ஒப்போ ரெனோ11 5ஜி: சுப்பீரியர் தர பெர்பார்மென்ஸ் உடன் தரமான போர்ட்ரைட் போட்டோகிராஃபி

ஒப்போவின் புதிய ஸ்மார்ட்போன் மாடலான ஒப்போ ரெனோ11 5ஜி சாதனம் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டு மக்களின் கவனத்தை கவர்ச்சிகரமாக ஈர்த்து வருகிறது. இந்த ஸ்மார்ட்போன் சாதனம் இப்போது அறிமுக விற்பனை விலையாக ரூ.29,999 என்ற துவக்க விலையில் சிறந்த கேமரா அம்சத்துடன், முழு நாள் நீடித்து உழைக்கும் பேட்டரி மற்றும் பவர்புள் பிராசஸர் உடன் ஒரு மிரட்டல் ஒப்போ ரெனோ11 5ஜி ஸ்மார்ட்போனாக வெளிவந்துள்ளது.
இதோ ஒப்போ ரெனோ11 5ஜி பற்றிய முதல் பார்வை உங்களுக்காக...

எலெகண்ட் கண்கவர் டிசைன்
இதன் எலெகண்ட் கண்கவர் டிசைன் நமது கண்களை கவர்கிறது. ஒப்போ ரெனோ சீரிஸ் எப்போதும் அதனுடன் கவர்ச்சிகரமான டிசைனிற்கு புகழ்பெற்றது. ஒப்போ ரெனோ11 5ஜி போனும் இந்த வரிசையில் அட்டகாசமான வடிவமைப்பு பெற்றுள்ளது. ஒப்போ ரெனோ11 5ஜி டிசைன் இயற்கையால் ஈர்க்கப்பட்டு, நேர்த்தியான வேறுபாடுகள் மற்றும் கான்ட்ராஸ்ட் கலவையாக நம்மை ஈர்த்துள்ளது.
ஒப்போ ரெனோ11 5ஜி டூயல் 3டி கர்வுடு டிசைன் உடன் பிரமாதமான வடிவமைப்பை கொண்டுள்ளது. இது 7.99எம்எம் அளவு மெலிதாக அமைக்கப்பட்டுள்ளது. இது மிகவும் ஸ்லிம்மான டிசைன் உடன் நம்மை ஆச்சரியப்படுத்துகிறது. இதன் எடை வெறும் 182கிராம் மட்டுமே உள்ளது. இதன் டிசைன் ஒரு முழுமையான படைப்பு என்றே நாம் கூறலாம். ஒப்போ ரெனோ11 5ஜி போனின் இரண்டு பக்கங்களும் மிக நேர்த்தியாக வடிவமைக்கப்பட்டுள்ளது.
திரைப்படங்களை பார்க்க மிகவும் ஏற்ற ஸ்மார்ட்போன் சாதனமாக ஒப்போ ரெனோ11 5ஜி இருக்கிறது. இதன் புதிய சன்ஸைன் ரிங்ஸ் உடன் வரும் கேமரா மேட்ரிக்ஸ் டிசைன் கட்டாயம் உங்கள் கண்களை கவரச் செய்கிறது. நேரடியான சூரிய ஒளியில் இந்த போன் படும்போது, இதன் கேமரா ரெஃப்ளெக்ஷன் மற்றும் கேமரா ரிங் உண்மையில் நம்மை வியக்க வைக்கிறது. இதனால் தான் ஒப்போ இதை சண்ஸைன் ரிங் என்று பெயரிட்டுள்ளது போல் தெரிகிறது.
ஒப்போ நிறுவனம் ஒப்போ ரெனோ11 5ஜி ஸ்மார்ட்போன் சாதனத்தை இரண்டு நிறங்களில் வழங்குகிறது. இதையும் நிறுவனம் இயற்கை உடன் தழுவிக்கொண்டது போல் தெரிகிறது. இது வேவ் கிரீன் நிறத்தை மிகவும் திறமையாக உருவாக்கியுள்ளது. புதிய தொழில்நுட்பத்தை பயன்படுத்தி, ஒப்போ இந்த வேவ் கிரீன் நிறத்தை உருவாக்கியுள்ளது. பொலிவுடன் காணப்படும் ஒரு பட்டு போன்ற வானம், பச்சை நிற கடலில் ஏற்பட்ட அலைகள் போல காட்சியளிக்கிறது.
அடுத்த நிறமாக ராக் க்ரேய் திகழ்கிறது. இது ஒப்போவின் பிரத்தியேகமான ஒப்போ க்ளோவ் பிராசஸ் மூலம் உருவாக்கப்பட்டுள்ளது. இது சிறிய மைக்ரோஸ்கோபிக் கிரிஸ்டல் மூலம் பேக் பேனலில் அமைக்கப்பட்டுள்ளது. இதன் சில்வர் க்ரேய் நிறத்தின் மேல் ஒளிப்படும் பொழுது இது பிரகாசிக்கிறது. இது கண்ணை கவர்கிறது.

