ஒப்போ ரெனோ 11 ப்ரோ 5ஜி: உங்களுக்குள் இருக்கும் புகைப்படக் கலைஞருக்கு சக்தி கொடுங்கள்!

ஒப்போ நிறுவனத்தின் ஒப்போ ரெனோ சீரிஸ் ஸ்மார்ட்போன்களுக்கு ஒவ்வொரு வருடமும் நல்ல வரவேற்பு உள்ளது. அதாவது இந்த போன்கள் தனித்துவமான
வடிவமைப்பு மற்றும் அட்டகாசமான அம்சங்களுடன் வெளிவருகின்றன. அதன்படி இந்த 2024-ம் ஆண்டில் ரெனோ சீரிஸ் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
அதாவது 11-வது சீரஸ் தற்போது அட்டகாசமான அம்சங்களுடன் வெளிவந்துள்ளது.
குறிப்பாக பிரமிக்க வைக்கும் கேமரா மற்றும் தனித்துவமான வடிவமைப்பு உடன் தற்போது ஒப்போ ரெனோ 11 ப்ரோ 5ஜி ஸ்மார்ட்போன் ரூ.39,999 விலையில் வெளிவந்துள்ளது. குறிப்பாக இந்த ஒப்போ ரெனோ 11 ப்ரோ 5ஜி சக்திவாய்ந்த சிப்செட் வசதியுடன் வெளிவந்துள்ளது. குறிப்பாக இந்த போனுக்கு நல்ல வரவேற்பு இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அதேபோல் ஹைப்பர்டோன் இமேஜ் எஞ்சின்இ சூப்பர்வூக்டிஎம், பிஎச்இ, கலர்ஓஎஸ் போன்ற தனியுரமி தொழில்நுட்ப அம்சங்களுடன் இந்த ஒப்போ ரெனோ 11 சீரிஸ் போன்கள் வெளிவந்துள்ளது. குறிப்பாக இந்த போன்களின் மென்பொருள் வசதி மற்றும் வடிவமைப்புக்கு அதிக கவனம் செலுத்தியுள்ளது ஒப்போ நிறுவனம்.
இதோ ஒப்போ ரெனோ 11 ப்ரோ 5ஜி ஸ்மார்ட்போனை பற்றிய எங்களுடைய ஃபர்ஸ்ட் இம்ப்ரெஷன்ஸ்...

