Home
Mobile

108எம்பி ரியர் கேமரா கொண்ட புதிய ஒப்போ 5G போனின் அறிமுக தேதி வெளியானது.! ரெடியா இருங்க..!

ஒப்போ நிறுவனம் புதிய ஒப்போ ரெனோ 8டி ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்ய உள்ளது. அதாவது இந்த ஒப்போ ரெனோ 8டி ஸ்மார்ட்போன் முதலில் இந்தோனேசியாவில் வரும் பிப்ரவரி 6-ம் தேதி அறிமுகம் செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்பின்பு இந்தியா உட்பட பல்வேறு நாடுகளிலும் அறிமுகமாகும்.

குறிப்பாக இந்த புதிய ஒப்போ போன் அசத்தலான அம்சங்களுடன் பட்ஜெட் விலையில் வெளிவரும் என்பதால் அதிக எதிர்பார்ப்புகளை உருவாக்கியுள்ளது. மேலும் இப்போது ஆன்லைனில் கசிந்த ஒப்போ ரெனோ 8டி ஸ்மார்ட்போனின் அம்சங்களைச் சற்று விரிவாகப் பார்ப்போம்.

108எம்பி கேமரா கொண்ட புதிய ஒப்போ 5G போனின் அறிமுக தேதி வெளியானது.!

தரமான டிஸ்பிளே

இந்த ஒப்போ ரெனோ 8டி ஸ்மார்ட்போன் 6.7-இன்ச் ஃபுல் எச்டி பிளஸ் ஒஎல்இடி டிஸ்பிளே வசதியைக் கொண்டுள்ளது. பின்பு இந்த ஸ்மார்ட்போன் சிறந்த திரை அனுபவத்தை வழங்கும் என்றே கூறலாம். குறிப்பாக ஒன்பிளஸ் ஸ்மார்ட்போன்களை போன்று மேம்பட்ட டிஸ்பிளே அனுபவத்தை வழங்கும் இந்த ஒப்போ ரெனோ 8டி ஸ்மார்ட்போன்.

டிஸ்பிளே அம்சங்கள்

ஒப்போ ரெனோ 8டி ஸ்மார்ட்போன் 90 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட், 450 நிட்ஸ் ப்ரைட்னஸ், 240 ஹெர்ட்ஸ் டச் சாம்ப்ளிங் ரேட் உள்ளிட்ட சிறப்பான ஆதரவுகளுடன் வெளிவரும். பின்பு கொரில்லா கிளாஸ் பாதுகாப்பு வசதியுடன் இந்த புதிய ஒப்போ போன் வெளிவரும். குறிப்பாக இந்த போனின் வடிவமைப்பு மிகவும் அருமையாக இருக்கும்.

ஸ்னாப்டிராகன் சிப்செட்

ஒப்போ ரெனோ 8டி ஸ்மார்ட்போன் மாடல் ஸ்னாப்டிராகன் 695 சிப்செட் வசதியைக் கொண்டுள்ளது. குறிப்பாக இந்த சிப்செட் செயல்திறன் மிகவும் அருமையாக இருக்கும். பின்பு மேம்பட்ட வேகத்தை வழங்கும் இந்த ஸ்னாப்டிராகன் 695 சிப்செட். அதேபோல் ஆண்ட்ராய்டு 13 இயங்குதளத்தை அடிப்படையாகக் கொண்டு இந்த போன் அறிமுகமாகும். சுருக்கமாகக் கூறவேண்டும் என்றால் இந்த மேம்பட்ட செயல்திறன் மற்றும் வேகத்தை வழங்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

108எம்பி கேமரா கொண்ட புதிய ஒப்போ 5G போனின் அறிமுக தேதி வெளியானது.!

ட்ரிபிள் ரியர் கேமரா

ஒப்போ ரெனோ 8டி ஸ்மார்ட்போன் 108எம்பி பிரைமரி கேமரா + 2எம்பி மேக்ரோ கேமரா+ 2எம்பி மோனோ லென்ஸ் என்கிற ட்ரிபிள் ரியர் கேமரா அமைப்பைக் கொண்டுள்ளது. எனவே இந்த போனின் உதவியுடன் தரமான புகைப்படங்களை எடுக்க முடியும். பின்பு செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 32எம்பி கேமரா வசதியைக் கொண்டுள்ளது இந்த ஒப்போ போன். பின்புஅசத்தலான கேமரா அம்சங்கள் மற்றும் எல்இடி பிளாஷ் ஆதரவைக் கொண்டுள்ளது இந்த அசத்தலான ஸ்மார்ட்போன்.

சிறந்த பாதுகாப்பு வசதி

புதிய ஒப்போ ரெனோ 8டி ஸ்மார்ட்போனில் 6ஜிபி/8ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி/256ஜிபி ஸ்டோரேஜ் வசதி உள்ளது. பின்பு இந்த போனை மைக்ரோ எஸ்டி கார்டு ஸ்லாட் ஆதரவு உள்ளது. எனவே நீங்கள் மெமரி கார்டை இதில் பயன்படுத்த முடியும். மேலும் நீர் எதிர்ப்பிற்கான IPX54 மதிப்பீட்டை கொண்டுள்ளது இந்த ஒப்போ ரெனோ 8டி ஸ்மார்ட்போன் மாடல். குறிப்பாக இந்த போன் சிறந்த பாதுகாப்பு வசதியுடன் அறிமுகமாகும்.

பாஸ்ட் சார்ஜிங் வசதி

ஒப்போ ரெனோ 8டி ஸ்மார்ட்போன் ஆனது 4800 எம்ஏஎச் பேட்டரி ஆதரவைக் கொண்டு வெளிவரும். பின்பு 67 வாட்ஸ் பாஸ்ட் சார்ஜிங் வசதி, கைரேகை ஸ்கேனர் உள்ளிட்ட பல சிறப்பு அம்சங்களைக் கொண்டுள்ளது இந்த ஒப்போ ரெனோ 8டி ஸ்மார்ட்போன். குறிப்பாக இந்த ஸ்மார்ட்போனை சில நிமிடங்களில் சார்ஜ் செய்துவிட முடியும்.

108எம்பி கேமரா கொண்ட புதிய ஒப்போ 5G போனின் அறிமுக தேதி வெளியானது.!

பட்ஜெட் விலை

5ஜி, வைஃபை, புளூடூத், ஜிபிஎஸ், 3.5எம்எம் ஆடியோ ஜாக் உள்ளிட்ட பல்வேறு கனெக்டிவிட்டி ஆதரவுகளுடன் இந்த அசத்தலான ஒப்போ ரெனோ 8டி ஸ்மார்ட்போன் அறிமுகமாகும். குறிப்பாக இந்த போன் பட்ஜெட் விலையில் அறிமுகமாகும் என்பதால் இந்தியாவில் அதிக எதிர்பார்ப்புகளை உருவாக்கியுள்ளது. அதேபோல் இந்த ஆண்டு பல அசத்தலான 5ஜி ஸ்மார்ட்போன்களை பட்ஜெட் விலையில் அறிமுகம் செய்யத் திட்டமிட்டுள்ளது ஒப்போ நிறுவனம்.

More from GizBot

Best Mobiles in India

English summary
Oppo Reno 8T 5G smartphone launch date and photos leaked online: Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X