மனதை மயக்கும் டிஸ்பிளே
ஒப்போ ரேனோ 11 5ஜி ஸ்மார்ட்போன் ஆனது மனதை மயக்கும் டிஸ்பிளே வசதியுடன் வெளிவந்துள்ளது. மற்ற நிறுவனங்களை விட டிஸ்பிளே பகுதியில் அதிக கவனம் செலுத்துகிறது ஒப்போ. குறிப்பாக 93.6% ஸ்க்ரீன்-டூ-பாடி ரேஷியோ உடன் இந்த ஒப்போ ரெனோ 11 5ஜி போன் வெளிவந்துள்ளது. பின்பு மைக்ரோஸ்கோபிக் 1.57எம்எம் சைடு பெசல்ஸ் வசதியைக் கொண்டுள்ளது இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன். 6.7-இன்ச் மற்றும் 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் கொண்ட டிஸ்பிளே உடன் இந்த போன் வெளிவந்துள்ளது. மேலும் இந்த டிஸ்பிளேவை மென்மையாகவும், வேகமாகவும் பயன்படுத்த முடியும். அதேசமயம் இந்த போனின் 10-பிட் ஸ்கிரீன் ஆனது சிறந்த திரை அனுபவத்தைக் கொடுக்கும்.
இந்த ஒப்போ போனில் உள்ள எச்டிஆர் 10 பிளஸ் மற்றும் எச்டிஆர் அம்சங்கள் ஸ்ட்ரீமிங் செய்யும்போது சிறந்த திரை அனுபவத்தை வழங்கும். பின்பு இதில் 950 நிட்ஸ் ப்ரைட்னஸ் உள்ளது. இது எந்த லைட்டிங் சூழ்நிலைக்கும் ஏற்றது. சுருக்கமாகக் கூற வேண்டும் என்றால் இதன் டிஸ்பிளே வசதிக்கு அதிக கவனம் செலுத்தியுள்ளது ஒப்போ.
ஒப்போ ரேனோ 11 5ஜி ஸ்மார்ட்போனின் ஒரியாலிட்டி ஆடியோ மற்றும் ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள் சிறந்த ஆடியோ அனுபவத்தை வழங்கும். இதுதவிர மீடியா பிளேபேக், அலாரங்கள், அறிவிப்புகள் மற்றும் பலவற்றிற்கான 300% அல்ட்ரா வால்யூம் மோட் வழங்குகிறது இந்த ஒப்போ ஸ்மார்ட்போன். இது தனித்துவமான அனுபவத்தை வழங்கும் என்றே கூறலாம்.

மகிழ்ச்சி தரும் கேமராக்கள்
ஒப்போ ரேனோ 11 5ஜி போனின் பின்புறத்தில் போர்ட்ரெய்ட் அமைப்பில் மூன்று கேமராக்கள் மற்றும் முன்பக்கத்தில் செல்ஃபி ஷூட்டர் வசதியும் உள்ளன. குறிப்பாக இந்த போன் 32எம்பி செல்பி கேமராவைக் கொண்டுள்ளது. இந்த செல்பி கேமராவில் ஓம்னிவிஷன் ஓவி32சி சென்சார் மற்றும் எப்/2.4 அப்பரேச்சர் லென்ஸ் பயன்படுத்தப்பட்டுள்ளது. மேலும் இது உயர் தெளிவுத்திறன் கொண்ட சென்சாரை பயன்படுத்துவதால் தரமான புகைப்படங்களை எடுக்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த போனின் பின்புறத்தில் மூன்று சென்சார் கேமராக்கள் இடம்பெற்றுள்ளன. குறிப்பாக இந்த மூன்று கேமராக்கள் உதவியுடன் அற்புதமான படங்களை எடுக்க முடியும். குறிப்பாக 50எம்பி சோனி ஒய்டி600 சென்சார் வசதியைக் கொண்டுள்ளது இந்த அசத்தலான ஸ்மார்ட்போன்.

