Just In
- 12 hrs ago
ரூ.6,999க்கு அறிமுகமான ஸ்மார்ட்போன்! 124 மணிநேர பேட்டரி ஆயுள்.. இது எப்படி இருக்கு?
- 13 hrs ago
இவ்வளவு கம்மி விலைனா கண்டிப்பா Infinix Note 12i வாங்கலாமே.! ரேட் எவ்வளவு தெரியுமா?
- 13 hrs ago
ஆப்பிள் வாட்ச் தோற்றத்தில் அறிமுகமான Ptron ஸ்மார்ட்வாட்ச்: கம்மி விலை.!
- 14 hrs ago
அங்கே சூரிய வெளிச்சமே படாது.. அதனால் அங்கே? நிலவின் முதுகு பற்றிய நெடுநாள் மர்மத்தை உடைத்த NASA விஞ்ஞானி!
Don't Miss
- News
லோக்சபா தேர்தல்: ஆளுநர்களின் சர்ச்சை நடவடிக்கைகளுக்கு டெல்லி கடிவாளம்- மகா. ஆளுநர் ராஜினாமா ஏன்?
- Movies
அதிர்ச்சி.. இயக்குநரும் குணசித்திர நடிகருமான ராமதாஸ் மாரடைப்பால் காலமானார்.. சோகத்தில் திரையுலகம்
- Automobiles
இந்தியால இதுக்கு முன்னாடி இப்படி ஒரு ஹெல்மெட் தயாரிக்கல... இதோட சிறப்பு என்ன தெரிஞ்சா கடைக்கு இப்பவே ஓடுவீங்க!
- Lifestyle
Today Rasi Palan 24 January 2023: இன்று இந்த ராசிக்காரர்களுக்கு திடீர் பண வரவிற்கான வாய்ப்புகள் அதிகம்...
- Finance
ரூ.10,000 டூ ரூ.3 கோடியான கதை.. 22 பென்னி பங்குகள் கொடுத்த ஜாக்பாட் சான்ஸ்.. இனி கிடைக்குமா?
- Sports
கே.எல்.ராகுல் - ஆதியா ஷெட்டிக்கு கெட்டி மேளம்.. கோலகலமாக நடந்த திருமணம்.. வரவேற்பு எப்போது தெரியுமா?
- Travel
இந்திய எல்லையில் இவ்வளவு அழகிய சுற்றுலாத் தலங்கள் இருக்கின்றனவா – இவ்வளவு நாள் இது தெரியாம போச்சே!
- Education
LIC ADO Recruitment 2023:எல்.ஐ.சி.,யில் 1516 பட்டதாரிகளுக்கு வாய்ப்பு...!
Avatar 2 விடுங்க மக்களே.! தங்க டிராகன் முட்டையுடன் விற்பனைக்கு வந்த Oppo Reno 8 பாருங்க.! விலை இவ்வளவு தானா?
Oppo, சில நாட்களுக்கு முன்பு, ஒப்போ ரெனோ 8 ப்ரோ ஹவுஸ் ஆப் தி டிராகன் (OPPO Reno 8 Pro House Of The Dragon Limited Edition) என்ற லிமிடெட் எடிஷன் ஸ்மார்ட்போனை இந்தியச் சந்தையில் அறிமுகப்படுத்தியது. இப்போது உலகம் முழுக்க அவதார் 2 (Avatar 2) திரைப்படத்தைப் பற்றித் தான் பேச்சு. ஆனால், இன்று அந்த பேச்சை ஒப்போ நிறுவனம் மாற்றிவிட்டது. காரணம், நிறுவனம் தங்க டிராகன் முட்டையுடன் (Golden Dragon Egg) புதிய போனை விற்பனைக்குக் கொண்டுவந்துள்ளது.

ஓப்போ ரெனோ 8 ப்ரோ ஹவுஸ் ஆஃப் டிராகன் லிமிடெட் எடிஷன்.!
இதன் பெயர் குறிப்பிடுவது போல, இந்த தனித்துவமான ஸ்மார்ட்போன் ஓப்போ மற்றும் பிரபலமான ஹவுஸ் ஆஃப் தி டிராகனின் தயாரிப்பாளர்களுக்கு இடையிலான ஒத்துழைப்பின் விளைவாக உருவானது என்பது குறிப்பிடத்தக்கது.
ஓப்போ ரெனோ 8 ப்ரோ ஹவுஸ் ஆஃப் டிராகன் லிமிடெட் எடிஷன், தர்காரியன் ஹவுஸ் லோகோவைக் கொண்ட லெதர் பிரத்தியேக கவருடன் வருகிறது.

இந்த போனுடன் எத்தனை டிராகன் கிட்கள் வருகிறது?
இந்த Oppo போனுடன் ஒரு 'தங்க டிராகன் முட்டை'யை நிறுவனம் வழங்குகிறது. இந்த போனின் பாக்சில் 'டிராகன் வடிவ சிம் எஜெக்டர் பின்', 'டர்காரியன் சிகில் கீ செயின்' மற்றும் டிராகன் சின்னம் கொண்ட 'ஃபோன் ஹோல்டர்' ஆகியவை வழங்கப்படுகிறது.
இந்த போனுடன் கிடைக்கும் அணைத்து துணை கருவிகளும் டிராகன் சின்னம் மற்றும் டிராகன் உடன் தொடர்புடையதாக வருகிறது.

