Home
Mobile

ஒப்போ ரெனோ10 ப்ரோ 5ஜி: தரமான ஃபாஸ்ட் சார்ஜிங், கேமரா, டிசைன் மூலம் சக்தியை கட்டவிழ்த்து விடுங்கள்!

ஒப்போ ரெனோ10 ப்ரோ 5ஜி: மின்னல் வேக சார்ஜிங்!

ஒப்போ ரெனோ10 சீரிஸ் அறிமுகம் செய்யப்பட்ட சில நாட்களிலேயே பலரின் கவனத்தை ஈர்த்துள்ளது. ஒப்போ நிறுவனம் அதன் லைன்-அப் வரலாற்றில் மிகப்பெரிய மேம்படுத்தல்களை செய்துள்ளது, இது இப்போது அதன் பத்தாவது தலைமுறையில் உள்ளது. இது நிச்சயமாக ஒரு பெரிய மேம்படுத்தலுக்கு அழைப்பு விடுகிறது, மேலும் ஒப்போ ரெனோ10 ப்ரோ 5ஜி அதையே வழங்குகிறது.

ஒப்போ ரெனோ 10 ப்ரோ+ 5ஜிக்கு மிகப்பெரிய மேம்படுத்தல்கள் ஒதுக்கப்பட்டிருந்தாலும், உடன் உள்ள இரண்டு மாடல்களும் கூட சிறந்ததையே பெற்றுள்ளன. - சிறந்த அம்சங்கள், கவர்ச்சிகரமான விலையில். இது அதன் விலைப் பிரிவில் சார்ஜிங் அனுபவத்தில் முன்னணியில் இருக்கும் அதே வேளையில் எளிமையான போர்ட்ரெயிட் படங்களை ப்ரோட்ரைட்ஸ் (PROtraits) ஆக மாற்ற முடியும். நீண்ட காலமாக நாம் பார்த்திராத மிக நேர்த்தியான வடிவமைப்பில், அனைத்தும் திறமையான அம்சங்களும் மூடப்பட்டுள்ளது.

எங்களிடம் ஒப்போ ரெனோ10 ப்ரோ 5ஜி சில நாட்களுக்கு மட்டுமே இருந்தது, அதுவே எங்களை அதில் விழ வைக்க போதுமானதாக இருந்தது. இளம் தொழில் வல்லுநர்களை மனதில் வைத்து இந்த போன் வடிவமைக்கப்பட்டுள்ளது - அதாவது பேசுவதற்கு கதைகள் கொண்டவர்கள், செல்வதற்கு நிறைய இடங்களை கொண்டவர்கள், உட்கார நேரமில்லாதவர்கள், ஸ்மார்ட்போனை சார்ஜ் செய்யக் காத்திருக்க பிடிக்காதவர்களை மனதில் வைத்து இந்த போன் வடிவமைக்கப்பட்டுள்ளது!

ஒப்போ ரெனோ10 ப்ரோ 5ஜி: மின்னல் வேக சார்ஜிங்!

சார்ஜிங் அனுபவத்தில் ஒரு பெஞ்ச்மார்க்!

ஒப்போ ரெனோ10 ப்ரோ 5ஜி ஆனது அதன் விலைப் பிரிவில் 80W சூப்பர்வூக்சிடிஎம் ஃபிளாஷ் சார்ஜிங் தொழில்நுட்பத்துடன் கூடிய வேகமான சார்ஜிங் சொல்யூஷனை கொண்டுவருகிறது. 5 நிமிட சார்ஜ் 3.2 மணிநேர வீடியோ ஸ்ட்ரீமிங், 3 மணிநேர மெசேஜிங் டைம் மற்றும் 2.8 மணிநேர சோஷியல் மீடியா ப்ரவுஸிங்கை உங்களுக்கு வழங்கும். மேலும் 28 நிமிடங்களில் 2 - 100% வரை முழு சார்ஜ் ஆகும். ஆம், எங்கள் பயன்பாட்டிற்கு இடையில் அதைச் சோதிக்கவும் செய்தோம். 5-நிமிட சார்ஜ் எங்களுக்கு பிஜிஎம்இ கேமின் பேட்டில் ராயலின் முழு சுற்றையம் விளையாட அனுமதித்தது.

