நீங்கள் எதிர்பார்த்த சிப்செட்: இந்தியாவில் அறிமுகமாகும் Oppo Reno 8 Pro.! எப்போது தெரியுமா?

|

ஒப்போ நிறுவனம் 2022 ஜூலை 18-ம் தேதி ஒப்போ ரெனோ 8 ப்ரோ ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்ய உள்ளது. குறிப்பாக இந்த ஸ்மார்ட்போன் தரமான சிப்செட் வசதியுடன் வெளிவரும் என்பதால் இந்தியா முழுவதும் அதிக எதிர்பார்ப்புகளை உருவாக்கியுள்ளது.

கூலிங் சிஸ்டம்

கூலிங் சிஸ்டம்

ஒப்போ ரெனோ 8 ப்ரோ ஸ்மார்ட்போனின் மென்பொருள் வசதிக்கு அதிக கவனம் செலுத்தியுள்ளது ஒப்போ நிறுவனம். அதாவது இந்த போன் Ultra-Conductive கூலிங் சிஸ்டத்துடன் வருகிறது. எனவே நீங்கள் அதிக நேரம் கேம் விளையாடினாலும் போன் சூடாகாது.

என்ன ராசா சொல்ற? Swiggy பேக் உடன் குதிரையில் போன பையன் நீயா? ஸ்விகி-க்கு காத்திருந்த அதிர்ச்சி!என்ன ராசா சொல்ற? Swiggy பேக் உடன் குதிரையில் போன பையன் நீயா? ஸ்விகி-க்கு காத்திருந்த அதிர்ச்சி!

தரமான சிப்செட்

தரமான சிப்செட்

முன்பு கூறியபடி இந்த போன் தரமான Dimensity 8100-MAX சிப்செட் வசதியுடன் வெளிவரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக
ஸ்னாப்டிராகன் 8 ஜென் 1 போன்று இதுவும் மிகச் சிறப்பான செயல்திறனை கொண்டது ஆகும். எனவே நீங்கள் நினைத்த ஆப்ஸ்களை தடையின்றி
பயன்படுத்த முடியும்.

அதேபோல் இந்த ஒப்போ ரெனோ 8 ப்ரோ போனில் மாலி-ஜி610 MC6 கிராபிக்ஸ் இருப்பதால் பயன்படுத்த அருமையாக இருக்கும். குறிப்பாக இது சிறந்த வேகத்தை கொடுக்கும் என்றே கூறலாம்.

Jio, Airtel, Vi: தினமும் 3ஜிபி டேட்டா.. அன்லிமிடெட் நன்மை.. OTT கூட இருக்கா? இது தெரியாம போச்சே!Jio, Airtel, Vi: தினமும் 3ஜிபி டேட்டா.. அன்லிமிடெட் நன்மை.. OTT கூட இருக்கா? இது தெரியாம போச்சே!

கேமிங் போன்

கேமிங் போன்

மேலும் இந்த புதிய ஸ்மார்ட்போன் ஹைப்பர்இன்ஜின் 5.0 கேமிங் தொழில்நுட்பங்களைக் கொண்டுள்ளது. எனவே கேமிங் பயனர்கள் இந்த ஒப்போ ரெனோ 8 ப்ரோ ஸ்மார்ட்போனை நம்பி வாங்கலாம்.

சூப்பரான பேட்டரி

சூப்பரான பேட்டரி

ஒப்போ ரெனோ 8 ப்ரோ ஸ்மார்ட்போனில் 4500 எம்ஏஎச் பேட்டரி இருப்பதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு பதிலாக ஒரு 5000 எம்ஏஎச் பேட்டரி வழங்கப்பட்டால் இன்னமும் அருமையாக இருக்கும். பின்பு எப்போதுமே பாஸ்ட் சார்ஜிங் தொழில்நுட்பத்தில் அதிக கவனம் செலுத்துகிறது ஒப்போ.

இந்த OnePlus 10T போனுக்காக இந்தியாவே வெயிட்டிங்.! அப்படியென்ன ஸ்பெஷல்: எப்போது அறிமுகம்?இந்த OnePlus 10T போனுக்காக இந்தியாவே வெயிட்டிங்.! அப்படியென்ன ஸ்பெஷல்: எப்போது அறிமுகம்?

 50 சதவீதம் சார்ஜ்

அதன்படி இந்த புதிய போனில் 80W SUPERVOOC பிளாஷ் சார்ஜிங் தொழில்நுட்ப வசதி இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே இந்த போனை
வெறும் 11 நிமிடங்களில் 50 சதவீதம் சார்ஜ் செய்ய முடியும்.

Xiaomi 12 வரிசையில் இப்படி ஒரு Lite வெர்ஷன் மாடலா? மக்கள் அதிகம் கவர்ந்த புதிய Xiaomi 12 Lite இதான்Xiaomi 12 வரிசையில் இப்படி ஒரு Lite வெர்ஷன் மாடலா? மக்கள் அதிகம் கவர்ந்த புதிய Xiaomi 12 Lite இதான்

பெரிய டிஸ்பிளே

பெரிய டிஸ்பிளே

ஒப்போ ரெனோ 8 ப்ரோ ஸ்மார்ட்போனில் 6.7-இன்ச் ஃபுல் எச்டி பிளஸ் AMOLED டிஸ்பிளே வசதி இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக பெரிய டிஸ்பிளே என்பதால் கேமிங், வீடியோ பயன்பாடுகளுக்கு மிகவும் அருமையாக இருக்கும்.

கேமரா எப்படி?

கேமரா எப்படி?

இந்த ரெனோ 8 ப்ரோ ஸ்மார்ட்போன் 50எம்பி மெயின் கேமரா + 8எம்பி அல்ட்ரா வைடு லென்ஸ் + 2எம்பி டெப்த் லென்ஸ் என்கிற ட்ரிபிள் ரியர் கேமரா அமைப்பை கொண்டுள்ளது. பின்பு செல்பீகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 32எம்பி கேமரா ஆதரவுடன் இந்த புதிய ஸ்மார்ட்போன்வெளிவரும்.

தப்பு பண்ணிட்டீங்களே நத்திங்! Nothing Phone 1-ல் சார்ஜர் இல்லையா? லாஸ்ட்ல இப்படியா முடியனும்?தப்பு பண்ணிட்டீங்களே நத்திங்! Nothing Phone 1-ல் சார்ஜர் இல்லையா? லாஸ்ட்ல இப்படியா முடியனும்?

ஒப்போ ரெனோ 8 ப்ரோ

குறிப்பாக ஒப்போ ரெனோ 8 ப்ரோ ஸ்மார்ட்போன் ஆனது 8ஜிபி/12ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி/256ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜ் ஆதரவைக் கொண்டுள்ளது. மேலும் இந்த ஸ்மார்ட்போன் இந்திய சந்தையில் அதிக எதிர்பார்ப்புகளை உருவாக்கியுள்ளது.

மேலும் தொழில்நுட்பம், விண்வெளி மற்றும் அறிவியல் தொடர்பான இன்னும் கூடுதல் சுவாரசியமான செய்திகள் பற்றி அறிந்துகொள்ள எங்கள் கிஸ்பாட் சேனல் உடன் இணைந்திருங்கள். உங்களின் கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்துகொள்ளுங்கள்.

Most Read Articles
Best Mobiles in India

English summary
Oppo Reno 8 Pro with 50 Mega Pixel Camera Launching in India on July 18: Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X