அதன் பெரிய 1/1.95" சென்சார் அளவு மற்றும் வேகமான எப்/1.8 அபெர்ச்சர் லென்ஸுடன் ஆப்டிகல் இமேஜ் ஸ்டெபிலைசேஷன் உடன், ரெனோ11 5ஜி ஸ்மார்ட்போனின் மெயின் ஷூட்டர், லைட்டிங் சூழ்நிலையை பொருட்படுத்தாமல் பாயிண்ட் அண்ட்-ஷூட் ஹை-ரெஸ் மாஸ்டர்பீஸ்களை உருவாக்குகிறது.
ஒப்போ ரெனோ11 5ஜி ஸ்மார்ட்போனில் உள்ள டெலிஃபோட்டோ ஷூட்டர் ஆனது எஃப்/2 அபெர்ச்சர் லென்ஸுடன் கூடிய 32எம்பி சோனி ஐஎம்எக்ஸ்709 சென்சார் ஆகும். 47மிமீ சமமான குவிய நீளம் கொண்ட இந்த்ஸ் ஷூட்டர் ஆனது மனிதக் கண்ணின் பார்வையை போன்றே, போர்ட்ரெய்ட்களுக்கான கிளாசிக்கல் பார்வையுடன் மிருதுவான மற்றும் விரிவான புகைப்படங்களை கைப்பற்றுகிறது. அதன் மேம்பட்ட இன்-சென்சார் ஜூம் தொழில்நுட்பத்துடன், நீங்கள் ரெனோ11 5ஜி ஸ்மார்ட்போனில் இருந்து தரமான ஜூம் செயல்திறனை அனுபவிக்க முடியும், இதன்கீழ் 5எக்ஸ் ஜூம் வரை மிருதுவான காட்சிகளை பிடிக்கலாம்.
ரெனோ11 5ஜி ஸ்மார்ட்போனில் உள்ள கடைசி கேமரா 8எம்பி அல்ட்ரா-வைட் சென்சார் ஆகும், இது 112-டிகிரி பீல்ட் ஆப் வியூவுடன் சோனி ஐஎம்எக்ஸ்355 சென்சார் மற்றும் எப்/2.2 அபெர்ச்சர் லென்ஸை பயன்படுத்துகிறது, இது உலகை பரந்த கண்ணோட்டத்தில் ஆராய உங்களை அனுமதிக்கிறது.
வீடியோவை பொறுத்தவரை, ஒப்போ ரெனோ11 5ஜி ஸ்மார்ட்போனின் முன் மற்றும் பின்புற கேமராக்கள் 4கே தரத்தில் 30எப்பிஎஸ் வரை ஷூட் செய்ய முடியும். ரெனோ11 5ஜி ஸ்மார்ட்போனின் கேமராக்கள் சினிமா காட்சிகள், வ்லாகிங் மற்றும் பிரபலமான வீடியோ இயங்குதளங்களில் பதிவேற்றம் செய்ய ஏற்றது.
விலைக்கு ஏற்ற சில்க்கி ஸ்மூத் பெர்ஃபார்மென்ஸ்!
புதிய ரெனோ11 5ஜி ஸ்மார்ட்போனை இயக்குவது மீடியாடெக் டைமன்சிட்டி 7050 சிப்செட் ஆகும், இது 6என்எம் செயல்முறையை பயன்படுத்தி வடிவமைக்கப்பட்டுள்ளது. இரண்டு பெர்ஃபார்மென்ஸ் கோர்கள் மற்றும் ஆறு ஏஃபிஷியன்ஸி கோர்களுடன், ரெனோ11 5ஜி ஸ்மார்ட்போனானது ஒரு தடையற்ற, மென்மையான அனுபவம் மற்றும் ஈர்க்கக்கூடிய சக்தி நிர்வாகத்தை வழங்குகிறது.
ரெனோ11 5ஜி ஸ்மார்ட்போன் ஆனது உங்களின் அனைத்து கேமிங், புகைப்படம் எடுத்தல் மற்றும் இசைத் தேவைகளுக்கு 256ஜிபி வரையிலான இன்டர்னல் ஸ்டோரேஜை வழங்குகிறது. இருப்பினும், நீங்கள் இன்னும் கொஞ்சம் ஸ்பேஸை விரும்பினால், மைக்ரோ எஸ்டி கார்டு ஸ்லாட் வழியாக 2டிபி வரை இன்டர்னல் ஸ்டோரேஜை நீட்டிக்கலாம்.

