மீண்டும் ஒரு அட்டகாசமான ஒப்போ ஸ்மார்ட்போன் அறிமுகம்.! விலை எவ்வளவு தெரியுமா?
ஒப்போ நிறுவனம் சில வாரங்களுக்கு முன்பு ஒப்போ ரெனோ 8 மற்றும் ஒப்போ ரெனோ 8 மாடல்களை இந்தியாவில் அறிமுகம் செய்தது. இந்நிலையில் மீண்டும் அட்டகாசமான அம்சங்களுடன் ஒப்போ ரெனோ 8இசட் 5ஜி (Oppo Reno 8Z 5G) மாடலை தாய்லாந்தில் அறிமுகம் செய்துள்ளது.

ஒப்போ ரெனோ 8Z 5G
இந்த ஒப்போ ரெனோ 8Z 5G ஸ்மார்ட்போன் விரைவில் அனைத்து நாடுகளிலும் அறிமுகம் செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்போதுஒப்போ ரெனோ 8Z 5G ஸ்மார்ட்போனின் விலை மற்றும் அம்சங்களை சற்று விரிவாகப் பார்ப்போம்.

நீங்கள் எதிர்பார்த்த டிஸ்பிளே அம்சங்கள்
புதிய ஒப்போ ரெனோ 8Z 5G ஸ்மார்ட்போனில் 6.43-இன்ச் ஃபுல் எச்டி பிளஸ் டிஸ்பிளே வசதி உள்ளது. மேலும் இந்த போனில் நீங்கள்
எதிர்பார்த்த டிஸ்பிளே அம்சங்கள் உள்ளது என்றுதான் கூறவேண்டும். அதாவது இந்த போன் 60 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட், 600 நிட்ஸ் ப்ரைட்னஸ் மற்றும்சிறந்த பாதுகாப்பு வசதியை அடிப்படையாக கொண்டு வெளிவந்துள்ளது இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன்.

128ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜ்
ஒப்போ ரெனோ 8Z 5G ஸ்மார்ட்போனில் 8ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜ் ஆதரவு உள்ளது. மேலும் 1டிபி வரை மெமரி நீட்டிப்பு ஆதரவைக் கொண்டுள்ளது இந்த அட்டகாசமான ஒப்போ ஸ்மார்ட்போன். அதாவது நீங்கள் மெமரி கார்டை பயன்படுத்த ஒரு மைக்ரோ எஸ்டி
கார்டு ஸ்லாட் கொடுக்கப்பட்டுள்ளது.

கேமரா எப்படி?
ஒப்போ ரெனோ 8Z 5G ஆனது 64எம்பி dual-orbit lights portrait சென்சார் + 2எம்பி மோனோ சென்சார் + 2எம்பி மேக்ரோ லென்ஸ் என்கிற ட்ரிபிள் ரியர் கேமரா ஆதரவைக் கொண்டுள்ளது. எனவே இந்த ஸ்மார்ட்போன் உதவியுடன் தரமான படங்களை எடுக்க முடியும்.
மேலும் செல்பீகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 16எம்பி கேமராவைக் கொண்டுள்ளது இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன். பின்பு எல்இடி பிளாஷ் மற்றும் பல கேமரா அம்சங்களுடன் வெளிவந்துள்ளது இந்த ஒப்போ ரெனோ 8Z 5G ஸ்மார்ட்போன்.கேமராவை விட இதன் சிப்செட் தரமாக உள்ளது என்றுதான் கூறவேண்டும்.

சக்தி வாய்ந்த சிப்செட்
ஒப்போ ரெனோ 8Z 5G போனில் சக்தி வாய்ந்த குவால்காம் ஸ்னாப்டிராகன் 695 சிப்செட் வசதி உள்ளது. எனவே இந்த ஸ்மார்ட்போனில் அனைத்து ஆப்ஸ்களையும் தடையின்றி பயன்படுத்த முடியும். பின்பு ColorOS 12.1 சார்ந்த ஆண்ட்ராய்டு 12 இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டு
வெளிவந்துள்ளது இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன்.
குறிப்பாக இந்த ஒப்போ ரெனோ 8Z 5G போனின் வடிவமைப்புக்கு அதிக கவனம் செலுத்தியுள்ளது ஒப்போ நிறுவனம்.

சூப்பரான பேட்டரி
ஒப்போ ரெனோ8Z 5G ஸ்மார்ட்போனில் 4500 எம்ஏஎச் பேட்டரி பொருத்தப்பட்டுள்ளது. எனவே சார்ஜ் பற்றிய கவலை இருக்காது. நீண்ட நேரம்
பேட்டரி பேக்கப் கிடைக்கும். பின்பு 33W பாஸ்ட் சார்ஜிங் வசதி, கைரேகை ஸ்கேனர் உள்ளிட்ட பல சிறப்பு அம்சங்களை கொண்டுள்ளது இந்த
ஒப்போ போன்.

ஒப்போ ரெனோ 8Z 5G விலை
8ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜ் ஆதரவு கொண்ட ஒப்போ ரெனோ 8Z 5G ஸ்மார்ட்போனை THB 12,990 (இந்திய மதிப்பில்
ரூ.28,600) விலையில் வாங்க முடியும். மேலும் பிளாக் மற்றும் கோல்ட் நிறங்களில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது இந்த புதிய ஒப்போ ஸ்மார்ட்போன்.

5ஜி சேவை
அதேபோல் இந்தியாவில் விரைவில் 5ஜி சேவை அறிமுகம் செய்யப்படும் என்பதால் ஒப்போ நிறுவனம் தொடர்ந்து 5ஜி ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்வதில் அதிக ஆர்வம் காட்டி வருகிறது. அதன்படி இந்நிறுவனம் விரைவில் ஒரு 5ஜி ஸ்மார்ட்போனை இந்தியாவில் அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளது.
மேலும் விவோ, மோட்டோ, சாம்சங் போன்ற நிறுவனங்களும் தொடர்ந்து 5ஜி ஸ்மார்ட்போன்களை பட்ஜெட் விலையில் அறிமுகம் செய்த வண்ணம் உள்ளன. குறிப்பாக இந்தியாவில் 5ஜி சேவை அதிக எதிர்பார்ப்புகளை உருவாக்கியுள்ளது என்றுதான் கூறவேண்டும்.
மேலும் தொழில்நுட்பம், விண்வெளி மற்றும் அறிவியல் தொடர்பான இன்னும் கூடுதல் சுவாரசியமான செய்திகள் பற்றி அறிந்துகொள்ள எங்கள் கிஸ்பாட் சேனல் உடன் இணைந்திருங்கள். உங்களின் கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்துகொள்ளுங்கள்.


Click it and Unblock the Notifications








