ஒப்போ ரெனோ 8 இப்படியும் இருக்கலாம்- ஆண்ட்ராய்டு 12 ஓஎஸ், 50 எம்பி பிரதான கேமரா, 80வாட்ஸ் ஃபாஸ்ட் சார்ஜிங்!
ஒப்போ ரெனோ 8 ஸ்மார்ட்போனானது கீக்பெஞ்ச் பெஞ்ச்மார்க் பட்டியலில் கண்டுபிடிக்கப்பட்டிருக்கிறது. வரவிருக்கும் ஒப்போ ரெனோ 8 ஸ்மார்ட்போனானது ஸ்னாப்டிராகன் 7 ஜென் 1 எஸ்ஓசி வசதியோடு வரும் என தகவல்கள் வெளியாகி இருக்கிறது.

ஒப்போ ரெனோ 8
ஒப்போ ரெனோ 8 சாதனம் கீக்பெஞ்சில் காணப்பட்டிருக்கிறது. இந்த ஸ்மார்ட்போனின் சில விவரக்குறிப்புகள் வெளிப்படுத்தப்பட்டிருக்கிறது. இந்த ஸ்மார்ட்போனானது ஸ்னாப்டிராகன் 7 ஜென் 1 சிப்செட் வசதியைக் கொண்டிருக்கிறது. ஒப்போ ரெனோ 8 சீரிஸ் விரைவில் சீனாவில் அறிமுகம் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஒப்போ ரெனோ 8 தொடரில் ஒப்போ ரெனோ 8, ஒப்போ ரெனோ 8 லைட் மற்றும் ஒப்போ ரெனோ 8 ப்ரோ ஆகிய மூன்று ஸ்மார்ட்போன்கள் இடம்பெறும் என தகவல்கள் வெளியாகி இருக்கிறது. ஒப்போ ரெனோ 8 தொடரின் அடிப்படை மாறுபாடு கீக்பெஞ்ச் தளத்தில் காணப்பட்டுள்ளது. இந்த தகவலில் ஸ்மார்ட்போன் சிறப்பம்சங்கள் வெளிப்படுத்தப்பட்டிருக்கிறது.

ஒப்போ ரெனோ 8 கீக்பெஞ்ச் தகவல்
ஒப்போ ரெனோ 8 கீக்பெஞ்ச் தகவலின்படி, ஒப்போ ரெனோ 8 ஸ்மார்ட்போனானது மாடல் எண் PGAM10-ஐக் கொண்டிருக்கிறது. ஒப்போ ரெனோ 8 ஸ்மார்ட்போனானது ஸ்னாப்டிராகன் 7 ஜென் 1 செயலி ஆதரவோடு இயக்கப்படுகிறது. செயலியின் அதிகபட்ச கடிகார வேகம் 2.36 ஜிகாஹெர்ட்ஸ் என பட்டியல் தகவல் தெரிவிக்கிறது. ஒப்போ ரெனோ 8 ஸ்மார்ட்போனானது 8 ஜிபி ரேம் ஆதரவோடு வரும் என தகவல்கள் தெரிவிக்கிறது. ஸ்மார்ட்போனின் மென்பொருளைப் பொறுத்தவரை இந்த சாதனம் சமீபத்திய ஆண்ட்ராய்டு 12 இயங்குதள ஆதரவோடு வருகிறது. கீக்பெஞ்ச்-ன்படி இந்த ஸ்மார்ட்போன் சிங்கிள் கோர் மற்றும் மல்டி கோர் சோதனைகளில், ஒப்போ ரெனோ 8 முறையே 712 மற்றும் 2358 புள்ளிகளை பெற்றிருக்கிறது. கீக்பெஞ்ச் தகவலை முதலில் மைஸ்மார்ட்பிரைஸ் கண்டறிந்தது.

ஒப்போ ரெனோ 8 சாதனத்தின் எதிர்பார்க்கப்படும் சிறப்பம்சங்கள்
சமீபத்திய அறிக்கையின்படி, ஒப்போ ரெனோ 8 சீரிஸ் ஜூன் மாத இறுதியில் இந்தியாவில் அறிமுகம் செய்யப்படும். மேலும் ஒப்போ இந்தியாவில் ரெனோ 8 தொடருடன் பல AIoT தயாரிப்புகளை அறிமுகம் செய்யும் என தகவல்கள் தெரிவிக்கிறது. ஒப்போ ரெனோ 8 சாதனத்தின் எதிர்பார்க்கப்படும் சிறப்பம்சங்கள் குறித்து பார்க்கையில், இந்த சாதனம் 120 ஹெர்ட்ஸ் புதுப்பிப்பு வீத டிஸ்ப்ளே ஆதரவோடு வருகிறது. 6.55 இன்ச் ஓஎல்இடி முழு எச்டி ப்ளஸ் டிஸ்ப்ளேவைக் கொண்டிருக்கும் என தகவல்கள் தெரிவிக்கிறது. இந்த சாதனம் வரவிருக்கும் ஸ்னாப்டிராகன் 7 ஜென் 1 எஸ்ஓசி வசதியோடு வரும் எனவும் இது 12 ஜிபிர ரேம் அம்சத்தைக் கொண்டிருக்கும் எனவும் கூறப்படுகிறது. இது 4எக்ஸ் கார்டெக்ஸ் ஏ710 சிபியூ கோர்கள், அட்ரீனோ 662 ஜிபியூ உடனான சிப் பொருத்தப்பட்டிருக்கும் என கூறப்படுகிறது. இந்த சிப்செட் விரைவில் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது.

ஒப்போ ரெனோ 8 கேமரா அம்சங்கள்
ஒப்போ ரெனோ 8 கேமரா அம்சங்களை பொறுத்தவரையில் இந்த ஸ்மார்ட்போனில் மூன்று கேமரா அமைப்பு பொருத்தப்பட்டிருக்கும் எனவும் இது 50 எம்பி சோனி ஐஎம்எக்ஸ் 766 பிரதான கேமரா சென்சார், 8 எம்பி அல்ட்ரா வைட் கேமரா மற்றும் 2 எம்பி மேக்ரோ கேமராவைக் கொண்டிருக்கும் என தகவல்கள் தெரிவிக்கிறது. அதேபோல் கூடுதலாக செல்பி மற்றும் வீடியோ ஆதரவுகளுக்கு என இந்த ஸ்மார்ட்போனில் 32 எம்பி முன்புற கேமரா பொருத்தப்பட்டிருக்கும் என தகவல்கள் வெளியாகி இருக்கிறது.

80 வாட்ஸ் ஃபாஸ்ட் சார்ஜிங் ஆதரவு
கூடுதலாக இந்த ஸ்மார்ட்போனானது ஆண்ட்ராய்டு 12 உடனான கலர் ஓஎஸ் 12 மூலம் இயங்கும் எனவும் இந்த சாதனம் 80 வாட்ஸ் ஃபாஸ்ட் சார்ஜிங் ஆதரவைக் கொண்டிருக்கும் எனவும் தகவல்கள் தெரிவிக்கிறது. இந்த ஸ்மார்ட்போனானது 4500 எம்ஏஎச் பேட்டரியைக் கொண்டிருக்கும். பாதுகாப்பு அம்சத்துக்கு என இந்த சாதனத்தில் இன் டிஸ்ப்ளே கைரேகை ஸ்கேனர் மற்றும் ஃபேஸ் அன்லாக் வசதியைக் கொண்டிருக்கும் என தகவல்கள் தெரிவிக்கிறது.


Click it and Unblock the Notifications