Home
Mobile

விஸ்வரூப டிஸ்கவுண்ட்.. வெறும் ரூ.12,765 போதும்.. 108MP கேமரா.. 16GB ரேம்.. AMOLED டிஸ்பிளே.. எந்த மாடல்?

இந்திய ஸ்மார்ட்போன் மார்கெட்டில் 108 எம்பி கேமரா, 16 ஜிபி ரேம், கர்வ்ட் அமோலெட் டிஸ்பிளே போன்ற பிரீமியம் அம்சங்களுடன் ரூ.29,999 விலைக்கு அறிமுகமான ஓப்போ ரெனோ 8டி 5ஜி (Oppo Reno 8T 5G) போன் வெறும் ரூ.12,765க்கு கிடைக்கிறது.

ஓப்போ ரெனோ 8டி 5ஜி அம்சங்கள் (Oppo Reno 8T 5G Specifications): இந்த ரெனோ மாடலில் 6.7 இன்ச் (2412×1080 பிக்சல்கள்) ஃபுல்எச்டி பிளஸ் டிஸ்பிளே வருகிறது. இதுவொரு அமோலெட் (AMOLED) டிஸ்பிளே மாடலாகும். இந்த டிஸ்பிளேவில், 950 நிட்ஸ் பீக் பிரைட்னஸ், 120Hz ரெஃப்ரெஷ் ரேட் மற்றும் 360Hz டச் சாம்பிளிங் ரேட் வருகிறது.

ரூ.12765 போதும்.. 108MP கேமரா.. 16GB ரேம்.. AMOLED டிஸ்பிளே போன்!

அதோடு 2160Hz PWM டிம்மிங் ஃபிரிகொன்சி மற்றும் 1 பில்லியன் கலர் சப்போர்ட் கொண்டுள்ளது. அதுமட்டுமல்லாமல், இதுவொரு கர்வ்ட் டிஸ்பிளே மடாலாகும். இந்த டிஸ்பிளேவுக்கு டிராகன்ட்ரைல் ஸ்டார்2 கிளாஸ் (Dragontrail Star2 Glass) பாதுகாப்பு கொண்டுள்ளது. ஆகவே, பிரீமியமான டிஸ்பிளே அனுபவத்தை எதிர்பார்க்கலாம்.

இந்த ஓப்போ போனில் ஆண்ட்ராய்டு 13 (Android 13) ஓஎஸ் கொண்ட ஆக்டா கோர் ஸ்னாப்டிராகன் 695 8என்எம் மொபைல் (Octa Core Snapdragon 695 8nm Mobile) சிப்செட் வருகிறது. அதோடு கலர்ஓஎஸ் 13 (ColorOS 13) கொண்டிருக்கிறது. இந்த மாடலில் கேமிங் பிரியர்களுக்கான அட்ரினோ 619எல் ஜிபியு (Adreno 619L GPU) கிராபிக்ஸ் கார்டு வருகிறது.

இந்த ஓப்போ ரெனோ மாடலில் 8 ஜிபி ரேம் மற்றும் 8 ஜிபி டைனாமிக் ரேம் சப்போர்ட் கொடுக்கப்பட்டுள்ளது. ஆகவே, 16 ஜிபி ரேம் + 128 ஜிபி மெமரி கொண்ட வேரியண்ட் விற்பனைக்கு கிடைக்கிறது. அதோடு மைக்ரோஎஸ்டி கார்டு சப்போர்ட் வருகிறது. இந்த போனில் பிரீமியம் டிரிபிள் ரியர் கேமரா சிஸ்டம் (Triple Rear Camera System) வருகிறது.

ரூ.12765 போதும்.. 108MP கேமரா.. 16GB ரேம்.. AMOLED டிஸ்பிளே போன்!

அந்த வகையில், 108 எம்பி மெயின் கேமரா + 2 எம்பி டெப்த் கேமரா + 2 எம்பி மைக்ரோஸ்கோப் கேமரா வருகிறது. அதோடு எல்இடி பிளாஷ் இடம் பெற்றுள்ளது. இந்த கேமராவில் 40X ஜூமிங் சப்போர்ட் கொடுக்கப்பட்டுள்ளது. நானோபிக்சல் பிளஸ் டெக்னாலஜி (NonoPixel Plus Technology) பயன்படுத்தப்பட்டுள்ளது. ஆகவே, போட்டோ குவாலிட்டி கிரிஸ்டல் கிளியர் தரத்தில் இருக்கும்.

அதேபோல ஓப்போ போன்களில் வரும் போக்கெ ஃபிளார் போர்ட்ராய்டு (Bokeh Flare Portrait), ஏஐ கலர் போர்ட்ராய்டு (AI Colour Portrait), ஏஐ போர்ட்ராய்டு ரீடச்சிங் (AI Portrait Retouching) மற்றும் ஃபிளாஷ் ஸ்னாப்ஷாட் (Flash Snapshot) ஆகிய மோட்கள் வருகின்றன. 32 எம்பி செல்பீ கேமரா கொடுக்கப்பட்டுள்ளது. இதில் செல்பீ எச்டிஆர் இமேஜ் (Selfie HDR Image) மோட் வருகிறது.

இந்த போனில் டூயல் ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள் மற்றும் டைப்-சி ஆடியோ சப்போர்ட் கொடுக்கப்பட்டுள்ளது. இன்-டிஸ்பிளே ஃபிங்கர்பிரிண்ட் சென்சார் வருகிறது. இந்த ஓப்போ ரெனோ போனில் 67W சூப்பர்வூக் சார்ஜிங் சப்போர்ட் கொண்ட 4800mAh பேட்டரி வருகிறது. மிகவும் ஸ்லிம் டிசைனில் 171 கிராம் எடை மட்டுமே கொண்டுள்ளது. மிட் நைட் பிளாக் மற்றும் சன்ரைஸ் கோல்டு ஆகிய 2 கலர்களில் விற்பனைக்கு வருகிறது.

ரூ.12765 போதும்.. 108MP கேமரா.. 16GB ரேம்.. AMOLED டிஸ்பிளே போன்!

இதுவொரு மிட்-பிரீமியம் போனாகும். ஆகவே, இதன் விலை ரூ.29,999ஆக நிர்ணயம் செய்யப்பட்டது. இருப்பினும், அதிகபட்சமாக ரூ.2500 வரையில் டிஸ்கவுண்ட் பெற்று விற்பனையாகி வந்தது. ஆனால், இப்போது குரோமா (Croma) தளத்தில் கிட்டத்தட்ட 57 சதவீதம் விலை குறைக்கப்பட்டு வெறும் ரூ.12,765க்கு விற்பனைக்கு வந்துள்ளது. இந்த நம்ப முடியாத விலை குறைப்பு காரணமாக ஆர்டர்கள் குவிந்து வருகின்றன.

Best Mobiles in India

English summary
Oppo Reno 8T 5G With 108MP Camera Sale With 57 Percent Price Cut on Croma Check Specifications
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X