Oppo: வெயிட்டான கேமரா செட்டப்.. கதகளி ஆடப்போகும் புதிய ஒப்போ போன்.. பிப்.3-ல் அறிமுகம்!
தரமான கேமரா போன்களை அறிமுகம் செய்வதற்கு பெயர்போன ஒப்போ நிறுவனம் வருகிற பிப்ரவரி 3 ஆம் தேதியன்று ஒரு புதிய ஸ்மார்ட்போனை இந்தியாவில் அறிமுகம் செய்யவுள்ளது. அதென்ன ஸ்மார்ட்போன்? அதன் கேமரா செட்டப் எப்படி இருக்கும்? அது என்ன விலைக்கு வரும்? இதோ விவரங்கள்:
அதென்ன ஸ்மார்ட்போன்?
நாம் இங்கே பேசுவது ஒப்போ நிறுவனத்தின் புதிய ரெனோ சீரிஸ் ஸ்மார்ட்போனை பற்றித்தான். அது ஒப்போ ரெனோ 8டி 5ஜி (Oppo Reno 8T 5G) ஆகும். இந்த ஸ்மார்ட்போன் வருகிற பிப்ரவரி 3 ஆம் தேதியன்று இந்தியாவில் அறிமுகமாகும் என்பதை ஒப்போ நிறுவனம் அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தியுள்ளது.

நினைவூட்டும் வண்ணம் ரெனோ 8 சீரீஸின் கீழ் ஏற்கனவே 2 மாடல்கள் அறிமுகமாகி விட்டன. அவைகள் ஒப்போ ரெனோ 8 (Oppo Reno 8) மற்றும் ஒப்போ ரெனோ 8 ப்ரோ (Oppo Reno 8) ஆகும். ஆக ஒப்போ ரெனோ 8டி மாடல், இந்த சீரிஸின் கீழ் வரும் மூன்றாவது மாடலாக இருக்கும்!
ஒப்போ ரெனோ 8டி 5ஜி: என்ன விலைக்கு வரும்?
கிடைக்கப்பெற்ற லீக் தகவலின் அடிப்படையில், ஒப்போ ரெனோ 8டி 5ஜி ஸ்மார்ட்போனின் விலை நிர்ணயம் தோராயமாக ரூ.28,500 ஆக இருக்கலாம். இது எதிர்பார்க்கப்படும் விலை ஆகும்; அதிகாரபூர்வமான விலை நிர்ணயம் அல்ல.

நினைவூட்டும் வண்ணம், ஒப்போ ரெனோ 8 5ஜி ஸ்மார்ட்போன், ரூ.29,999 க்கு விற்பனை செய்யப்படுகிறது. மறுகையில் உள்ள ப்ரோ மாடல், ரூ.45,999 க்கு வாங்க கிடைக்கிறது!
ஒப்போ ரெனோ 8டி 5ஜி: என்னென்னெ அம்சங்களை எதிர்பார்க்கலாம்?
ஒப்போ ரெனோ 8டி ஸ்மார்ட்போனில் பஞ்ச்-ஹோல் டிசைன் உடனான 6.43-இன்ச் அமோஎல்இடி டிஸ்ப்ளே பேனல் இடம்பெறலாம். மேலும் இந்த டிஸ்பிளே 90ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட்டை ஆதரிக்கும் என்றும், ஃபுல்எச்டி பிளஸ் ரெசல்யூஷனுடன் வரும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

ரெனோ 8டி ஸ்மார்ட்போனில் ட்ரிபிள் ரியர் கேமரா செட்டப் இடம்பெறலாம். அதில் 100எம்பி மெயின் சென்சார் + 2எம்பி மைக்ரோ சென்சார் + 2எம்பி மோனோ லென்ஸ் இருக்கலாம். முன்பக்கத்தை பொறுத்தவரை, 32எம்பி கேமரா இருக்கலாம்.
கீக்பெஞ்ச் வழியாக கிடைத்த தகவலின்படி, ரெனோ 8டி ஸ்மார்ட்போனில் மீடியாடெக் ஹீலியோ ஜி99 சிப்செட் பேக் செய்யப்படலாம். அது 8ஜிபி வரையிலான ரேம் மற்றும் 128ஜிபி வரையிலான இன்டர்னல் ஸ்டோரேஜுடன் அனுப்பப்படலாம்.
ப்ளூடூத் எஸ்இஜி லிஸ்டிங் வழியாக கிடைத்த தகவலின்படி, இந்த ஸ்மார்ட்போன் ப்ளூடூத் 5.3 கனெக்டிவிட்டியை ஆதரிக்கும் மற்றும் கலர்ஓஎஸ் 13 உடன் அனுப்பப்படும்.
பேட்டரியை பொறுத்தவரை, எவ்வளவு எம்ஏஎச் திறனை பேக் செய்யும் என்பது பற்றி விவரங்கள் இல்லை. ஆனால் 33W வயர்டு பாஸ்ட் சார்ஜிங்கை சப்போர்ட் செய்யும் என்பது போல் தெரிகிறது.
இந்தியாவில் மட்டுமல்ல!
ஒப்போவின் புதிய ரெனோ 8டி 5ஜி ஸ்மார்ட்போன், இந்தியாவில் மட்டுமல்ல பிலிப்பைன்ஸ் நாட்டிலும் அறிமுகம் செய்யப்பட உள்ளது; ஆனால் பிப்ரவரி 3 ஆம் தேதிக்கு பதிலாக, பிப்ரவரி 8 அன்று அறிமுகமாகும்.


Click it and Unblock the Notifications








