மிட்-ரேன்ஜ் விலையில் அறிமுகமான Oppo Reno 8: அம்சங்களை அள்ளிக் கொடுத்து வாயடைத்த Oppo!

|

Oppo Reno 8 ஸ்மார்ட்போனானது ஸ்னாப்டிராகன் 680 SoC, 64 எம்பி டிரிபிள் ரியர் கேமரா உடன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போனின் விலை மற்றும் சிறப்பம்சங்களை விரிவாக பார்க்கலாம்.

64 எம்பி பிரதான கேமரா

64 எம்பி பிரதான கேமரா

Oppo Reno 8 ஸ்மார்ட்போன் இரண்டு வண்ண விருப்பங்களில் வெளியாகி இருக்கிறது. இந்த புதிய ஒப்போ ரெனோ 4ஜி ஸ்மார்ட்போனானது 64 எம்பி பிரதான சென்சார் உடனான டிரிபிள் பின்புற கேமரா அமைப்பைக் கொண்டிருக்கிறது.

இந்த பிரதான கேமரா ஆனது AI (செயற்கை நுண்ணறிவு) ஆதரவை கொண்டிருக்கிறது. ஸ்மார்ட்போனில் ஏணைய குறிப்பிடத்தக்க அம்சங்கள் இருக்கிறது.

குவால்காம் ஸ்னாப்டிராகன் 680 SoC ஆதரவு

குவால்காம் ஸ்னாப்டிராகன் 680 SoC ஆதரவு

ஒப்போ ரெனோ 8 ஸ்மார்ட்போனின் டிஸ்ப்ளே ஆனது 90 ஹெர்ட்ஸ் ரெஃப்ரஷிங் ரேட்டிங்கை கொண்டிருக்கிறது. இந்த ஸ்மார்ட்போனானது குவால்காம் ஸ்னாப்டிராகன் 680 SoC மூலம் இயக்கப்படுகிறது.

இந்த ஸ்மார்ட்போனானது ஒற்றை வேரியண்ட்டில் அறிமுகமாகி உள்ளது. அது 8 ஜிபி ரேம் மற்றும் 256 ஜிபி இன்டெர்னல் ஸ்டோரேஜ் ஆகும். Oppo Reno 8 ஆனது 33W SuperVOOC சார்ஜிங் ஆதரவுடன் 4500mAh பேட்டரி பொருத்தப்பட்டுள்ளது.

மிட் ரேன்ஜ் விலைப்பிரிவில் கிடைக்கும் ஸ்மார்ட்போனின் இந்த அம்சங்கள் அனைத்தும் குறிப்பிடத்தக்க ஒன்றாகும்.

Oppo Reno 8 சிறப்பம்சங்கள்

Oppo Reno 8 சிறப்பம்சங்கள்

Oppo Reno 8 டூயல் சிம் (நானோ), ColorOS 12.1 அடிப்படையிலான ஆண்ட்ராய்டு 12 மூலம் இயங்குகிறது. இந்த ஸ்மார்ட்போனில் 6.43 இன்ச் முழு HD டிஸ்ப்ளே பொருத்தப்பட்டுள்ளது.

இந்த டிஸ்ப்ளே ஆனது 1,080x2,400 தீர்மானத்துடன் 90Hz புதுப்பிப்பு வீதம் மற்றும் 180Hz டச் மாதிரி வீதத்தைக் கொண்டுள்ளது. இது 4ஜி போன் என்பது கவனிக்கத்தக்க ஒன்று. இந்த ஸ்மார்ட்போனானது ஆக்டோ கோர் ஸ்னாப்டிராகன் 680 SoC மூலம் இயக்கப்படுகிறது.

