ரூ.29,999 மதிப்புள்ள Oppo Reno 8 5G போனுக்கு ரூ.21,000 தள்ளுபடி! வாய்ப்பு திரும்ப கிடைக்காது..

|

இந்த ஆண்டு ஜூலை மாதம் இந்தியாவில் ஒப்போ நிறுவனம் ரெனோ 8 சீரிஸை வெளியிட்டது. ஒப்போ ரெனோ 8 சீரிஸ் இல் ஒப்போ ரெனோ 8 5ஜி மற்றும் ரெனோ 8 ப்ரோ 5ஜி ஆகிய இரண்டு ஸ்மார்ட்போன்கள் இடம்பெற்றன. இந்த ஸ்மார்ட்போன் பிளிப்கார்ட் மற்றும் அமேசான் போன்ற ஆன்லைன் ரீடெய்ல் தளங்களில் தற்போது சிறந்த தள்ளுபடியுடன் விற்பனைக்கு கிடைக்கிறது.

அதீத தள்ளுபடி விலையில் ஒப்போ ரெனோ 8 ஸ்மார்ட்போன்

அதீத தள்ளுபடி விலையில் ஒப்போ ரெனோ 8 ஸ்மார்ட்போன்

இந்த ஸ்மார்ட்போன் வாடிக்கையாளர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. ரூ.30,000 என்ற மிட் ரேன்ஜ் விலைப் பிரிவில் ஸ்மார்ட்போனை வாங்கத் திட்டமிட்டவர்களுக்கு இந்த ஸ்மார்ட்போன் சிறந்த தேர்வாக இருக்கிறது. இந்த நிலையில் ஓப்போ ரெனோ 8 ஸ்மார்ட்போன் அதீத தள்ளுபடி விலையில் கிடைக்கிறது.

Oppo Reno 8 5G தள்ளுபடி விலை

Oppo Reno 8 5G தள்ளுபடி விலை

ஒப்போ ரெனோ 8 5ஜி ஸ்மார்ட்போனானது அமேசானில் அதீத தள்ளுபடி விலையில் கிடைக்கிறது. இந்த ஸ்மார்ட்போனானது அமேசானில் ரூ.28,180 என கிடைக்கிறது. அதோடு வங்கி தள்ளுபடிகள், எக்ஸ் சேஞ்ச் தள்ளுபடிகள் என பல கூடுதல் சலுகைகளும் வழங்கப்படுகிறது.

குறிப்பிட்ட வங்கி கார்ட்கள் பயன்படுத்தும் பட்சத்தில் ரூ.1000 கூடுதல் தள்ளுபடியும், ஃபெடரல் பேங்க் மற்றும் ஆர்பிஎல் பேங்க் கிரெடிட் கார்ட் பயன்படுத்தினால் ரூ.750 கூடுதல் தள்ளுபடியும் வழங்கப்படுகிறது. நோ காஸ்ட் இஎம்ஐ விருப்பமும் இந்த ஸ்மார்ட்போனுக்கு கிடைக்கிறது.

ரூ.14,050 வரை எக்ஸ்சேஞ்ச் சலுகை

ரூ.14,050 வரை எக்ஸ்சேஞ்ச் சலுகை

அதீத தள்ளுபடி எங்கே என்ற கேள்வி வருகிறதா? ஒப்போ ரெனோ 8 ஸ்மார்ட்போனுக்கு ரூ.14,050 வரை எக்ஸ்சேஞ்ச் சலுகை வழங்கப்படுகிறது. ஆறு மாதங்கள் வரை நோ காஸ்ட் இஎம்ஐ கட்டண விருப்பமும் வழங்கப்படுகிறது.

Oppo Reno 8 5G பிளிப்கார்ட் தள்ளுபடி

Oppo Reno 8 5G பிளிப்கார்ட் தள்ளுபடி

Oppo Reno 8 5G ஸ்மார்ட்போனானது பிளிப்கார்ட் இல் சிறந்த தள்ளுபடியுடன் கிடைக்கிறது. இந்த ஸ்மார்ட்போனானது ரூ.29,999 என பட்டியலிடப்பட்டிருக்கிறது. அக்டோபர் 31க்குள் இந்த ஸ்மார்ட்போனை குறிப்பிட்ட வங்கி கிரெடிட் மற்றும் டெபிட் கார்ட் மூலம் வாங்கினால் ரூ.2500 தள்ளுபடி வழங்கப்படுகிறது.

