நாளை இந்தியாவில் அறிமுகமாகும் Oppo ரெனோ 8, ரெனோ 8 ப்ரோ.! சூப்பரான அம்சங்கள்.!

|

நாம் அனைவரும் அதிகம் எதிர்பார்த்த ஒப்போ ரெனோ 8 மற்றும் ஒப்போ ரெனோ 8 ப்ரோ ஸ்மார்ட்போன்களை நாளை (18/7/2022) அறிமுகம் செய்ய உள்ளது. குறிப்பாக இந்த இரண்டு ஸ்மார்ட்போன்களும் தனித்துவமான அம்சங்களுடன் வெளிவரும் என ஒப்போ கூறியுள்ளது.

புதிய ஒப்போ போன்களின் விலை

புதிய ஒப்போ போன்களின் விலை

இணையத்தில் கசிந்த தகவலின்படி, 8ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜ் ஆதரவு கொண்ட ஒப்போ ரெனோ 8 போன் ரூ.29,999- விலையில் அறிமுகமாகும் என்று கூறப்படுகிறது. பின்பு இதன் 256ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜ் ஆதரவு கொண்ட வேரியண்ட் ரூ.31,990-விலையில் அறிமுகமாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது வெறும் Xiaomi ஸ்பீக்கர் இல்ல! அதுக்கும் மேல! வாய்ஸ் மூலம் கூட இது வெறும் Xiaomi ஸ்பீக்கர் இல்ல! அதுக்கும் மேல! வாய்ஸ் மூலம் கூட "இதையெல்லாம்" கண்ட்ரோல் செய்யலாமா? அடடே!

ஒப்போ ரெனோ 8 ப்ரோ

அதேபோல் 12ஜிபி ரேம் மற்றும் 256ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜ் ஆதரவு கொண்ட ஒப்போ ரெனோ 8 ப்ரோ ஸ்மார்ட்போனின் விலை ரூ.44,990-என்று தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்போது ஆன்லைனில் கசிந்த இந்த போன்களின்அம்சங்களைப் பார்ப்போம்.

மனிதகுலம் இதுவரை கண்டிராத கோணத்தில் கிரகம் 5! மூன்று நிலவுகளை காட்டிய James Webb Space Telescope!மனிதகுலம் இதுவரை கண்டிராத கோணத்தில் கிரகம் 5! மூன்று நிலவுகளை காட்டிய James Webb Space Telescope!

ஒப்போ ரெனோ 8 ப்ரோ அம்சங்கள்

ஒப்போ ரெனோ 8 ப்ரோ அம்சங்கள்

ஒப்போ ரெனோ 8 ப்ரோ ஸ்மார்ட்போனில் 6.62-இன்ச் AMOLED டிஸ்பிளே வசதி உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பின்பு 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட், 450 நிட்ஸ் ப்ரைட்னஸ், 240 ஹெர்ட்ஸ் டச் சாம்ப்ளிங் ரேட் போன்ற சிறப்பான அம்சங்களுடன் இந்த புதிய ஸ்மார்ட்போன் வெளிவரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேபோல் இந்த போன் Ultra-Conductive கூலிங் சிஸ்டத்துடன் வெளிவரும் என்று கூறப்படுகிறது. எனவே நீங்கள் அதிக நேரம் கேம் விளையாடினாலும் போன் சூடாகாது.

மொத்த சொத்தையும் தானமாக கொடுக்கும் Bill Gates: பணக்காரராக இருக்க பிடிக்கலயாம்- சாருக்கு என்ன ஆச்சு?மொத்த சொத்தையும் தானமாக கொடுக்கும் Bill Gates: பணக்காரராக இருக்க பிடிக்கலயாம்- சாருக்கு என்ன ஆச்சு?

ஒப்போ ரெனோ 8 ப்ரோ போனில் தரமான சிப்செட்

ஒப்போ ரெனோ 8 ப்ரோ போனில் தரமான சிப்செட்

ஒப்போ ரெனோ 8 ப்ரோ ஸ்மார்ட்போனில் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட ஸ்னாப்டிராகன் 7 ஜென் 1 சிப்செட் வசதி உள்ளதாக கூறப்படுகிறது. குறிப்பாக இந்த சிப்செட்-இன் செயல்திறன் மிகவும் அருமையாக இருக்கும். அதேபோல் இந்த ஒப்போ ரெனோ 8 ப்ரோ போனில் மாலி-ஜி610 MC6 கிராபிக்ஸ்இருப்பதாக கூறப்படுகிறது.

இதுதவிர ரெனோ 8 ப்ரோ ஸ்மார்ட்போன் ஹைப்பர் இன்ஜின் 5.0 கேமிங் தொழில்நுட்பங்களைக் கொண்டுள்ளது. எனவே கேமிங் பயனர்கள் இந்த ஒப்போ ரெனோ 8 ப்ரோ ஸ்மார்ட்போனை நம்பி வாங்கலாம்.

Jio + Redmi சேர்ந்து செஞ்ச வேலையை பார்த்தீங்களா? Redmi K50i 5G ரிசல்ட் சூப்பராம்ல! 2 பேரும் ஓவர் குஷி!Jio + Redmi சேர்ந்து செஞ்ச வேலையை பார்த்தீங்களா? Redmi K50i 5G ரிசல்ட் சூப்பராம்ல! 2 பேரும் ஓவர் குஷி!