அனைவரையும் கவரும் வடிவமைப்பு!
இந்த புதிய ஒப்போ ரெனோ போன்களுக்கு வழங்கப்பட்ட சாடின்-ஃப்ரோஸ்டேட் பூச்சு கண்ணைக் கவர்வதோடு மட்டுமல்லாமல் கறை இல்லாத, அழகிய தோற்றத்தையும் உறுதிசெய்கிறது. அதேபோல் குறிப்பான மென்மையான வடிவமைப்பைக் கொண்டுள்ளது இந்த போன்கள. மேலும் இந்த போன்களின் சன்ஷைன் ரிங் கேமரா அமைப்பு அனைவரையும் கவரும் வகையில் உள்ளது. பினபு மேம்பட்ட போர்ட்ரெய்ட் கேமரா ஒரு தனித்துவமான அனுபவத்தை வழங்கும்.
ஒப்போ ரெனோ 11 ப்ரோ 5ஜி ஸ்மார்ட்போனின் முன்புறம் மற்றும் பின்புறம் இரண்டிலும் 3டி கர்வ்டு கிளாஸ் கொடுக்கப்பட்டுள்ளது. எனவே இந்த சிறந்த
பாதுகாப்பு வசதி மற்றும் பார்ப்பதற்கு மிகவும் அருமையாக இருக்கும்.
குறிப்பாக ஒப்போ ரெனோ 11 ப்ரோ 5ஜி ஸ்மார்ட்போன் ஆனது ராக் கிரே மற்றும் பீல் ஒயிட் நிறங்களில் வெளிவந்துள்ளது. அதிலும் ஒப்போ ரெனோ 11
ப்ரோ 5ஜி ராக் கிரே பதிப்பு 7.59 மிமீ மெல்லியதாகவும், பீல் ஒயிட் பதிப்பு 7.66 மிமீ சிறிய தடிமனாகவும் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
பீல் ஒயிட் கொண்ட ஒப்போ ரெனோ 11 மாடலின் தடிமன் அதிகரிப்பதற்குக் காரணம் என்னவென்றால் அதன் மினுமினுப்பு பூச்சு அதிகம் சேர்க்கப்பட்டுள்ளது. கண்டிப்பாக மற்ற ரெனோ மாடல்களை விட இந்த ஒப்போ ரெனோ 11 மாடல்கள் தனித்துவமான வடிவமைப்பு மற்றும் அம்சங்களைக் கொண்டுள்ளன.
பீக் ஒயிட்டில் ரெனோ11 ப்ரோ 5ஜியின் பின்புறத்தில் 3.6 மில்லியன் பிரதிபலிப்பு மேற்பரப்புகளை உருவாக்க மூன்று அடுக்கு கண்ணாடிகள் சேர்க்கப்பட்டுள்ளது. இது போனுக்கு அதன் தனித்துவமான பளபளப்பைக் கொடுக்கிறது அதைப் பார்க்கும் அனைவரின் கண்களுக்கும் உடனடியாகப் பிடிக்கிறது.
அதேபோல் ஒப்போ ரெனோ 11 ப்ரோ 5ஜி ஸ்மார்ட்போனின் ராக் கிரே வேரியண்ட் ஆனது மிகவும் கிளாசிக்கல் தோற்றமுடைய ஸ்மார்ட்போனை தேடுபவர்களுக்கான சிறந்த போன் ஆகும். குறிப்பாக இந்த போனில் உள்ள சில்வர்-கிரே நிறம் ஆனது வெயிலில் மணல் பளபளப்பது போல் தெரிகிறது. குறிப்பாக இந்த ஒப்போ ரெனோ 11 ப்ரோ 5ஜி போனை தொடும்போது சிறந்த உணர்வைத் தருகிறது.

வேறலெவல் கேமரா அனுபவம் தரும்!
ஒப்போ ரெனோ 11 ப்ரோ 5ஜி ஸ்மார்ட்போன் ட்ரிபிள் ரியர் கேமரா அமைப்பு மற்றும் முன்புறத்தில் 32எம்பி கேமரவை கொண்டுள்ளது. இது எந்த
சூழ்நிலையிலும் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை எடுக்க நீங்கள் தயாராக இருப்பதை உறுதி செய்கிறது. குறிப்பாக இந்த போனின் உதவியுடன்
அட்டகாசமான படங்களை எடுக்க முடியும்.
இந்த போனின் பின்புறம் 50எம்பி சோனி ஐஎம்எக்ஸ்890 கேமரா கொடுக்கப்பட்டுள்ளது. இது ஒரு பெரிய கேமரா சென்சார் ஆகும். அதேபோல் இது வேகமான எப்/1.8 அபெர்ச்சர் லென்ஸுடன் இணைக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. குறிப்பாக இந்த போனின் கேமரா ஹைப்பர்டோன் இமேஜ் எஞ்சின் பயன்படுத்துகிறது. இது லைட்டிங் சூழ்நிலை கணக்கீட்டு புகைப்படத்தை சிறந்த தரத்திற்கு உயர்த்துகிறது. அதேபோல் ஏஐ அம்சம் உள்ளிட்ட பல்வேறு சிறப்பான கேமரா வசதிகளுடன் இந்த ஒப்போ ரெனோ 11 ப்ரோ 5ஜி மாடல் வெளிவந்துள்ளது. இந்த போனில் உள்ள ஏஐ தொழில்நுட்ப வசதி ஆனது குறைந்த-ஒளி சூழல்கள் போன்ற சவாலான காட்சிகளை பதிவு செய்ய உதவுகிறது. பின்பு இந்த போனின் லென்ஸ் நகரும் போது கூட சிறந்த புகைப்படம் எடுப்பதற்கான ஆப்டிகல் இமேஜ் ஸ்டெபிலைசேஷன் கொடுக்கப்பட்டுள்ளது.
இந்த போனில் உள்ள 2எக்ஸ் டெலிபோட்டோ லென்ஸ் 32எம்பி ரெசலூசன் கொண்டுள்ளது மற்றும் சோனி ஐஎம்எக்ஸ்709 சென்சார் மற்றும் எப்/2 லென்ஸுடன் இணைக்கப்பட்டுள்ளது. குறிப்பாக இந்த சென்சார் ஆனது ஆர்ஜிபிடபிள்யூ பிக்சல் கொண்டுள்ளது. அதேபோல் ஒப்போவின் போர்ட்ரெய்ட் எக்ஸ்பர்ட் இன்ஜின் உதவியுடன் பொக்கே போன்ற டிஎஸ்எல்ஆர் உடன் சில அல்ட்ரா மிருதுவான போர்ட்ரெய்ட் புகைப்படங்களை எடுக்க உதவுகிறது.

