மொரட்டு சீரிஸ்.. பட்ஜெட்ல OLED டிஸ்பிளே.. SONY கேமரா.. 12GB ரேம்.. 5000mAh பேட்டரி.. எந்த மாடல்?
ஓஎல்இடி டிஸ்பிளே, சோனி கேமரா, மீடியாடெக் டைமன்சிட்டி சிப்செட், சாம்சங் செல்பீ ஷூட்டர், 12 ஜிபி ரேம், 1 டிபி மெமரி, 80W சூப்பர்வூக் சார்ஜிங் போன்ற பக்கா பிரீமியம் பீச்சர்களுடன் ஓப்போ ரெனோ12 சீரிஸ் (OPPO Reno12 Series) வெளியாக இருக்கிறது. வரும் ஜூன் 28ஆம் தேதி வெளியாக இருப்பதாக மார்கெட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இந்த வேரியண்ட்களின் முழு பீச்சர்கள் கசிந்துள்ளன. இந்த பீச்சர்களில், ஏற்கனவே வெளியான சீன வேரியண்ட்களைவிட மாறுபட்டுள்ளன. இதுகுறித்த விவரம் இதோ.
ஓப்போ ரெனோ12, ரெனோ12 ப்ரோ அம்சங்கள் (OPPO Reno12, Reno12 Pro Specifications): 6.7 இன்ச் ஃபுல்எச்டிபிளஸ் (FHD+) டிஸ்பிளே வருகிறது. ரெனோ 12 மாடலில் டூயல் கர்வ்ட் ஓஎல்இடி பேனலும், ரெனோ 12 ப்ரோவில் குவாட் கர்வ்ட் ஓஎல்இடி பேனலும் வருகிறது. கார்னிங் கொரில்லா கிளாஸ் 7ஐ (Corning Gorilla Glass 7i) புரொடெக்சன் ரெனோ 12 மாடலுக்கு வருகிறது.

கார்னிங் கொரில்லா கிளாஸ் விக்டஸ் 2 (Corning Gorilla Glass Victus 2) புரொடெக்சன் 12 ப்ரோ மாடலுக்கு வருகிறது. 120Hz ரெஃப்ரெஷ் ரேட் மற்றும் 1200 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் வருகிறது. ஆக்டா கோர் மீடியாடெக் டைமன்சிட்டி 7300 எனர்ஜி 4என்எம் (Octa Core MediaTek Dimensity 7300 Energy 4nm) சிப்செட் மாலி ஜி615 ஜிபியு கிராபிக்ஸ் வருகிறது.
இந்த ஓப்போ ரெனோ 12 சீரிஸ் மாடல்களில் ஆண்ட்ராய்டு 14 ஓஎஸ் (Android 14 OS) மற்றும் கலர்ஓஎஸ் 14.1 (ColorOS 14.1) வருகிறது. இந்த சீரிஸ்களின் கேமராவில் மாற்றங்கள் வருகின்றன. ஆகவே, ரெனோ 12 போனில் 50 எம்பி மெயின் கேமரா + 8 எம்பி அல்ட்ரா வைடு கேமரா + 2 எம்பி மேக்ரோ கேமரா கொண்ட டிரிபிள் ரியர் கேமரா வருகிறது.
மெயின் கேமராவில் சோனி எல்ஓய்டி 600 (Sony LYT-600) சென்சாரும், அல்ட்ரா வைடு கேமராவில் சோனி ஐஎம்எக்ஸ்355 (Sony IMX355) சென்சாரும், மேக்ரோவில் ஓம்னிவிஷன் ஓவிஓ2பி10 (Omnivision OVO2B10) சென்சாரும் வருகிறது. ரெனோ12 ப்ரோ மாடலிலும் சோனி எல்ஓய்டி 600 சென்சார் கொண்ட 50 எம்பி மெயின் கேமரா வருகிறது.

அதேபோல சோனி ஐஎம்எக்ஸ்355 சென்சாருடன் 8 எம்பி அல்ட்ரா வைடு கேமராவும், சாம்சங் ஜேஎன்5 சென்சாருடன் 50 எம்பி டெலிபோட்டோ கேமராவும் வருகிறது. இந்த டெலிபோட்டோவில் 20X டிஜிட்டல் ஜூம் மற்றும் 4K வீடியோ ரெக்கார்டிங் வருகிறது. ஜிசி32ஈ2 (GC32E2) சென்சார் கொண்ட 32 எம்பி செல்பீ கேமரா 12 மாடலில் வருகிறது.
அதுவே ப்ரோ மாடலில் சாம்சங் ஜேன்5 (Samsung JN5) சென்சாருடன் 50 எம்பி செல்பீ ஷூட்டர் வருகிறது. 2 செல்பீ ஷூட்டரிலும் 4K வீடியோ ரெக்கார்டிங் சப்போர்ட் உள்ளது. இன்-டிஸ்பிளே ஃபிங்கர்பிரிண்ட் சென்சார், இன்பிராரெட் சென்சார், ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள் மற்றும் IP65 டஸ்ட் மற்றும் ஸ்பிளாஷ் ரெசிஸ்டன்ட் வருகின்றன.
இந்த மாடல்களில் 5000mAh பேட்டரி மற்றும் 80W சூப்பர்வூக் சார்ஜிங் (SuperVOOC Charging) வருகிறது. ஓப்போ ரெனோ 12 போனின் ஆரம்ப விலை ரூ.31,605ஆகவும், ரெனோ 12 ப்ரோ போனின் ஆரம்ப விலை ரூ.39,050ஆகவும் இருக்கிறது. இது சீன வேரியண்ட்களின் விலையாகும். இதே பட்ஜெட்டில் குளோபல் வேரியண்ட்கள் வெளியாகலாம்.


Click it and Unblock the Notifications