ஆண்ட்ராய்டு 14 அடிப்படையிலான ஓப்போவின் கலர்ஓஎஸ் 14 ஆனது மல்டி டாஸ்கிங் அனுபவத்தை உயர்த்துகிறது. ஓப்போ11 5ஜி போனில் வழங்கப்படும் டிரினிட்டி என்ஜின் மற்றும் 8 ஜிபி ரேம் உடனான 8 ஜிபி டைனமிக் ரேம்முக்கு நன்றிகள். ஃபைல் டாக், ஸ்மார்ட் இமேஜ் மேட்டிங் மற்றும் ஸ்மார்ட் டச் போன்ற புதிய அம்சங்களுடன், மல்டி டாஸ்கிங் மற்றும் சேவிங் மற்றும் அக்ஸசிங் இமேஜஸ், டெக்ஸ்ட் மற்றும் ஃபைல்ஸ் ஆப்கள் முழுவதையும் எளிதாக்குகிறது, அனைத்துக்கும் கலர்ஓஎஸ் 14-க்கு நன்றிகள்.
கலர்ஓஎஸ் ஆனது, ரெனோ11 5ஜி போனை முடிந்தவரை ஸ்மூத்தாகவும், ஸ்டெபிளாகவும் ஆக்குகிறது, டிரினிட்டி என்ஜின் ஆப்டிமைசேஷனானது, ரோம், ரேம் மற்றும் சிபியு ஆகியவற்றை மேம்படுத்துவதன் மூலம், நீங்கள் 28 ஆப்ஸ் வரை பேங்கிரவுண்டில் இயங்குவதை உறுதிசெய்கிறது, இதை ஸ்டோரேஜில் சேவ் செய்யலாம் மற்றும் உங்கள் பழக்கங்களை சிறந்த பேட்டரி ஆயுளுடன் கற்றுக்கொள்ளலாம்.
பேட்டரி ஆயுளைப் பற்றி பேசுகையில், பெரிதான 5,000mAh பேட்டரி பேக்கானது, ஒரு நாள் முழுவதும் மெசேஜிங், பிரவுசிங், லிசனிங், வாட்ச்சிங் மற்றும் விலாகிங் ஆகியவற்றை சிங்கிள் சார்ஜில் டெலிவர் செய்கிறது. இறுதியாக உங்களது பேட்டரி லெவல் குறையும்போது, 67 வாட்ஸ் சூப்பர்வூக்டிஎம் சார்ஜர் மூலம் 45 நிமிடங்களில் முழு சார்ஜ் உடன் வெறும் 10 நிமிடங்களில் 33 சதவீத பேட்டரியை சார்ஜ் செய்ய முடிகிறது.

கிஸ்பாட்டின் ஓப்போ ரெனோ11 5ஜி எண்ணங்கள்
நேர்த்தியான புதிய ஓப்போ ரெனோ11 5ஜி ஆனது, இந்தாண்டு இந்தியாவுக்கு வரும் சிறந்த புதிய ஸ்மார்ட்போன்களில் ஒன்றாகும். அதன் திகைப்பூட்டும் வடிவமைப்பு, நாள் முழுவதுமான பேட்டரி லைப், மல்டி டாஸ்கிங், மீடியாடெக்கின் டைமன்சிட்டி 7050 மற்றும் ஓப்போவின் சில்க் ஸ்மூத் கலர்ஓஎஸ் 14 ஆகியவற்றுடன் உங்கள் போர்ட்ரெய்ட் போட்டோகிராபி விளையாட்டை புதிய லெவலுக்கு எடுத்துச் செல்லும், பெஸ்ட்-இன்-செக்மெண்ட் கேமராக்களும், ஓப்போ ரெனோ11 5ஜி போனை ரூ.30,000-க்கும் கீழ் உள்ள பிரிவில் ஒப்பிட முடியாத நிகரற்ற பர்ஃபாமராக ஆக்குகிறது.
ஓப்போ ரெனோ11 5ஜி போனின் 8ஜிபி+128ஜிபி வேரியண்ட்டின் விலை ரூ.29,999 மற்றும் 8ஜிபி+256ஜிபி வேரியண்ட்டின் விலை ரூ.31,999ஆகும். இந்த டிவைஸ் ஜனவரி 25, 2024 முதல் விற்பனைக்கு வரும் மற்றும் பிளிப்கார்ட், ஓப்போ இ-ஸ்டோர் மற்றும் மெயின்லைன் ரீடெயில் அவுட்லெட்களில் கிடைக்கும். முதல் விற்பனையில் இந்த டிவைஸை வாங்கும் போது வாடிக்கையாளர்கள் பெறக்கூடிய சில சலுகைகள் இங்கே கொடுக்கப்பட்டுள்ளன.


Click it and Unblock the Notifications