இந்த ஸ்மார்ட்போனின் பேக் பேனலில் உள்ள மூன்றாவது மற்றும் ஃபைனல் சென்சார் ஆனது 112 டிகிரி ஃபீல்ட் ஆஃப் வியூவை வழங்கும் 8எம்பி அல்ட்ராவைடு
கேமராவாகும். இதற்காக அல்ட்ரா-வைட் ஷூட்டர் சோனி ஐஎம்எக்ஸ்355 சென்சார் மற்றும் எஃப்/2.2 அபெர்க்ஷர் லென்ஸ் பயன்படுத்தப்பட்டுள்ளது.
செல்பீ கேமராவை பொறுத்தவரை, 32எம்பி சென்சார் உள்ளது இது ஆட்டோஃபோகஸ் மற்றும் எஃப்/2.4 அபெர்க்ஷர் உடனான சோனி ஐஎம்எக்ஸ்709 (ரியர் கேமராவில் உள்ள உள்ள ஜூம் கேமராவை போன்றது) சென்சாரை கொண்டுள்ளது. செல்பீகளை எடுப்பதில் உங்களுக்கு புத்திசாலித்தனமான 0.8எக்ஸ், 1எக்ஸ் மற்றும் 2எக்ஸ் ஜூம் லெவல்கள் கிடைக்கும். இது நீங்கள் விரும்பும் செல்பீயை பெற உதவுகிறது, அது நண்பர்கள் குழுவாக இருந்தாலும் அல்லது அட்டகாசமான போர்ட்ரெயிட் ஆக இருந்தாலும் சரி!
புதிய ஒப்போ ரெனோ 11 ப்ரோ 5ஜி ஸ்மார்ட்போனின் கேமராக்கள் 4ஏக், 30எஃப்பிஎஸ் வீடியோவை கைப்பற்றும் திறன் கொண்டுள்ளது என்பதால், இதன் நான்கு கேமராக்களுமே வ்லாக்கர்களுக்கான சரியான தேர்வாக இருக்கும் என்பதில் எந்த சந்தேகமும் வேண்டாம்.

