முதல் பந்தே சிக்ஸ் அடிக்கும் Oppo! 2023 வரை காத்திருந்தால் நீங்க கொடுத்து வச்சவங்க..

|

Oppo Reno 9, Reno 9 Pro, Find N2 Flip ஸ்மார்ட்போன்கள் இந்தியாவில் 2023 இன் முதல் காலாண்டில் வெளியிடப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. Oppo வரும் நாட்களில் இந்த ஸ்மார்ட்போன்களின் வெளியீட்டு விவரங்களை அதிகாரப்பூர்வமாக அறிவிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதில் இடம்பெற்றுள்ள Oppo Find N2 சீரிஸ் கடந்த வாரம் சீனாவில் அறிமுகம் செய்யப்பட்டது.

Oppo Reno 9, Oppo Reno 9 Pro, Oppo Find N2 Flip

Oppo Reno 9, Oppo Reno 9 Pro, Oppo Find N2 Flip

Oppo நிறுவனம் கடந்த வாரம் சீனாவில் Find N2 சீரிஸ் ஃபோல்டபிள் ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்தது. அதேபோல் கடந்த நவம்பர் மாதம் ரெனோ 9 சீரிஸ் மாடலையும் நிறுவனம் அறிமுகம் செய்தது. இந்தநிலையில் Oppo Reno 9, Oppo Reno 9 Pro, Oppo Find N2 Flip ஆகிய ஸ்மார்ட்போன்கள் இந்தியாவில் சோதனை செய்யப்பட்டு வருவதாக கூறப்படுகிறது.

2023 முதல் காலாண்டில் அறிமுகம்

2023 முதல் காலாண்டில் அறிமுகம்

ஒப்போ மேலே குறிப்பிட்டுள்ள அனைத்து ஸ்மார்ட்போன்களையும் 2023 முதல் காலாண்டில் இந்திய சந்தைக்கு கொண்டு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. நிறுவனம் சரியான வெளியீட்டுத் தேதியை இன்னும் அறிவிக்கவில்லை. Oppo வரும் நாட்களில் வெளியீட்டு விவரங்களை அறிவிக்கும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.

டிப்ஸ்டர் தகவல்

டிப்ஸ்டர் தகவல்

டிப்ஸ்டர் யோகேஷ் பிராரின் தகவலை மேற்கோள் காட்டி பிரைஸ்பாபா வெளியிட்ட தகவலை பார்க்கையில், Oppo இந்தியாவில் அதன் சமீபத்திய முதன்மை ஸ்மார்ட்போன்களை சோதனை செய்வதாக குறிப்பிடப்பட்டிருக்கிறது. அது Oppo Reno 9, Oppo Reno 9 Pro மற்றும் Oppo Find N2 Flip என தகவல்கள் தெரிவிக்கிறது. அதேபோல் 2023 ஆம் ஆண்டின் முதல் காலாண்டின் பிற்பகுதியில் இந்த ஸ்மார்ட்போன்களை இந்தியா நிறுவனம் அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ளதாக டிப்ஸ்டர் தகவல் தெரிவிக்கிறது.

அம்சங்கள் இதுவா?

அம்சங்கள் இதுவா?

Oppo Reno 9 Pro+ மற்றும் Oppo Find N2 ஆகிய ஸ்மார்ட்போன் இந்தியாவில் வெளியிடப்படுமா என்பது குறித்த எந்த தகவலையும் நிறுவனம் வெளியிடவில்லை. இந்தியாவில் இந்த ஸ்மார்ட்போன்கள் அறிமுகம் செய்யப்படும் பட்சத்தில் சீனாவில் அறிமுகப்படுத்தப்பட்ட அதே அம்சங்கள் இதில் இருக்குமா என்பது சரியாகத் தெரியவில்லை.

பக்கா ஃப்ளிப் ஸ்மார்ட்போன்

பக்கா ஃப்ளிப் ஸ்மார்ட்போன்

Oppo சமீபத்தில் சீனாவில் Oppo Find N2 மற்றும் Oppo Find N2 Flip ஆகிய ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்தது. அதன்படி வெளியான அம்சங்களை பார்க்கையில், Oppo Find N2 Flip ஸ்மார்ட்போனானது 6.8 இன்ச் முதன்மை முழு HD+ AMOLED டிஸ்ப்ளே ஆதரவைக் கொண்டிருக்கிறது. இந்த டிஸ்ப்ளே ஆனது 60 ஹெர்ட்ஸ் ரெஃப்ரஷிங் ரேட் மற்றும் 3.62-இன்ச் கவர் டிஸ்ப்ளே ஆதரவைக் கொண்டிருக்கிறது. இது பக்கா ஃப்ளிப் அம்சம் கொண்ட ஸ்மார்ட்போன் ஆகும்.

Oppo Reno 9 சீரிஸ்

Oppo Reno 9 சீரிஸ்

Oppo Reno 9 சீரிஸ் இல் ஒப்போ ரெனோ 9, ஒப்போ ரெனோ 9 ப்ரோ மற்றும் ஒப்போ ரெனோ 9 ப்ரோ+ ஆகிய ஸ்மார்ட்போன்கள் சீனாவில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. இந்த ஸ்மார்ட்போன் ஆனது 6.7 இன்ச் முழு எச்டி+ ஓஎல்இடி வளைந்த டிஸ்ப்ளே ஆதரவைக் கொண்டிருக்கிறது. இந்த டிஸ்ப்ளே ஆனது 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரஷிங் ஆதரவைக் கொண்டிருக்கிறது.

எந்தெந்த சிப்செட் இடம்பெறும்..

எந்தெந்த சிப்செட் இடம்பெறும்..

இந்த சீரிஸ் இல் உள்ள அடிப்படை மாடலான Oppo Reno 9 ஆனது டைமன்சிட்டி 8100 மேக்ஸ் எஸ்ஓசி மூலம் இயக்கப்படுகிறது. அதேபோல் இதன் ஒப்போ ரெனோ 9 ப்ரோ ஆனது ஸ்னாப்டிராகன் 778ஜி எஸ்ஓசி மூலம் இயக்கப்படுகிறது. அதேபோல் Oppo Reno 9 Pro+ ஆனது ஸ்னாப்டிராகன் 8+ ஜென் 1 எஸ்ஓசி மூலம் இயக்கப்படுகிறது.

மேம்பட்ட ப்ரீமியம் ஸ்மார்ட்போன்கள்

மேம்பட்ட ப்ரீமியம் ஸ்மார்ட்போன்கள்

Oppo Reno 9, Reno 9 Pro, Find N2 Flip ஆகிய ஸ்மார்ட்போன்கள் 2023 முதல் காலாண்டில் இந்தியாவில் அறிமுகம் செய்யப்படும் பட்சத்தில் இது அமோக வரவேற்பை பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த அனைத்து ஸ்மார்ட்போன்களும் பக்கா ப்ரீமியம் ஸ்மார்ட்போன் ஆகும் என்பது கவனிக்கத்தக்க ஒன்று. நீங்கள் புதிய ஸ்மார்ட்போனை வாங்க திட்டமிட்டிருந்தால் இன்னும் சில நாட்கள் மட்டும் காத்திருந்தால் மேம்பட்ட ப்ரீமியம் ஸ்மார்ட்போன்களை வாங்கலாம்.

Best Mobiles in India

English summary
Oppo Reno 9, Reno 9 Pro, Oppo Find N2 Flip Might be Launching on Q1 2023 in India: Price, Specs

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X