சாதாரண Oppo Reno 8 Pro ஸ்மார்ட்போனிற்கும் ஹவுஸ் ஆப் தி டிராகன் ஸ்பெஷல் எடிஷனிற்கும் என்ன வித்தியாசம்?
இந்த போனின் சிறப்பம்சங்களைப் பொறுத்தவரை, இது இந்தியாவில் சில மாதங்களுக்கு முன்பு அறிமுகப்படுத்தப்பட்ட Oppo Reno 8 Pro ஸ்மார்ட்போனின் வழக்கமான மாறுபாட்டைப் போலவே அப்படியே உள்ளது.
இந்தியாவில் ஓப்போ ரெனோ 8 ப்ரோ ஹவுஸ் ஆப் டிராகன் லிமிடெட் எடிஷன் ஸ்மார்ட்போனின் விலை, மற்றும் கிடைக்கும் தன்மை பற்றிய விபரங்களைப் பார்க்கலாம்.

Oppo Reno 8 Pro House of the Dragon Limited Edition சிறப்பம்சம்
Oppo Reno 8 Pro ஆனது 120Hz ரெப்ரெஷ் ரேட் உடன் முழு HD+ தெளிவுத்திறன் கொண்ட 950 nits பீக் பிரைட்னஸ் மற்றும் 25,00,000:1 கான்ட்ராஸ்ட் ரேஷியோவுடன் 6.7' இன்ச் AMOLED டிஸ்பிளேவை வழங்குகிறது.
இந்த டிஸ்ப்ளே பேனல் பஞ்ச் ஹோல் நாட்ச் கொண்ட கார்னிங் கொரில்லா கிளாஸ் 5 உடன் வருகிறது. இது MediaTek Dimensity 8100 Max சிப்செட் மூலம் இயக்கப்படுகிறது.

சக்தி வாய்ந்த தரமான சிப்செட் உடன் பெரிய ஸ்டோரேஜ்.!
இந்த Dimensity 8100 Max ஆனது 5nm செயல்பாட்டில் தயாரிக்கப்பட்டது மற்றும் Mali G610 GPU உடன் இணைக்கப்பட்டுள்ளது.
இது 12GB LPDDR5 ரேம் மற்றும் 256GB UFS 3.1 ஸ்டோரேஜ் உடன் வருகிறது.
இது ஆண்ட்ராய்டு 12 ஐ அடிப்படையாகக் கொண்ட நிறுவனத்தின் தனியுரிம ColorOS 12.1 உடன் வருகிறது. இது ட்ரிபிள் ரியர் கேமராவுடன் வருகிறது.

ஒப்போ ரெனோ 8 ப்ரோ ஹவுஸ் ஆப் டிராகன் ஸ்பெஷல் எடிஷன் கேமரா அம்சம்.!
இது 50MP Sony IMX766 பிரைமரி சென்சார் உடன் வருகிறது. இத்துடன் 8MP அல்ட்ரா-வைட்-ஆங்கிள் லென்ஸ் மற்றும் 2MP மேக்ரோ கேமராவுடன் வருகிறது.
இதன் முன்பக்கத்தில் 32MP Sony IMX709 சென்சார் சார்ந்துள்ளது. இந்த Reno 8 Pro ஸ்பெஷல் எடிஷன் ஆனது 4500mAh பேட்டரி உடன் 80W SuperVOOC ஃபாஸ்ட் சார்ஜிங் ஆதரவைக் கொண்டுள்ளது. இது USB 2.0 Type-C போர்ட்டை கொண்டுள்ளது.

ஒரு தனித்துவமான ஸ்மார்ட்போன் மாடலை வாங்க ஆசையா?
இது டூயல் சிம், 5ஜி, வைஃபை 802.11 ஆக்ஸ், என்எப்சி, புளூடூத் 5.3, ஜிபிஎஸ், பெய்டோ, க்ளோனாஸ் போன்றவற்றை ஆதரிக்கிறது.
பொதுவாகக் கிடைக்கும் ஸ்மார்ட்போன்களை போல் அல்லாமல், ஒரு தனித்துவமான ஸ்மார்ட்போன் மாடலை நீங்கள் வாங்க விரும்பினால், நீங்கள் Oppo Reno 8 Pro House of the Dragon Limited Edition மாடலை இன்று முதல் இந்தியாவில் வாங்கலாம்.

Oppo Reno 8 Pro House of the Dragon Limited Edition விலை என்ன? எங்கிருந்து வாங்கலாம்?
Oppo Reno 8 Pro House of the Dragon Limited Edition ஆனது 12GB + 256GB ஸ்டோரேஜ் உடன் வெறும் ரூ.45,999 விலையில் வருகிறது.
இந்த ஸ்மார்ட்போன் டிசம்பர் 13 மதியம் 12:00 மணி முதல் ஃபிளிப்கார்ட் வழியாகப் பிரத்தியேகமாக வாங்கக் கிடைக்கிறது.
ஹவுஸ் ஆப் தி டிராகன் சீரிஸை பார்த்த ரசிகர்களுக்கும் இந்த ஸ்மார்ட்போன் நிச்சயமாகப் பிடிக்கும்.
இந்த போனுடன் கிடைக்கும் தங்க முட்டையை ஷோகேஸ் பொருளாகப் பயன்படுத்தலாம்.
-
54,999
-
36,599
-
39,999
-
38,990
-
1,29,900
-
79,990
-
38,900
-
18,999
-
19,300
-
69,999
-
79,900
-
1,09,999
-
1,19,900
-
21,999
-
1,29,900
-
12,999
-
44,999
-
15,999
-
7,332
-
17,091
-
29,999
-
7,999
-
8,999
-
45,835
-
77,935
-
48,030
-
29,616
-
57,999
-
12,670
-
79,470