விஷுவல் விருந்தை வழங்கும் ப்ரோ டிஸ்பிளே!
ஒப்போ ரெனோ 11 ப்ரோ 5ஜி ஆனது 2412x1080 பிக்சல்ஸ் ரெசல்யூஷன் கொண்ட மிருதுவான மற்றும் பெரிய 6.7-இன்ச் 3டி கர்வ்டு டிஸ்பிளே மற்றும் 120ஹெர்ட்ஸ் டைனமிக் ரெஃப்ரெஷ் ரேட் ஆகியவற்றை கொண்டுள்ளது, இது ஸ்க்ரீனில் காணும் விஷயங்கள் மென்மையாக இருப்பதை உறுதி செய்கிறது.
இதன் புத்திசாலித்தனமான 10-பிட் டிஸ்பிளேவானது 1 பில்லியனுக்கும் அதிகமான வண்ணங்களை காட்டுகிறது மற்றும் டிசிஐ-பி3 வண்ண வரம்பின் 100% உள்ளடக்கியது, இது பணக்கார தோற்றமுடைய காட்சிகளை உறுதி செய்கிறது.
எச்டிஆர்10பிளஸ் சான்றளிக்கப்பட்ட இதன் டிஸ்பிளே 950 நிட்ஸ் என்கிற பீக் எச்டிஆர் ப்ரைட்னஸை அடையும். ஒட்டுமொத்தமாக ஒப்போ ரெனோ 11 ப்ரோ 5ஜி
ஸ்மார்ட்போனில் பார்க்கும்போது, உங்களுக்கு பிடித்த ஓடிடி நிகழ்ச்சிகள் மற்றும் திரைப்படங்கள் அனைத்தும் டைனமிக், ரேன்ஜ் மற்றும் வண்ணமயமானதாக இருக்கும்.

அல்ட்ரா-ஸ்மூத் சாஃப்ட்வேர் எக்ஸ்பீரியன்ஸ் சக்திவாய்ந்த பெர்ஃபார்மென்ஸ் உடன் பேக்கப் செய்யப்படுகிறது!
ஒப்போ ரெனோ 11 ப்ரோ 5ஜி ஸ்மார்ட்போன் ஆனது கலர்ஓஎஸ் 14 உடன் வெளிவருகிறது. இது சமீபத்திய ஆண்ட்ராய்டு 14 ஓஎஸ்-ஐ அடிப்படையாகக் கொண்டது. கலர்ஓஎஸ் 14 ஆனது, ஒப்போ உருவாக்கியிருக்கும் மேம்பாடுகளை அனுபவிக்க உங்களை அனுமதிக்கும், கூடவே மென்மையான இன்டர்பேஸையும் வழங்கும்.
கலர் ஓஎஸ்14-ல் உள்ள முக்கிய மேம்பாடுகளை பொறுத்தவரை, புதிய ஃபைல் டாக், ஸ்மார்ட் டச் மற்றும் ஸ்மார்ட் இமேஜ் மேட்டிங் ஆகியவைகளை கூறலாம்.
ஸ்மார்ட் டாக் என்பது குவிக் ஆக டிராக்-அன்ட்-டிராப் செய்வதற்கான அணுக்களை வழங்க டெக்ஸ்ட், இமேஜ் அல்லது ஃபைல்களை எளிதாக சேமிக்க உதவும்.
ஸ்மார்ட் டச் என்பது தேர்ந்தெடுக்க முடியாத இமேஜ் மற்றும் டெக்ஸ்ட்டை ஸ்க்ரீனில் மூன்று விரல்களை ஸ்வைப் செய்வதன் மூலம் ஸ்கிரீன் ஷாட்டை எடுக்க
அனுமதிக்கிறது. அப்படியாக கைப்பற்றப்பட்ட இமேஜ் அல்லது டெக்ஸ்ட் ஆனது பின்னர் எளிதாக அணுக ஃபைல் டாக்கில் வைக்கப்படும்.
ஸ்மார்ட் இமேஜ் மேட்டிங் என்பது ஒரு படத்தில் உள்ள முன்புற பொருளை வெட்டி உடனடியாக பகிரக்கூடிய அல்லது பிற்கால பயன்பாட்டிற்காக சேமிக்கக்கூடிய ஒரு வெளிப்படையான பிஎன்ஜி ஆக மாற்ற அனுமதிக்கிறது.
கலர்ஓஎஸ்14 ஆனது உங்கள் ரெனோ 11 ப்ரோ 5ஜி ஸ்மார்ட்போன் ஆனது அதன் வாழ்நாள் முழுவதும் வேகமாகவும் மென்மையாகவும் இருப்பதை உறுதிசெய்ய ட்ரினிட்டி இன்ஜின் வடிவில் ஃபாஸ்ட் மற்றும் ஸ்மூத் மேம்பாடுகளை வழங்குகிறது. ட்ரினிட்டி இன்ஜின் ஆனது ஃபிளாக்ஷிப்-கிரேடு மல்டி டாஸ்கிங்கிற்காக, 72 மணிநேரம் வரையிலாக பேக்கிரவுண்டில் 28 ஆப்களை வைத்திருக்க அனுமதிக்கிறது. உங்கள் எல்லா பொருட்களுக்கும் அதிக இடம் இருப்பதை உறுதிசெய்ய, ரோம்-இல் பயன்படுத்தப்படாத இடத்தையும் இது சுருக்குகிறது. ரெனோ 11 ப்ரோ 5ஜி ஸ்மார்ட்போன் சிறந்த பேட்டரி லைஃப்பையும் உறுதி செய்யும் அதே வேளையில் உங்கள் அனுபவம் எப்போதும் மென்மையானதாக இருப்பதை உறுதிசெய்ய உங்கள் பழக்கங்களையும் கற்றுக்கொள்ளும்.