இதன் 4600எம்ஏஎச் என்கிற பெரிய பேட்டரியை கொண்டுள்ளது. முழு சார்ஜில் 1.5 நாட்கள் இயக்கத்தை ஆதரிக்கிறது, மேலும் இரவில் 9 மணி நேரம் காத்திருப்புக்கு பிறகு 5% பேட்டரியை மட்டுமே பயன்படுத்துகிறது, இதன் பேட்டரி ஹெல்த் எஞ்சினுக்கு (பிஎச்இ) நன்றி. 1,600 சார்ஜ் சுழற்சிகளுக்கு பிறகும் நான்கு ஆண்டுகளுக்கும் மேலாக பேட்டரி அதன் ஆரோக்கியத்தை 80% வரை பராமரிப்பதை பிஎச்இ உறுதி செய்கிறது. ஒப்போ சமீபத்தில் உள்நாட்டு பிஎச்இ தொழில்நுட்பத்திற்கான 2023 சீல் வணிக நிலைத்தன்மை விருதை வென்றது, இது தொழில்நுட்ப கண்டுபிடிப்புகள் மூலம் நிலைத்தன்மையை மேம்படுத்த ஒப்போவின்
முயற்சிகளுக்கு வளர்ந்து வரும் சர்வதேச அங்கீகாரத்தை சேர்க்கிறது. 40 கடுமையான சோதனைகளுக்கு பிறகு மேம்படுத்தப்பட்ட டியுவி ரெயின்லேண்ட் ஸ்டேட் பாஸ்ட்-சார்ஜ் சிஸ்டம் சான்றிதழ் மூலம், இதன் சார்ஜிங் வேகம் சான்றளிக்கப்பட்டுள்ளது.

முக்கிய மூலப்பொருள் சூப்பர்வூக் எஸ் பவர் மேனேஜ்மென்ட் சிப் தான். இது ஒப்போவின் முதல் சுயாதீனமாக உருவாக்கப்பட்ட பவர் மேனேஜ்மென்ட் சிப் ஆகும், ஒரிஜினல் 3 சிப்களின் இடத்தில் 6 செயல்பாடுகள் 1 சிப்பில் ஒருங்கிணைக்கப்பட்டுள்ளன, இது டிஸ்சார்ஜ் செயல்திறனை மேம்படுத்தும் அதே வேளையில் போனுக்குள் எடுக்கும் இடத்தை 45% குறைக்கிறது. 99.5% வரை அதிக செயல்திறன் மிக்கதாக இருக்கிறது, தொழில்துறையில் இது அதிகபட்ச எண்களாகும்.

ஒப்போ ரெனோ10 ப்ரோ 5ஜி: மின்னல் வேக சார்ஜிங்!

ப்ரோட்ரைட்களுக்கு இடமளிக்கவும்!

ஒப்போ ரெனோ10 ப்ரோ 5ஜி ஆனது 50எம்பி அல்ட்ரா-க்ளியர் ப்ரைமரி கேமரா, 112-டிகிரி பீல்ட் ஆப் வியூவுடன் கூடிய 8எம்பி அல்ட்ரா-வைட் கேமரா மற்றும் தொழில்துறையின் அதி உயர்வான 32எம்பி டெலிஃபோட்டோ-போர்ட்ரெய்ட் கேமரா ஆகியவற்றை உள்ளடக்கிய ட்ரிபிள் கேமரா செட்டப்பை கொண்டுள்ளது. இதன் அல்ட்ராஹை-ரெசல்யூஷன் டெலிபோட்டோ கேமரா வானது அல்ட்ரா-கிளியர் போர்ட்ரெய்ட் புகைப்படங்களை வழங்குக்கின்றன.

இதன் மெயின் கேமரா ஒரு பெரிய 1/1.56-இன்ச் சோனி ஐஎம்எக்ஸ்890 ஃபிளாக்ஷிப் சென்சாரை பயன்படுத்துகிறது, இது அதிக ஒளியைப் பிடிக்கிறது மற்றும் அதிக தெளிவுடன் படங்களை உருவாக்குகிறது. மெயின் கேமராவானது மேம்படுத்தப்பட்ட நிலைப்புத்தன்மைக்காக ஓஐஎஸ் மற்றும் ஆல் பிக்சல் ஆம்னி-டைரக்ஷன் பிடிஏஅப்-ஐயும் கொண்டுள்ளது.

