Home
Mobile

அட்டகாசமான ஒப்போ ரெனோ 7 Z 5ஜி ஸ்மார்ட்போன் அறிமுகம்.! என்னென்ன அம்சங்கள்.!

ஒப்போ நிறுவனம் தாய்லாந்தில் புதிய ஒப்போ ரெனோ 7 Z 5ஜி ஸ்மார்ட்போன் மாடலை அறிமுகம் செய்துள்ளது. இந்த புதிய ஸ்மார்ட்போன அசத்தலான வடிவமைப்புடன் வெளிவந்துள்ளது. ஆனால் இந்த சாதனத்தின் விலை மற்றும் கிடைக்கும் தன்மை குறித்து ஒப்போ நிறுவனம் தகவல்
தெரிவிக்கவில்லை. இப்போது ஒப்போ ரெனோ7 Z 5ஜி ஸ்மார்ட்போனின் அம்சங்களை சற்று விரிவாகப் பார்ப்போம்.

ஒப்போ ரெனோ 7 Z 5ஜி

ஒப்போ ரெனோ 7 Z 5ஜி ஸ்மார்ட்போன் மாடல் 6.43-இன்ச் ஃபுல் எச்டி பிளஸ் AMOLED டிஸ்ப்ளே வசதியுடன் வெளிவந்துள்ளது. பின்பு 60 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட், 600 நிட்ஸ் ப்ரைட்னஸ், 180 ஹெர்ட்ஸ் டச் சாம்ப்ளிங் ரேட் மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதியுடன் இந்த ஸ்மார்ட்போன்
வெளிவந்துள்ளதால் பயன்படுத்துவதற்கு மிகவும் அருமையாக இருக்கும்.

ஒப்போ ரெனோ7 Z 5ஜி

இந்த புதிய ஒப்போ ரெனோ7 Z 5ஜி ஸ்மார்ட்போனில் குவால்காம் ஸ்னாப்டிராகன் 695 5ஜி சிப்செட் உடன் அட்ரினோ 619 ஜிபியு ஆதரவும் உள்ளது. எனவே இந்த ஸ்மார்போன் இயக்கத்திற்கு மிகவும் அருமையாக இருக்கும். மேலும் ColorOS 12 சார்ந்த ஆண்ட்ராய்டு 12 இயங்குதளத்தை
அடிப்படையாக கொண்டு இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன் மாடல் வெளிவந்துள்ளது. அதேபோல் இந்த ஸ்மார்ட்போனின் வடிவமைப்புக்கு அதிக கவனம் செலுத்தியுள்ளது இந்நிறுவனம்.

ஒப்போ ரெனோ 7 Z 5ஜி ஸ்மார்ட்போனின்

ஒப்போ ரெனோ 7 Z 5ஜி ஸ்மார்ட்போனின் பின்புறம் 64எம்பி பிரைமரி சென்சார் + 2எம்பி மோனோகுரோம் சென்சார் + 2எம்பி டெப்த் சென்சார் என மொத்தம் மூன்று கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. பின்பு செல்பீகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 16எம்பி கேமராவைக் கொண்டுள்ளது இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன் மாடல். இதுதவிர எல்இடி பிளாஷ் மற்றும் பல்வேறு கேமரா அம்சங்களை கொண்டுள்ளது இந்த புதிய ஸ்மார்ட்போன்
மாடல்.

ப்போ ரெனோ 7 Z 5ஜி ஸ்

இந்த ஒப்போ ரெனோ 7 Z 5ஜி ஸ்மார்ட்போனில் 8ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி உள்ளடக்க மெமரி வசதி உள்ளது. மேலும் கூடுதலாக மெமரி
நீட்டிப்பு ஆதரவு கொண்டுள்ளது இந்த அசத்தலான ஸ்மார்ட்போன் மாடல். அதாவது நீங்கள் மெமரி கார்டை பயன்படுத்த ஒரு ஸ்லாட் கொடுக்கப்பட்டுள்ளது.

ஒப்போ ரெனோ 7 Z 5ஜி

ஒப்போ ரெனோ 7 Z 5ஜி ஸ்மார்ட்போனில் 4500 எம்ஏஎச் பேட்டரி பொருத்தப்பட்டுள்ளது. எனவே நீண்ட நேரம் கேம் விளையாட முடியும். பின்பு 33 வாட் பாஸ்ட் சார்ஜிங் வசதி, கைரேகை ஸ்கேனர் உள்ளிட்ட பல்வேறு சிறப்பான அம்சங்களை கொண்டுள்ளது இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன் மாடல்.

4ஜி எல்டிஇ, டூயல் பேண்ட் வைஃபை 5, புளூடூத்

5ஜி, 4ஜி எல்டிஇ, டூயல் பேண்ட் வைஃபை 5, புளூடூத் வி5.2, யுஎஸ்பி டைப்-சி போர்ட், என்எப்சி, யுஎஸ்பி-ஒடிஜி,3.5எம்எம் ஆடியோ ஜாக் உள்ளிட்ட பல்வேறு இணைப்பு ஆதரவுகளை கொண்டுள்ளது இந்த புதிய ஸ்மார்ட்போன் மாடல்.

மேலும் தொழில்நுட்பம், விண்வெளி மற்றும் அறிவியல் தொடர்பான இன்னும் கூடுதல் சுவாரசியமான செய்திகள் பற்றி அறிந்துகொள்ள எங்கள் கிஸ்பாட் சேனல் உடன் இணைந்திருங்கள். உங்களின் கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்துகொள்ளுங்கள்.

Best Mobiles in India

English summary
Oppo Reno 7Z 5G With Snapdragon 695 SoC Launched: Specs, Features and More: Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X