இவை அனைத்தும் ஒப்போ ரெனோ 11 ப்ரோ 5ஜி ஸ்மார்ட்போனை இயக்கும் மீடியாடெக் டைமன்சிட்டி 8200 சிப்செட் மூலம் சாத்தியமாகிறது. இந்த 4என்எம்
ஆர்கிடெக்சர் சிப் ஆனது 4600எம்ஏஎச் பேட்டரியை மிகவும் எளிதாக ஒரு நாள் முழுவதும் நீடிப்பதை உறுதி செய்யும் அதே வேளையில் பல பணிகளை எளிதாக
செய்யவும் அனுமதிக்கிறது.
இனி உங்கள் போனில் பேட்டரி சார்ஜ் குறைந்துவிட்டது என்ற கவலையே வேண்டாம். காரணம் இந்த ஒப்போ ரெனோ 11 ப்ரோ 5ஜி ஸ்மார்ட்போன் சாதனம் 80W சூப்பர்வூக் சிடிஎம் சார்ஜர் உடன் வருகிறது. இது 5 நிமிடத்தில் 24% சார்ஜ்ஜை நிரப்புகிறது.

இதுமட்டுமின்றி, சிறந்த நெட்வொர்க் சேவையை வழங்க, ஒப்போ நிறுவனம் இப்பொது லிங்க்பூஸ்ட் தொழில்நுட்பத்தை பயனப்டுத்துகிறது. இது நெட்வொர்க் டிரான்ஸ்மிசன் மற்றும் ரிசெப்டின் இணைப்பது நிலையாக வழங்குகிறது. இதன் மூலம் தரமான மற்றும் நம்பகமான சிக்னல் உறுதி செய்யப்படுகிறது. இதன் மூலம் 73% வேகமான டிரான்ஸ்மிசன் சக்தி மற்றும் 17% வலுவான ரிசெப்டின் கிடைக்கிறது. அதிக நெரிசலான இடங்களிலும் கூட, லிங்க்பூஸ்ட் தடையற்ற இணைப்பை உறுதி செய்கிறது.