32எம்பி டெலிஃபோட்டோ-போர்ட்ரெய்ட் தான் உண்மையான ஹைலைட். இது 2எக்ஸ் ஆப்டிகல் ஜூம் மற்றும் 20எக்ஸ் ஹைப்ரிட் ஜூம் மூலம் 47மிமீ சமமான குவிய நீளத்தில் ஹை-ரெஸ் போர்ட்ரெய்ட்களை கைப்பற்றும் திறனை வழங்குகிறது. இந்த கேமராவுடன் நாங்கள் மிகவும் வேடிக்கையான விஷயங்களை செய்தோம். பெரிய ஆர்ஜிபிடபுள்யூ சென்சாரை முழுமையாக பயன்படுத்தினோம். இது ஒளி உட்கொள்ளலை 60% அதிகரிக்கிறது, இதன் விளைவாக குறைந்த ஒளி சூழ்நிலைகளில் போர்ட்ரெய்ட்களை எடுக்கும்போது புகைப்படத்தின் நாய்ஸ் 35% குறைகிறது. இதன் கேமரா ஏஎல்டி (அடாமிக் லேயர் டிபொசிஷன்) ஆன்ட்டி-ரெஃப்ளெக்ட்டிவ் ஆப்டிகல் பூச்சையும் பயன்படுத்துகிறது, இது க்ரீன் கிளேர் மற்றும் ரெட் கிளேரை தடுக்கிறது, ஒளி பிரதிபலிப்புத்தன்மையை 70% வரை குறைக்கிறது.

முன்பக்கத்தில் உள்ள 32எம்பி செல்பீ கேமரா உள்ளது. இது ஆட்டோஃபோகஸுடன் வரும் வலிமைமிக்க ஐஎம்எக்ஸ்709 சென்சார் ஆகும், இது 4கே வீடியோ பதிவு மற்றும் க்ரூப் புகைப்படங்களில் வெவ்வேறு முகங்களைக் கண்டறிவதன் மூலம் அதிக போகஸ் செலுத்தும் செல்ப்-போர்ட்ரெய்ட்களை கைப்பற்றுகிறது.

ஒப்போ ரெனோ10 ப்ரோ 5ஜி: மின்னல் வேக சார்ஜிங்!

ஆல்-ரவுண்ட் பெர்ஃபார்மன்ஸ் உங்களைத் திகைக்க வைக்கும்!

ரெனோ10 ப்ரோ 5ஜி ஆனது ஸ்னாப்டிராகன் 778ஜி 5ஜி மொபைல் இயங்குதளத்தில் இயங்குகிறது. இது 6என்எம் ப்ராசஸர் நோட்-இல் கட்டமைக்கப்பட்ட ஆக்டா-கோர் எஸ்ஓசி-ஐ கொண்டுள்ளது, இது மூல செயல்திறன் மற்றும் ஆற்றல் திறனுக்கு இடையே இணையற்ற சமநிலையை அளிக்கிறது. செயல்திறனில் சமரசம் செய்யாமல் தடையற்ற கேமிங் அமர்வுகளை செயல்படுத்தும் அல்ட்ரா-கண்டக்டிவ் விசி கூலிங் சிஸ்டம் மூலம் இந்த சிப்செட் குளிர்விக்கப்படுகிறது. பிஜிஎம்ஐ-யில் சிக்கன் டின்னர்களை நாங்கள் திரும்ப திரும்ப பெற்றோம் என்றால் பார்த்துக்கொள்ளுங்களேன்!

ரெனோ10 ப்ரோ 5ஜி ஆனது டைனமிக் கம்ப்யூட்டிங் எஞ்சினுடன் வருகிறது, இது ஆண்ட்ராய்டு மெமரி மேனேஜ்மென்ட் சிஸ்டத்தின் முழுமையான மறுகட்டமைப்பை அடைய ஒப்போ மற்றும் கூகுள் இணைந்து உருவாக்கிய அல்காரிதத்தை ஒருங்கிணைக்கிறது. இதன்கீழ் நீங்கள் தாமதமின்றி போனின் பேக்கிரவுண்டில் 40+ ஆப்கள் வரை திறந்திருக்க முடியும்.

