ஸ்டைலானா ஒரு ஸ்மார்ட்போன் வேண்டுமா? அப்போ இந்த ஒப்போ ரொனோ 7ஏ பாருங்க.!
சியோமி, விவோ நிறுவனங்களுக்கு போட்டியாக தொடர்ந்து புதிய ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்து வருகிறது ஒப்போ நிறுவனம். அந்த வரிசையில் புதிய ஒப்போ ரெனோ 7ஏ எனும் ஸ்மார்ட்போனை ஜப்பானில் அறிமுகம் செய்துள்ளது ஒப்போ நிறுவனம்.

ஒப்போ ரெனோ 7ஏ
இந்த புதிய ஸ்மார்ட்போன் விரைவில் அனைத்து நாடுகளிலும் அறிமுகம் செய்யப்பட்டு விற்பனைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதேபோல் ஸ்டைலானா வடிவமைப்பு, மூன்று பின்புற கேமராக்கள், ஸ்னாப்டிராகன் சிப்செட், தரமான டிஸ்பிளே உள்ளிட்ட பல சிறப்பு அம்சங்களுடன் இந்தபுதிய சாதனம் வெளிவந்துள்ளது. இப்போது ஒப்போ ரெனோ 7ஏ ஸ்மார்ட்போனின் அம்சங்களை விரிவாகப் பார்போம்.

ஒப்போ ரெனோ 7ஏ ஸ்மார்ட்போன் ஆனது 6.43-இன்ச் ஃபுல் எச்டி பிளஸ் AMOLED டிஸ்பிளே வசதியைக் கொண்டுள்ளது. பின்பு 1080×2400 பிக்சல் தீர்மானம், 90 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட், 180 ஹெர்ட்ஸ் டச் சாம்ப்ளிங் ரேட், 20:9 என்ற திரைவிகிதம் மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதியுடன்வெளிவந்துள்ளது இந்த புதிய சாதனம்.
சுருக்கமாக கூறவேண்டும் என்றால் இந்த சாதனத்தின் டிஸ்பிளேவுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளது. அதேபோல் இதன் சிப்செட் வசதியுடம் மிக அருமையாக உள்ளது.

நீங்கள் எதிர்பார்த்த சிப்செட்
அதாவது குவால்காம் ஸ்னாப்டிராகன் 695 சிப்செட் வசதியுடன் அட்ரினோ 619 ஜிபியு ஆதரவைக் கொண்டுள்ளது இந்த ஒப்போ ரெனோ 7ஏ ஸ்மார்ட்போன். அதாவது மீடியாடெக் ஹீலியோ சிப்செட் விட சிறந்த செயல்திறன் கொண்டது ஸ்னாப்டிராகன் 695 சிப்செட். எனவே இந்த புதிய ஒப்போ ரெனோ 7ஏ ஸ்மார்ட்போனை நம்பி வாங்கலாம்.

அருமையான இயங்குளம்
குறிப்பாக ColorOS 12 சார்ந்த ஆண்டராய்டு 12 இயங்குதள வசதியுடன் வெளிவந்துள்ளது இந்த புத்தம் புதிய ஸ்மார்ட்போன். மேலும் 6ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி உள்ளடக்க மெமரி வசதியைக் கொண்டுள்ளது இந்த புதிய ஸ்மார்ட்போன்.
குறிப்பாக கேமிங் ஸ்மார்ட்போன் வேண்டும் என்று
நினைக்கும் பயனர்கள் இந்த சாதனத்தை தேர்வு செய்வது நல்லது அதாவது சிறந்த டிஸ்பிளே மற்றும் தரமான சிப்செட் கொண்டு வெளிவந்துள்ளதுஇந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன்.

கேமரா-ஒரளவு பரவயில்லை
இப்போது வரும் ஸ்மார்ட்போன்களில் 64எம்பி கேமரா, 108எம்பி கேமரா எனப் பல சிறப்பான கேமரா வசதிகள் இடம்பெறுகின்றன. ஆனால் இந்த சாதனத்தின்பின்புறம் 48எம்பி மெயின் கேமரா (f/1.7 lens), 8எம்பி அல்ட்ரா வைடு லென்ஸ், 2எம்பி மேக்ரோ கேமரா என மொத்தம் மூன்று கேமராக்கள உள்ளன.
சுருக்கமாக கூறவேண்டும் என்றால் இதன் கேமராக்கள் ஒரளவு பரவயில்லை என்றுதான் கூறவேண்டும். குறிப்பாக ஒரு 12எம்பி அல்ட்ரா வைடு கேமராவுடன் இந்த சாதனம் வெளிவந்திருந்தால் இன்னும் அருமையாக இருந்திருக்கும்.

16எம்பி செல்பீ கேமரா
மேலும் செல்பீகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 16எம்பி கேமராவைக் கொண்டுள்ளது இந்த புதிய ஒப்போ ரெனோ 7ஏ ஸ்மார்ட்போன். அதேபோல் ஸ்டார்ரி பிளாக் மற்றும் ட்ரீம் ப்ளூ நிறங்களில் இந்த புதிய ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இன்-டிஸ்பிளே கைரேகை சென்சார்
ஒப்போ ரெனோ 7ஏ ஸ்மார்ட்போனில் 4500 எம்ஏஎச் பேட்டரி பொருத்தப்பட்டுள்ளது. எனவே நீண்ட நேரம் பேட்டரி பேக்கப் கிடைக்கும். மேலும் 18 வாட் பாஸ்ட் சார்ஜிங் ஆதரவு, இன்-டிஸ்பிளே கைரேகை சென்சார் எனப் பல சிறப்பு அம்சங்களுடன் இந்த புதிய ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளது.

அடேங்கப்பா என சொல்ல வைக்கும் விலை
5ஜி, 4ஜி எல்டிஇ, வைஃபை 802.11ஏசி, புளூடூத் வி5.1, ஜிபிஎஸ்/ஏ-ஜிபிஎஸ், யுஎஸ்பி டைப்-சி போர்ட், 3.5MM ஹெட்ஃபோன் ஜாக் உள்ளிட்ட பல்வேறு இணைப்பு ஆதரவுகளை கொண்டள்ளது இந்த புதிய சாதனம். மேலும் இந்த ஸ்மார்ட்போனின் விலை JPY 44,800 (இந்திய மதிப்பில் ரூ.26,000) ஆக உள்ளது.


Click it and Unblock the Notifications