஷன் ஸ்மார்ட்போன் மாடலான புதிய ஒப்போ ரெனோ 12 ப்ரோ 5ஜி மனிஷ் மல்ஹோத்ரா லிமிடெட் எடிஷன் (OPPO Reno12 Pro 5G Manish Malhotra Limited Edition) ஸ்மார்ட்போன் மாடலை அறிமுகம் செய்தது. கடந்த வார அறிமுகத்திற்கு பிறகு, இந்த பண்டிகை காலத்தை சிறப்பிக்கும் வகையில், கோல்டன் நிறத்துடன் அழகிய பூக்களை பிரதிபலிக்கும் ப்ளோரால் டிஸைனுடன் OPPO Reno12 Pro 5G Manish Malhotra Limited Edition போனை ஒப்போ இன்று விற்பனைக்கு கொண்டுவந்துள்ளது.
தொழில்நுட்பத்துடன், பாரம்பரிய கலைநயத்தை சேர்ந்த ஒரு கலவையாக இந்த புதிய ஸ்பெஷல் எடிஷன் ஸ்மார்ட்போனை ஒப்போ அறிமுகம் செய்து, விற்பனைக்கு கொண்டுவந்துள்ளது. இந்த புதிய OPPO Reno12 Pro 5G Manish Malhotra Limited Edition சாதனம் இப்போது இந்தியாவில் விற்பனைக்கு வாங்க கிடைக்கிறது. இதன் விலை மற்றும் சலுகை விபரங்களை இப்போது பார்க்கலாம். மிட் பட்ஜெட் செக்மென்ட்டில் ஒரு தரமான ஸ்பெஷல் எடிஷன் போனை வாங்க விரும்புவோர்களுக்கு இது பெஸ்ட்டானது.

குவியுது ஆர்டர்.. கம்மி விலையில ஸ்பெஷல் எடிஷன் போன்.. யார் தான் வேணான்னு சொல்லுவா?
இந்த ஸ்மார்ட்போன் சாதனம் பிளாக் நிற பேக் பேனலுடன், கோல்டன் நிற டிசைனிங்கை பெற்றுள்ளது. ஒப்போ ரெனோ 12 ப்ரோ 5ஜி மனிஷ் மல்ஹோத்ரா லிமிடெட் எடிஷன் (OPPO Reno12 Pro 5G Manish Malhotra Limited Edition) ஸ்மார்ட்போன் சாதனம் இந்தியாவில் ரூ. 36999 என்ற விலையுடன் 12GB ரேம் + 256GB என்ற ஒற்றை ஸ்டோரேஜ் வேரியண்ட் மாடலாக வெளிவந்துள்ளது. இது OPPO e-Store மற்றும் பிளிப்கார்ட் வழியாக வாங்க கிடைக்கிறது.
இந்த போனுடன் கிடைக்கும் சலுகைகள் பற்றி பேசுகையில், இது 10% கேஷ் பேக் உடன் வருகிறது. உங்களிடம் SBI, HDFC Bank, ICICI Bank, Kotak Bank, IDFC First Bank, RBL Bank, Kotak Bank, AU Small Finance, Bank of Baroda Cards, மற்றும் DBS வங்கி அட்டைகள் இருந்தால் கூடுதல் சலுகையை நீங்கள் பெறலாம். இது 12 மாதங்கள் வரை நோ-காஸ்ட் EMI மற்றும் EMI விருப்பங்கள் கிடைக்கிறது.
ஒப்போ ரெனோ 12 ப்ரோ 5ஜி மனிஷ் மல்ஹோத்ரா லிமிடெட் எடிஷன் (OPPO Reno12 Pro 5G Manish Malhotra Limited Edition):
இது 10 லட்சம் மதிப்பிலான ராஃபில் சலுகையையும் தருகிறது. இதன் மூலம் கேஷ் பிரைஸ், OPPO Find N3 Flip, OPPO Pad மற்றும் இன்னும் பல பரிசுகளை வெல்லும் வாய்ப்பு கிடைக்கிறது. இந்த ஸ்மார்ட்போன் சாதனம் ஒப்போ ரெனோ 12 ப்ரோ 5ஜி(OPPO Reno12 Pro 5G) போனில் இருக்கும் அதே அம்சங்களை பெறுகிறது. 6.7" இன்ச் FHD+ உடன் 2412 × 1080 பிக்சல் உடன் OLED டிஸ்பிளேவுடன் வருகிறது.
இது கர்வுடு டிஸ்பிளே உடன் 120Hz ரெஃப்ரஷ் ரேட் உடன் வருகிறது. இது 1200 பீக் பிரைட்னஸ் உடை வருகிறது. இது கார்னிங் கொரில்லா கிளாஸ் 7i பாதுகாப்புடன் வருகிறது. இந்த ஸ்மார்ட்போன் மீடியாடெக் டைமென்சிட்டி 7300 சிப்செட் உடன் 12GB LPDDR4X ரேம் அம்சத்தை பெறுகிறது. இந்த ரேம் அம்சம் 256GB மற்றும் 512GB UFS 3.1 ஸ்டோரேஜ் உடன் வருகிறது.
இதன் எக்ஸ்டர்னல் ஸ்டோரேஜ் அம்சம் 1TB வரை மைக்ரோஎஸ்டி (microSD) ஆண்ட்ராய்டு 14 உடன் கலர்ஓஎஸ் 14.1 (Android 14 with ColorOS 14.1) உடன் வருகிறது. 50MP மெயின் கேமரா, OIS, 8MP 112º அல்ட்ரா வைட் கேமரா, 50MP 2x டெலிபோட்டோ கேமரா உடன் 20x டிஜிட்டல் ஜூம்மிங் உடன் 4K 30 fps வீடியோ ரெக்கார்டிங் ஆதரவை பெறுகிறது. 50MP செல்பி கேமரா உடன் வருகிறது.
USB Type-C போர்ட், 5G SA/ NSA, டூயல் 4G VoLTE, Wi-Fi 6 802.11 ax (2.4GHz + 5GHz), ப்ளூடூத் 5.4, Beidou, GPS, GLONASS, Galileo, QZSS, போன்ற அம்சங்களுடன் 5000mAh பேட்டரியை 80W SuperVOOC பாஸ்ட் சார்ஜிங் உடன் வழங்குகிறது. ஒரு தனித்துவமான போனை நீங்கள் வாங்க ஆசைப்பட்டால் இந்த ஸ்பெஷல் எடிஷன் போனை வாங்கலாம்.


Click it and Unblock the Notifications








