போட்றா ஆர்டரு.. 3D டிஸ்பிளே.. OIS கேமரா.. 80W சார்ஜிங்.. 5000mAh பேட்டரி.. ரூ.1,500 கட் ஆச்சு.. எந்த மாடல்?
3டி கர்வ்ட் அமோலெட் டிஸ்பிளே, ஆப்டிகல் இமேஜ் ஸ்டெபிலைசேஷன் கேமரா, 80W சூப்பர்வூக் சார்ஜிங், 5000mAh பேட்டரி போன்ற பீச்சர்கள் மட்டுமல்லாமல், ஏஐ மாடலாக களமிறங்கிய ஓப்போ ரெனோ12 5ஜி (OPPO Reno12 5G) போனாது, பிளிப்கார்ட் டிஸ்கவுண்ட்டில் (Flipkart Discount) கம்மி விலைக்கு கிடைக்கிறது. ஏஐ லிங்க் பூஸ்ட், பீக்கன்லிங்க் போன்ற பிரத்யேக பீச்சர்களை கொண்ட இந்த ஓப்போ ரெனோ12 5ஜி போனின் விலை, டிஸ்கவுண்ட் மற்றும் முழு பீச்சர்களை இப்போது தெரிந்து கொள்ளலாம்.
சாம்சங் மற்றும் ஆப்பிள் போன்களில் ஏஐ பீச்சர்கள் கிடைப்பதால், மற்ற நிறுவனங்களும் ஏஐ பீச்சர்களை களமிறக்குகின்றன. இப்படி ஓப்போ ரெனோ12 5ஜி போனானது ஏஐ மாடலாக வெளியாகி விற்பனையில் சக்கைப்போடு போட்டது. அப்படி என்ன பீச்சர்கள் இருக்கிறது? என்பதை பார்ப்பதற்கு முன்பாக விலை மற்றும் டிஸ்கவுண்ட் விவரங்களை பார்ப்போம்.

ஓப்போ ரெனோ12 5ஜி பிளிப்கார்ட் விலை (OPPO Reno12 5G Flipkart Price): இந்த ஓப்போ போனில் 8 ஜிபி ரேம் + 256 ஜிபி மெமரி வேரியண்ட்டின் விலை ரூ.32,999ஆக இருக்கிறது. ஆனால், பிளிப்கார்ட் தளத்தில் இப்போது ரூ.1,500 உடனடி டிஸ்கவுண்ட் போக விற்பனைக்கு கிடைக்கிறது. அதுவே ஈஎம்ஐ மூலம் ஆர்டர் செய்தால், ரூ.3,299 டிஸ்கவுண்ட் கிடைக்கிறது.
எஸ்பிஐ கிரெடிட் கார்டு மூலம் ஆர்டர் செய்தால், இந்த டிஸ்கவுண்ட்டை பெற்று கொள்ளலாம். மேலும், ரூ.12,600 மதிப்பில் எக்ஸ்சேஞ்ச் சலுகையும் இந்த ஓப்போ போனுக்கு கிடைக்கிறது. ஆகவே, ரூ.31,499 பட்ஜெட்டில் இப்போது ஆர்டருக்கு கிடைக்கிறது. இந்த பட்ஜெட்டுக்கு பீச்சர்கள் பட்டையை கிளப்பும்படியே இருக்கின்றன. முதலில் ஏஐ பீச்சர்களை பார்ப்போம்.
இந்த ஓப்போ ரெனோ12 5ஜி போனில் எக்கச்சக்க ஏஐ கேமரா பீச்சர்கள் இருக்கின்றன. ஏஐ எரைசர் 2.0, ஏஐ பெஸ்ட் பேஸ், ஏஐ கிளியர் பேஸ், ஏஐ ஸ்டூடியோ மற்றும் ஏஐ ஸ்மார்ட் இமேஜ் போன்றவை கிடைக்கின்றன. ஏஐ லிங்க் பூஸ்ட் கிடைக்கிறது. இதன் மூலம் நெட்வொர்க் கனெக்டிவிட்டி பூஸ்ட் செய்யப்படும். இதுபோக ஏஐ ரெக்கார்டிங், ஏஐ டூல் பாக்ஸ் போன்றவை வருகின்றன.
முக்கியமான பீச்சராக பீக்கன்லிங்க் இருக்கிறது. இதன் மூலம் இன்டர்நெட் இல்லாமலேயே ப்ளூடூத் சிக்னல் மூலம் கால் செய்யும் வசதி கொடுக்கப்பட்டுள்ளது. ஆகவே, 200 மீட்டர்கள் வரையில் இன்டர்நெட் இல்லாமலும் ஏதாவது ப்ளூடூத் கனெக்டிவிட்டி கொண்ட மொபைல் இருந்தால், உங்களால் அதற்கு கால் செய்து கொள்ள முடியும். இப்படி பட்டையை கிளப்பி இருக்கிறது.
ஓப்போ ரெனோ12 5ஜி அம்சங்கள் (OPPO Reno12 5G Specifications): இந்த ரெனோவில் 6.7 இன்ச் (2412 × 1080 பிக்சல்கள்) மற்றும் ஃபுல்எச்டிபிளஸ் (FHD+) ரெசொலூஷன் கொண்ட 3டி கர்வ்ட் அமோலெட் டிஸ்பிளே வருகிறது. இந்த அமோலெட் பேனலில் கொரில்லா கிளஸ் 7ஐ பாதுகாப்பு, 120Hz ரெஃப்ரெஷ் ரேட் மற்றும் 1200 பீக் பிரைட்னஸ் கிடைக்கிறது. கலர்ஓஎஸ் 14.1 கிடைக்கிறது.
ஆண்ட்ராய்டு 14 ஓஎஸ் (Android 14 OS) கொண்ட ஆக்டா கோர் 4என்எம் மீடியாடெக் டைமன்சிட்டி எனர்ஜி எஸ்ஓசி (Octa Core 4nm MediaTek Dimensity 7300 Energy SoC) சிப்செட் கிடைக்கிறது. ஆப்டிகல் இமேஜ் ஸ்டெபிலைசேஷன், சோனி எல்ஒய்டி 600 சென்சார், 4K வீடியோ ரெக்கார்டிங் கொடுக்கும் 50 எம்பி மெயின் கேமரா இருக்கிறது. 8 எம்பி அல்ட்ரா வைடு + 2 எம்பி மேக்ரோ வருகிறது.
அல்ட்ரா வைடில் சோனி ஐஎம்எக்ஸ்355 சென்சாரும் மேக்ரோவில் ஓம்னிவிஷன் ஓவிஓ2பி10 சென்சாரும் கிடைக்கிறது. 32 எம்பி செல்பீ கேமராவில் கேலக்ஸிகோர் சென்சார் இருக்கிறது. இந்த ஓப்போ ரெனோ12 5ஜி போனில் 80W சார்ஜிங், 5000mAh பேட்டரி, ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள், இன்பிராரெட் சென்சார், IP65 ரெசிஸ்டன்ட் போன்ற மிட்-ரேஞ்ச் பீச்சர்களும் கிடைக்கின்றன.


Click it and Unblock the Notifications