கிஸ்பாட் பார்வையில், ஒப்போ ரெனோ11 ப்ரோ 5ஜி இந்த வருடத்தில் ஹாட்டஸ்ட் ஸ்மார்ட்போன் மாடல் 2024 ஆக கருதப்படுகிறது. காரணம், இது பயனர்களை எந்தவித்தலும் சோர்வடையவில்லை. இது தரமான கேமரா மற்றும் போட்டோகிராபி அம்சத்தை வழங்குகிறது. அல்ட்ரா ஸ்லிம் டிஸைனுடன் உங்கள் கரங்களை அழகு சேர்க்கிறது. புதிய தலைமுறை கலர்ஓஎஸ் 14 உடன், மீடியாடெக் டைமென்சிட்டி 8200 சிப்செட் உடன் வருகிறது. அல்ட்ரா பிஆஸ்ட் சார்ஜிங் என்று என்ன தரப்பிலும் சிறந்த ஆல்ரவுண்டர் போனாக இது திகழ்கிறது.
உண்மையில், இது தரமான கேமரா, சக்தி வாய்ந்த பெர்பார்மென்ஸ், நீடித்து நிலைக்கும் பேட்டரி, மிரட்டலான டிசைன் என்று ஸ்மார்ட்போன் பிரியர்களை கவரும் அத்தனை அம்சங்களையும் இந்த ஸ்மார்ட்போன் பூர்த்தி செய்து ஆல்ரவுண்டர் போனாக 2024 இல் களமிறங்கியுள்ளது.

இது இந்தியாவில் ரூ.39,999 விலையில் ஜனவரி 18ம் தேதி 2024 முதல் விற்பனைக்கு வருகிறது. இது பிளிப்கார்ட் வழியாகவும், ஒப்போ இ-ஸ்டோர்ஸ் வழியாகவும் ரீடெய்ல் சில்லறை விற்பனையாளர் கடைகள் வழியாகவும் வாங்க கிடைக்கும். இந்த ஸ்மார்ட்போனின் விற்பனையை சுவாரஸ்யமாக்க நிறுவனம் இப்போது சில சலுகைகளையும் அறிவித்துள்ளது.
- வாடிக்கையாளர்கள் பிளிப்கார்ட், ஒப்போ இ-ஸ்டோர் மற்றும் எஸ்பிஐ கார்டு, ஐசிஐசிஐ வங்கி, ஒன் கார்டு, ஐடிஎப்சி பர்ஸ்ட் பேங்க் மற்றும் பேங்க் ஆப் பரோடா கிரெடிட் கார்டு பயனர்கள் இப்போது ஆன்லைன் மற்றும் ஆப்லைன் சில்லறை விற்பனையாளர்களிடம் இருந்து ரூ.4,000 கேஷ்பேக் சலுகையை பெறலாம். இதில் 9 மாதங்கள் நோ-காஸ்ட் EMI விருப்பமும் அடங்கும்.
- வாடிக்கையாளர்கள் தங்கள் வசதிக்கேற்ப EMI தவணை மற்றும் காலம் குறித்த விருப்பங்களை தேர்வு செய்யலாம்.
- கூடுதலாக, பஜாஜ் ஃபின்சர்வ், டிவிஎஸ் கிரெடிட், ஹோம் கிரெடிட், எச்டிபி ஃபைனான்சியல் சர்வீசஸ் மற்றும் ஐடிஎஃப்சி ஃபர்ஸ்ட் பேங்க் போன்ற முன்னணி நிதியாளர்களிடமிருந்து ஜீரோ டவுன் பேமென்ட் மற்றும் குறைந்த கட்டணத் திட்டங்களின் பலனை வாடிக்கையாளர்கள் அனுபவிக்க முடியும்.
- ஒப்போ பிராண்டின் தீவிரமான விசுவாசமான வாடிக்கையாளர்களுக்கு ரூ.4000 மதிப்பிலான எக்ஸ்சேஞ்ச் + லாயல்டி போனஸ் கிடைக்கிறது.
- வாடிக்கையாளர்கள் UPI மூலம் பணம் செலுத்தும் பொழுது, ஒப்போ ரெனோ11 ப்ரோ 5ஜி வாங்கும்போது உடனடி 7.5% கேஷ்பேக்கைப் பெற முடியும்.
- இந்த ஒப்போ ரெனோ11 ப்ரோ 5ஜி போனுடன் ஒப்போ என்கோ ஏர்2 ப்ரோ டிவைஸை வெறும் ரூ.2,999 விலையில் வாங்கலாம்.


Click it and Unblock the Notifications