ஒப்போ நிறுவனமானது டியுவி ரெயின்லேண்ட் எஸ்யுடி 48-மாத ப்ளூயன்ஸி சான்றிதழில் ஏ மதிப்பீட்டையும் பெற்றுள்ளது. இது ரெனோ10 ப்ரோ 5ஜி ஆனது குறைந்த பட்ச பின்னடைவுகள் மற்றும் தடுமாற்றங்களுடன் சீராக செயல்படும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது என்பதை நிரூபிக்கிறது.

ஒப்போ ரெனோ10 ப்ரோ 5ஜி: மின்னல் வேக சார்ஜிங்!

ரெனோ 10 ப்ரோ 5ஜி பிடித்துக்கொண்டே இருக்க வேண்டும் என்கிற ஒரு உணர்வை ஏற்படுத்துகிறது!

ரெனோ10 ப்ரோ 5ஜி ஆனது ஒப்போ ரெனோ சீரிஸின் மெல்லிய மற்றும் இலகுவான வடிவமைப்பை பெறுகிறது மற்றும் புதிதாக சுத்திகரிக்கப்பட்ட கேமரா மாட்யூல் ஏரியா மற்றும் 3டி கர்வ்டு வடிவமைப்பை ஒரு நேர்த்தியான மற்றும் பிரீமியம் தோற்றத்தை வழங்க, இன்றைய பாணியுடன் சரியாக பொருந்துகிறது. நாங்கள் முதலில் கவனித்தது ரியர் கேமரா மாட்யூலின் புதிய டூயல்-டோன் வடிவமைப்பைத்தான். மாறுபட்ட வண்ணங்கள் ஆனது உங்கள் பார்வைக்கு அடுக்கு வடிவமைப்பை உருவாக்குகின்றன, இது ஸ்மார்ட்போனிற்கு கூடுதல் பிரீமியம் லுக்கை வழங்குகிறது.

பேக் பேனலில் ரேடியல் லேசர் பீம் போன்ற அமைப்பு உள்ளது, இது ஒளியை சிதறடித்து மெயின் கேமராவில் கவனத்தை செலுத்த வைக்கிறது. ரெனோ10 ப்ரோ 5ஜி ஸ்மார்ட்போன் இரண்டு வண்ணங்களில் வருகிறது - க்ளாஸி பர்பிள் மற்றும் சில்வரி கிரே, ஒவ்வொன்றும் அதன் தனித்துவமான நிறம் மற்றும் அமைப்பை பிரதிபலிக்கிறது. க்ளாஸி பர்பிள் என்பது ரெனோ சீரீஸூக்கான புதிய பிரீமியம் வண்ண கலவையாகும். சில்வரி கிரே ஆனது ஒப்போ க்ளோ செயல்முறையைப் பயன்படுத்தி பிரீமியமான அதே சமயம் மிகவும் அமைதியான தோற்றத்தை உருவாக்கமாகும். இது ஸ்மார்ட்போனை வெளிச்சத்தில் திருப்பும்போது வண்ணத்தின் புதிய ஆழத்தை வெளிப்படுத்துகிறது.

மாயாஜாலங்கள் செய்யும் கலர்ஓஎஸ் 13.1!

சமீபத்திய ஆண்ட்ராய்டு 13 ரோஸ்-இல் கட்டமைக்கப்பட்ட நிலையான மற்றும் மென்மையான கலர்ஓஎஸ் 13.1 யுஐ -யின் ஆற்றலை அனுபவியுங்கள், இது உங்கள் உற்பத்தித்திறனை மேம்படுத்த வடிவமைக்கப்பட்ட பல அறிவார்ந்த அம்சங்களை வழங்குகிறது. புதுமையான மல்டி-ஸ்கிரீன் இணைப்புடன், உங்கள் ஸ்மார்ட்போனை மற்ற சாதனங்களுடன் சிரமமின்றி இணைக்கவும், ஒரே நேரத்தில் பல காட்சிகளில் தடையற்ற வேலையை செய்யவும்.

