Home
Mobile

100எம்பி ரியர் கேமராவுடன் களமிறங்கும் முரட்டுத்தனமான Oppo ஸ்மார்ட்போன்: ரெடியா இருங்க.!

ஒப்போ நிறுவனம் விரைவில் ஒப்போ ரெனோ 8டி ஸ்மார்ட்போன் மாடலை இந்தியாவில் அறிமுகம் செய்யத் திட்டமிட்டுள்ளது. குறிப்பாக இந்த புதிய போன் இன்-டிஸ்பிளே கைரேகை ஸ்கேனர், ஃபுல் எச்டி டிஸ்பிளே, தனித்துவமான கேமராக்கள் எனப் பல சிறப்பு அம்சங்களுடன் வெளிவரும்.

மேலும் இப்போது ஆன்லைனில் ஒப்போ ரெனோ 8டி ஸ்மார்ட்போனின் அம்சங்கள் கசிந்துள்ளன. இப்போது இந்த ரெனோ 8டி ஸ்மார்ட்போனின் அம்சங்களைச் சற்று விரிவாகப் பார்ப்போம். அதாவது ஒப்போ ரேனொ 8டி ஸ்மார்ட்போன் ஆனது 6.4-இன்ச் AMOLED டிஸ்பிளே வசதியுடன் அறிமுகமாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. பெரிய டிஸ்பிளே என்பதால் பயன்படுத்துவதற்கு மிகவும் அருமையாக இருக்கும்.

100எம்பி ரியர் கேமராவுடன் களமிறங்கும் முரட்டுத்தனமான Oppo போன்.!

ஒப்போ ரெனோ 8டி ஸ்மார்ட்போன் 90 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட், 450 நிட்ஸ் ப்ரைட்னஸ், 240 ஹெர்ட்ஸ் டச் சாம்ப்ளிங் ரேட் உள்ளிட்ட சிறப்பான ஆதரவுகளுடன் வெளிவரும். பின்பு கொரில்லா கிளாஸ் பாதுகாப்பு வசதியுடன் இந்த புதிய ஒப்போ போன் அறிமுகமாகும் என்பது குறிப்பிடத்தக்கது. அதேபோல் இந்த போனின் வடிவமைப்பு மிகவும் அருமையாக இருக்கும்.

விரைவில் அறிமுகமாகும் ஒப்போ ரெனோ 8டி ஸ்மார்ட்போன் ஸ்னாப்டிராகன் 695 சிப்செட் வசதியைக் கொண்டுள்ளது. குறிப்பாக இந்த சிப்செட் செயல்திறன் மிகவும் அருமையாக இருக்கும். பின்பு மேம்பட்ட வேகத்தை வழங்கும் இந்த ஸ்னாப்டிராகன் 695 சிப்செட். அதேபோல் ஆண்ட்ராய்டு 13 இயங்குதளத்தை அடிப்படையாகக் கொண்டு இந்த போன் அறிமுகமாகும். சுருக்கமாகக் கூறவேண்டும் என்றால் இந்த போனின் மென்பொருள் வசதிக்கு அதிக கவனம் செலுத்தியுள்ளது ஒப்போ நிறுவனம்.

100எம்பி ரியர் கேமராவுடன் களமிறங்கும் முரட்டுத்தனமான Oppo போன்.!

இந்த ஒப்போ ரெனோ 8டி ஸ்மார்ட்போன் 100எம்பி பிரைமரி கேமரா + 2எம்பி மேக்ரோ கேமரா + 2எம்பி மோனோ லென்ஸ் என்கிற ட்ரிபிள் ரியர் கேமரா அமைப்பைக் கொண்டுள்ளது. எனவே இந்த போனின் உதவியுடன் அருமையான புகைப்படங்களை எடுக்க முடியும். மேலும் செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 32எம்பி கேமரா வசதியைக் கொண்டுள்ளது இந்த ஒப்போ போன். இதுதவிர எல்இடி பிளாஷ் மற்றும் பல கேமரா அம்சங்கள் இவற்றுள் அடக்கம்.

ஒப்போ ரெனோ 8டி ஸ்மார்ட்போனில் 8ஜிபி ரேம் மற்றும் 256ஜிபி ஸ்டோரேஜ் வசதி உள்ளது. பின்பு இந்த போனை மைக்ரோ எஸ்டி கார்டு ஸ்லாட் ஆதரவு உள்ளது. எனவே நீங்கள் மெமரி கார்டை இதில் பயன்படுத்த முடியும். மேலும் நீர் எதிர்ப்பிற்கான IPX54 மதிப்பீட்டை கொண்டுள்ளது இந்த ஒப்போ ரெனோ 8டி ஸ்மார்ட்போன் மாடல்..

5000 எம்ஏஎச் பேட்டரி ஆதரவுடன் இந்த ஒப்போ ரெனோ 8டி ஸ்மார்ட்போன் அறிமுகமாகும். எனவே இந்த போன் சிறந்த பேட்டரி பேக்கப் வழங்கும். பின்பு 33 வாட்ஸ் பாஸ்ட் சார்ஜிங் வசதி, இன்-டிஸ்பிளே கைரேகை ஸ்கேனர் உள்ளிட்ட பல சிறப்பு அம்சங்களுடன் இந்த ஒப்போ ரெனோ 8டி ஸ்மார்ட்போன் அறிமுகமாகும் என்பது குறிப்பிடத்தக்கது.

வைஃபை, புளூடூத், ஜிபிஎஸ், 3.5எம்எம் ஆடியோ ஜாக் உள்ளிட்ட பல்வேறு கனெக்டிவிட்டி ஆதரவுகளுடன் இந்த அசத்தலான ஒப்போ ரெனோ 8டி ஸ்மார்ட்போன் அறிமுகமாகும். பின்பு இணையதளத்தில் கசிந்த தகவலின்படி வரும் பிப்ரவரி மாதம் முதல் வாரத்தில் இந்த போன் அறிமுகமாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

100எம்பி ரியர் கேமராவுடன் களமிறங்கும் முரட்டுத்தனமான Oppo போன்.!

அதேபோல் இந்த போன் ரூ.30,000 பட்ஜெட்டில் அறிமுகமாகும் என்று கூறப்படுகிறது. குறிப்பாக இந்த போன் இந்தியச் சந்தையில் அதிக எதிர்பார்ப்புகளை உருவாக்கியுள்ளது என்றே கூறலாம்.

More from GizBot

Best Mobiles in India

English summary
Oppo Reno 8T smartphone with 100MP rear camera will be launched in the first week of February: Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X