 ரெனோ 8 ப்ரோ கேமரா

ரெனோ 8 ப்ரோ கேமரா

ரெனோ 8 ப்ரோ ஸ்மார்ட்போன் 50எம்பி மெயின் கேமரா + 8எம்பி அல்ட்ரா வைடு லென்ஸ் + 2எம்பி டெப்த் லென்ஸ் என்கிற ட்ரிபிள் ரியர் கேமரா அமைப்பை கொண்டுள்ளது.பின்பு செல்பீகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 32எம்பி கேமரா ஆதரவு கொண்டுள்ளது இந்த புதிய ஒப்போ மாடல்.

எனவே இந்த ஸ்மார்ட்போன் உதவியுடன் அருமையான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை எடுக்க முடியும்.

கம்மி விலையில் Smartphone வாங்க அசையா? ரூ.6,699 இருந்தா போதுமே! இந்த போன்லாம் வாங்கலாம்கம்மி விலையில் Smartphone வாங்க அசையா? ரூ.6,699 இருந்தா போதுமே! இந்த போன்லாம் வாங்கலாம்

பாஸ்ட் சார்ஜிங் வசதி

பாஸ்ட் சார்ஜிங் வசதி

ஒப்போ ரெனோ 8 ப்ரோ ஸ்மார்ட்போனில் 4500 எம்ஏஎச் பேட்டரி இருப்பதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. பின்பு இதை சார்ஜ் செய்ய 80W SUPERVOOC பிளாஷ் சார்ஜிங் தொழில்நுட்ப வசதி இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே இந்த போனை வெறும் 11 நிமிடங்களில் 50 சதவீதம்சார்ஜ் செய்ய முடியும்.

மேலும் இந்த ஒப்போ ரெனோ 8 ப்ரோ ஸ்மார்ட்போன் ஆண்ட்ராய்டு 12 இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டு வெளிவரும் என்று தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Android பயனர்களுக்கு இப்படி ஒரு ஆபத்தா? Autolycos மால்வேர் தாக்குதல்! உங்க போனில் இருந்தால் உஷார்.!Android பயனர்களுக்கு இப்படி ஒரு ஆபத்தா? Autolycos மால்வேர் தாக்குதல்! உங்க போனில் இருந்தால் உஷார்.!

ஒப்போ ரெனோ 8 அம்சங்கள்

ஒப்போ ரெனோ 8 அம்சங்கள்

ஒப்போ ரெனோ 8 ஸ்மார்ட்போன் ஆனது 6.8-இன்ச் AMOLED டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டுள்ளது. பின்பு 1080 பிக்சல்ஸ், 90 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் மற்றும் சிறந்த பாதுகாப்பு அம்சங்களுடன் இந்த புதிய ஸ்மார்ட்போன் அறிமுகமாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

'நீர்' ஆதாரங்களை வேற்று கிரகத்தில் கண்டறிந்த James Webb Space Telescope! இங்கு உயிர்கள் வாழ முடியுமா?'நீர்' ஆதாரங்களை வேற்று கிரகத்தில் கண்டறிந்த James Webb Space Telescope! இங்கு உயிர்கள் வாழ முடியுமா?

ஒப்போ ரெனோ 8 சிப்செட்

ஒப்போ ரெனோ 8 சிப்செட்

ஒப்போ ரெனோ 8 ஸ்மார்ட்போனில் அட்டகாசமான மீடியாடெக் Dimensity 1300 சிப்செட் வசதி உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பின்பு ஆண்ட்ராய்டு 12 இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டு வெளிவரும் இந்த புதிய ஸ்மார்ட்போன் மாடல்.

தம்பி நத்திங் கொஞ்சம் ஓரமா போங்க: தரமான Samsung கேலக்ஸி எம்13, கேலக்ஸி எம்13 5ஜி அறிமுகம்.!தம்பி நத்திங் கொஞ்சம் ஓரமா போங்க: தரமான Samsung கேலக்ஸி எம்13, கேலக்ஸி எம்13 5ஜி அறிமுகம்.!

ஒப்போ ரெனோ 8 பேட்டரி

ஒப்போ ரெனோ 8 பேட்டரி

ஒப்போ ரெனோ 8 ஸ்மார்ட்போனில் 4500 எம்ஏஎச் பேட்டரி இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பின்பு இதை சார்ஜ் செய்ய 80W பாஸ்ட் சார்ஜிங் வசதியும் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. அதேபோல் இதன் வடிவமைப்புக்கு அதிக கவனம் செலுத்தியுள்ளது அந்நிறுவனம்.

Amazon உடன் இணைந்த Uber: இனி போனாலும் தள்ளுபடி, வந்தாலும் தள்ளுபடி- எல்லாமே நமக்கு சாதகம் தான்!Amazon உடன் இணைந்த Uber: இனி போனாலும் தள்ளுபடி, வந்தாலும் தள்ளுபடி- எல்லாமே நமக்கு சாதகம் தான்!

 ஒப்போ ரெனோ 8 கேமரா

ஒப்போ ரெனோ 8 கேமரா

ஒப்போ ரெனோ 8 ஸ்மார்ட்போன் 50எம்பி மெயின் கேமரா + 2எம்பி மேக்ரோ லென்ஸ் + 2எம்பி டெப்த் லென்ஸ் என்கிற ட்ரிபிள் ரியர் கேமரா அமைப்பை கொண்டுள்ளது. பின்பு செல்பீகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 32எம்பி கேமரா ஆதரவுடன் கொண்டுள்ளது புதிய ஒப்போ ரெனோ 8 மாடல்.

Best Mobiles in India

English summary
Oppo Reno 8 Series with 50 Mega Pixel Camera Launching in India on July 24: Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X