இதோடு சிட்டி பேங்க் டெபிட் மற்றும் கிரெடிட் கார்ட் பயனர்கள் இஎம்ஐ அல்லாத பரிவர்த்தனைகளின் மூலம் இந்த ஸ்மார்ட்போனை வாங்கினால் ரூ.1500 முதல் ரூ.2000 வரை தள்ளுபடி வழங்கப்படுகிறது.

ரூ.21,000 வரை தள்ளுபடி

ரூ.21,000 வரை தள்ளுபடி

பிளிப்கார்ட்டில் ஆக்சிஸ் பேங்க் கார்ட் மூலம் ஸ்மார்ட்போனை வாங்கினால் 5% வரை தள்ளுபடி வழங்கப்படுகிறது. சிறந்த எக்ஸ்சேஞ்ச் சலுகையும் கிடைக்கிறது. பழைய ஸ்மார்ட்போனை மாற்றி புது போன் வாங்கினால் ரூ.21,000 வரை தள்ளுபடி வழங்கப்படுகிறது. மாற்றப்படும் பழைய போனின் தரத்திற்கு ஏற்ப இந்த விலையில் மாற்றம் இருக்கும் என்பதை நினைவில் கொள்ள வேண்டும். நோ காஸ்ட் இஎம்ஐ விருப்பத்திலும் இந்த ஸ்மார்ட்போனை வாங்கலாம்.

ஒப்போ ரெனோ 8 மற்றும் ரெனோ 8 ப்ரோ

ஒப்போ ரெனோ 8 மற்றும் ரெனோ 8 ப்ரோ

Oppo Reno 8, Reno 8 Pro ஸ்மார்ட்போனானது 50 எம்பி கேமரா, 80W ஃபாஸ்ட் சார்ஜிங் உடன் இந்தியாவில் வெளியானது. ஒப்போ ரெனோ 8 மற்றும் ரெனோ 8 ப்ரோ ஆகிய ஸ்மார்ட்போன்கள் இரண்டு வண்ண விருப்பங்களில் கிடைக்கிறது.

50 எம்பி முதன்மை கேமரா

50 எம்பி முதன்மை கேமரா

Oppo Reno 8 மற்றும் Oppo Reno 8 Pro ப்ரோ ஆகிய ஸ்மார்ட்போன்கள் முழு HD+ டிஸ்ப்ளேக்கள், 50 எம்பி முதன்மை கேமரா மற்றும் மீடியாடெக் டைமன்சிட்டி SoC உடன் வெளியாகி இருக்கிறது. Oppo Reno 8 Pro ஆனது இந்தாண்டு தொடக்கத்தில் சீனாவில் அறிமுகப்படுத்தப்பட்ட Oppo Reno Pro+ ஸ்மார்ட்போனின் மறுபெயரிடப்பட்ட பதிப்பாகும்.

Oppo Reno 8 சிறப்பம்சங்கள்

Oppo Reno 8 சிறப்பம்சங்கள்

Oppo Reno 8 சிறப்பம்சங்கள் குறித்து பார்க்கையில், இந்த ஸ்மார்ட்போன் டூயல் சிம் (நானோ) உடனான ColorOS 12.1 அடிப்படையிலான Android 12 மூலம் இயங்குகிறது. அதோடு 6.43 இன்ச் முழு HD+ AMOLED டிஸ்ப்ளே 90Hz புதுப்பிப்பு வீதம் கார்னிங் கொரில்லா கிளாஸ் 5 பாதுகாப்பு, 800 நிட்ஸ் உச்ச பிரகாசம், ஆக்டோ கோர் மீடியாடெக் டைமன்சிட்டி 1300 SoC சிப்செட் டிரிபிள் ரியர் கேமரா அமைப்பு உள்ளிட்ட மேம்பட்ட ஆதரவுகள் இதில் இருக்கிறது.

80 வாட்ஸ் சூப்பர் ஃப்ளாஷ் சார்ஜிங்

50 எம்பி முதன்மை கேமரா, ஃபீல்ட்-ஆஃப்-வியூ 2 எம்பி மேக்ரோ கேமரா, 8 எம்பி மேக்ரோ லென்ஸ் கேமரா மற்றும் முன்புறத்தில் 32 எம்பி செல்பி கேமரா பொருத்தப்பட்டுள்ளது. இதில் 4500 எம்ஏஎச் பேட்டரி மற்றும் 80 வாட்ஸ் சூப்பர் ஃப்ளாஷ் சார்ஜிங் ஆதரவு இருக்கிறது.

Best Mobiles in India

English summary
Oppo Reno 8 5G Now Available at Huge Discount in Amazon and Flipkart

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X