இந்த புத்திசாலித்தனமான ஓஎஸ் ஆனது, ;ப்ரொபைல் புகைப்படங்கள் மற்றும் சாட் ஸ்கிரீன்ஷாட்களில் உள்ள பெயர்கள் போன்ற முக்கியமான தகவல்களை தானாகவே பிக்சலேட் செய்வதன் மூலம் உங்கள் தனியுரிமையை அங்கீகரித்து பாதுகாக்கிறது. கூடுதலாக, இதன் ஸ்மார்ட் ஆன ஆல்வேஸ்-ஆன் டிஸ்பிளே வசதியையும் அனுபவிக்கவும். எல்லாவற்றை விட முக்கியமான உங்கள் மொபைலை திறக்க வேண்டிய அவசியமின்றி சோமோடோ மற்றும் ஸ்விக்கி போன்ற உணவு டெலிவரி ஆப்ஸை அணுகவும்.

பயனர் அனுபவத்தை மேலும் மேம்படுத்தும் வகையில், ரெனோ10 ப்ரோ 5ஜி ஆனது ஒரு சூப்பர் ஹேண்டி இன்ஃப்ராரெட் ரிமோட் கண்ட்ரோலை அறிமுகப்படுத்துகிறது. இது உங்கள் ஏர் கண்டிஷனர், டிவி மற்றும் பாரம்பரிய ரிமோட் தேவைப்படும் எந்தவொரு சாதனத்தையும் கட்டுப்படுத்த உதவுகிறது.

ஒப்போ ரெனோ10 ப்ரோ 5ஜி: மின்னல் வேக சார்ஜிங்!

எங்களுடைய ஃபர்ஸ்ட் இம்ப்ரெஷன்ஸ்!

ஒப்போ ரெனோ10 ப்ரோ 5ஜி ஒரு முழுமையான பேக்கேஜ் ஆகும். ப்ரோ போட்டோகிராபி, தரமான செயல்திறன் மற்றும் வசதியான 80W சூப்பர்வூக்சிடிஎம் பாஸ்ட் சார்ஜிங் உடன் மிகவும் நேர்த்தியாக செதுக்கப்பட்ட இந்த ஸ்மார்ட்போன் முழுக்க-முழுக்க இளம் தொழில் வல்லுநர்களுக்கானது. இது ஒரு ஆல்-ரவுண்டர் ஆகும், இதன் 12ஜிபி ரேம் + 256ஜிபி ஆப்ஷனின் விலை ரூ.39,999 மட்டுமே ஆகும்.

ஒப்போ ரெனோ10 ப்ரோ 5ஜி ஸ்மார்ட்போன் ஜூலை 13 முதல் விற்பனைக்கு வருகிறது, மேலும் பிளிப்கார்ட், ஒப்போ ஸ்டோர் மற்றும் நாடு முழுவதும் உள்ள முக்கிய சில்லறை விற்பனை கடைகள் வழியாக வாங்க கிடைக்கும். சமீபத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட ரெனோ10 ப்ரோ 5ஜி-ஐ வாங்கும் போது நீங்கள் பெறக்கூடிய கவர்ச்சிகரமான அறிமுக சலுகைகள் இதோ:

ஒப்போ ரெனோ10 ப்ரோ 5ஜி: மின்னல் வேக சார்ஜிங்!
ஒப்போ ரெனோ10 ப்ரோ 5ஜி: மின்னல் வேக சார்ஜிங்!

ஜூலை 13 மற்றும் 19 க்கு இடையில் இந்த ஸ்மார்ட்போனை வாங்கும் வாடிக்கையாளர்கள் மைஒப்போ ரேஃபிளில் நுழைந்து துபாய் பயணம் மற்றும் பிற அற்புதமான பரிசுகளை வெல்லலாம். ஜூலை 13 - ஜூலை 31 க்குள் ரெனோ10 ப்ரோ+ 5ஜி மற்றும் ரெனோ10 ப்ரோ 5ஜி ஸ்மார்ட்போனை வாங்கி, ஒப்போ பேட் ஏர் (4ஜிபி ரேம் + 128ஜிபி) மீது ரூ.1500 தள்ளுபடியை பெறவும்.

More from GizBot

Best Mobiles in India

English summary
Oppo Reno10 Pro 5G Unleash The Power With Swift Charging Top Notch Camera Exquisite Design
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X