64எம்பி பிரதான கேமரா, 32எம்பி செல்பி கேமரா

64எம்பி பிரதான கேமரா, 32எம்பி செல்பி கேமரா

Oppo Reno 8 ஸ்மார்ட்போனின் கேமரா அம்சங்களைப் பொறுத்தவரை, இந்த ஸ்மார்ட்போன் 64 எம்பி பிரதான கேமரா உட்பட டிரிபிள் ரியர் கேமரா அமைப்பு இருக்கிறது. அதோடு இந்த ஸ்மார்ட்போனில் 2 எம்பி மேக்ரோ கேமரா, 2 எம்பி மோனோ க்ரோம் சென்சார் இடம்பெற்றுள்ளது. இந்த ஸ்மார்ட்போனின் முன்பக்கத்தில் செல்பி ஆதரவுக்கு என 32 மெகாபிக்சல் IMX709 சென்சார் பொருத்தப்பட்டிருக்கிறது.

Oppo Reno 8 ஸ்மார்ட்போனின் இணைப்பு விருப்பங்கள்

Oppo Reno 8 ஸ்மார்ட்போனின் இணைப்பு விருப்பங்கள்

Oppo Reno 8 ஸ்மார்ட்போனின் இணைப்பு விருப்பங்கள் குறித்து பார்க்கையில், 4G LTE, Bluetooth v5, NFC, Wi-Fi, 3.5mm ஹெட்ஃபோன் ஜாக் மற்றும் USB Type-C போர்ட் ஆதரவுகள் இருக்கிறது. பாதுகாப்பு அம்சத்துக்கு என ஸ்மார்ட்போனில் இன்-டிஸ்ப்ளே கைரேகை சென்சார் இடம்பெற்றுள்ளது.

33W SuperVOOC சார்ஜிங் ஆதரவு

33W SuperVOOC சார்ஜிங் ஆதரவு

Oppo Reno 8 5G ஸ்மார்ட்போனை போன்றே Oppo Reno 8 4G ஸ்மார்ட்போனிலும் 4,500mAh பேட்டரி பொருத்தப்பட்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போனானது 33W SuperVOOC சார்ஜிங் ஆதரவு இருக்கிறது. ஐந்து நிமிடம் ஸ்மார்ட்போனை சார்ஜ் செய்தால் 2.68 மணிநேர குரல் அழைப்பு நேரத்தை வழங்கும் என கூறப்படுகிறது.

Oppo Reno 8 விலை மற்றும் கிடைக்கும் தன்மை

Oppo Reno 8 விலை மற்றும் கிடைக்கும் தன்மை

Oppo Reno 8 விலை மற்றும் கிடைக்கும் தன்மை குறித்து பார்க்கலாம். இந்த புதிய ஒப்போ ஸ்மார்ட்போனானது தற்போது இந்தோனேசியாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

Oppo Reno 8 ஸ்மார்ட்போன் ஒற்றை வேரியண்டில் அறிமுகமாகி இருக்கிறது. அது 8GB RAM + 256GB ஆகும். 8GB ரேம் மற்றும் 256GB இன்டெர்னல் ஸ்டோரேஜ் விலை IDR 49,99,000 ஆக நிர்ணயம் செய்யப்பட்டிருக்கிறது. இதன் இந்திய விலை மதிப்பு தோராயமாக ரூ.26,800 ஆக நிர்ணயம் செய்யப்பட்டிருக்கிறது.

உலகளாவிய கிடைக்கும் தன்மை

உலகளாவிய கிடைக்கும் தன்மை

இந்த ஸ்மார்ட்போனானது ஆகஸ்ட் 25 முதல் விற்பனைக்கு வரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போன் இரண்டு வண்ண விருப்பங்களில் வெளியாகி இருக்கிறது. அது Dawnlight Gold மற்றும் Starlight Black ஆகும்.

புதிய ஒப்போ ரெனோ 8 ஸ்மார்ட்போனின் உலகளாவிய கிடைக்கும் தன்மை குறித்த விவரங்களை நிறுவனும் தற்போதுவரை வெளியிடவில்லை.

Best Mobiles in India

English summary
Oppo Reno 8 launched at Mid-Range Price with 64MP Triple Rear Camera, 33W SuperVOOC Charge

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X