Home
Mobile

108எம்பி கேமராவுடன் இந்தியாவில் அறிமுகமான ஒப்போ 5ஜி போன்.! என்ன விலை? என்னென்ன அம்சங்கள்?

ஒப்போ நிறுவனம் புதிய ஒப்போ ரெனோ 8டி 5ஜி ஸ்மார்ட்போனை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது. குறிப்பாக இந்த புதிய போன் பெரிய டிஸ்பிளே, தரமான சிப்செட் மற்றும் அசத்தலான கேமரா வசதியுடன் வெளிவந்துள்ளது. இப்போது இந்த புதிய ஸ்மார்ட்போனின் விலை மற்றும் அம்சங்களைச் சற்று விரிவாகப் பார்ப்போம்.

பெரிய டிஸ்பிளே

ஒப்போ ரெனோ 8டி 5ஜி ஸ்மார்ட்போன் ஆனது 6.7-இன்ச் micro-curved AMOLED ஃபுல் எச்டி பிளஸ் டிஸ்பிளே வசதியைக் கொண்டுள்ளது. பின்பு 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட், 1080 x 2412 பிக்சல்ஸ் மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதியுடன் இந்த அசத்தலான ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளது. குறிப்பாக இந்த போனின் வடிவமைப்புக்கு அதிக கவனம் செலுத்தியுள்ளது ஒப்போ நிறுவனம்.

108எம்பி கேமராவுடன் இந்தியாவில் அறிமுகமான ஒப்போ 5ஜி போன்.! என்ன விலை?

ஒப்போ ரெனோ 8டி 5ஜி ஸ்மார்ட்போனில் குவால்காம் ஸ்னாப்டிராகன் 695 5ஜி சிப்செட் உடன் அட்ரினோ ஜிபியு ஆதரவைக் கொண்டுள்ளது. குறிப்பாக இந்த சிப்செட் சிறந்த செயல்திறன் மற்றும் மேம்பட்ட வேகத்தை வழங்கும். பின்பு ColorOS 13.1 சார்ந்த ஆண்ட்ராய்டு 13 இயங்குதள வசதியைக் கொண்டுள்ளது ஒப்போ ரெனோ ஸ்மார்ட்போன்.

புதிய ஒப்போ ரெனோ 8டி 5ஜி ஸ்மார்ட்போனில் 8ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி ஸ்டோரேஜ் வசதி உள்ளது. மேலும் நீங்கள் மெமரி கார்டை பயன்படுத்த மைக்ரோ எஸ்டி கார்டு ஸ்லாட் ஆதரவு உள்ளது. குறிப்பாக மிட்நைட் பிளாக் மற்றும் சன்ரைஸ் கோல்டு நிறங்களில் இந்த ஒப்போ ரெனோ 8டி 5ஜி ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

அசத்தலான கேமரா

108எம்பி பிரைமரி கேமரா + 2எம்பி டெப்த் கேமரா + 2எம்பி மேக்ரோ என்கிற ட்ரிபிள் ரியர் கேமரா அமைப்பைக் கொண்டுள்ளது இந்த ஒப்போ ரெனோ 8டி 5ஜி ஸ்மார்ட்போன். எனவே இந்த போனின் உதவியுடன் தரமான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை எடுக்க முடியும். பின்பு செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 32எம்பி கேமராவுடன் வெளிவந்துள்ளது இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன். குறிப்பாக எல்இடி பிளாஷ் மற்றும் பல கேமரா அம்சங்களைக் கொண்டுள்ளது இந்த ஒப்போ ரெனோ ஸ்மார்ட்போன் மாடல்.

ஒப்போ ரெனோ 8டி 5ஜி ஸ்மார்ட்போனில் 4800 எம்ஏஎச் பேட்டரி பொருத்தப்பட்டுள்ளது. எனவே சாரஜ் பற்றிய கவலை இருக்காது. இந்த போன் நீண்ட நேரம் பேட்டரி பேக்கப் வழங்கும். மேலும் 67 வாட்ஸ் பாஸ்ட் சார்ஜிங் வசதி, கைரேகை ஸகேனர் உள்ளிட்ட பல சிறப்பு அம்சங்களை கொண்டுள்ளது இந்த புதிய ஒப்போ ஸ்மார்ட்போன்.

108எம்பி கேமராவுடன் இந்தியாவில் அறிமுகமான ஒப்போ 5ஜி போன்.! என்ன விலை?

5ஜி, 4ஜி எல்டிஇ, வைஃபை, புளூடூத், ஜிபிஎஸ், யுஎஸ்பி டைப்-சி போர்ட், 3.5எம்எம் ஆடியோ ஜாக் உள்ளிட்ட பல்வேறு கனெக்டிவிட்டி ஆதரவுகளைக் கொண்டுள்ளது இந்த ஒப்போ ரெனோ 8டி 5ஜி ஸ்மார்ட்போன். குறிப்பாக இந்த ஒப்போ போனை 45 நிமிடங்களில் முழுவதும் சார்ஜ் செய்துவிட முடியும் என ஒப்போ நிறுவனம் கூறியுள்ளது.

என்ன விலை?

இந்தியாவில் ஒப்போ ரெனோ 8டி 5ஜி ஸ்மார்ட்போனின் விலை ரூ.29,999-ஆக உள்ளது. பின்பு ஒப்போ ஸ்டோர், பிளிப்கார்ட் போன்ற முன்னணி தளங்களில் வரும் பிப்ரவரி 10-ம் தேதி இந்த ஒப்போ போன் விற்பனைக்கு வரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் தேர்வு செய்யப்பட்ட வங்கி கார்டுகளை பயன்படுத்தி இந்த ஸ்மார்ட்போனை வாங்கினால் குறிப்பிட்ட சலுகைகள் கிடைக்கும்.

Best Mobiles in India

English summary
Oppo Reno 8T 5G With 108-Megapixel Camera Launched: Specs, Features and More: Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X