Just In
- 39 min ago
விதிகளுக்கு இணங்கு அல்லது இந்தியாவை விட்டு வெளியேறு: VPN சேவை வழங்குனருக்கு அரசு கெடுபிடி!
- 1 hr ago
அட்டகாசமான அம்சங்களுடன் இன்பினிக்ஸ் நோட் 12, நோட் 12 டர்போ இந்தியாவில் அறிமுகம்! விலை மற்றும் விபரங்கள்.!
- 2 hrs ago
முதல் 5ஜி வீடியோ கால்: சென்னை ஐஐடியில் வெற்றிகரமாக பரிசோதித்துப் பார்த்தார் அமைச்சர் அஷ்வினி வைனவ்! வீடியோ.!
- 3 hrs ago
மர்மமா இருக்கு என்னனு தெரியல?- பிரபஞ்சத்தின் விசித்திரமான ஒன்றை கண்டுபிடித்த நாசா!
Don't Miss
- Sports
சிஎஸ்கேவின் அடுத்த கேப்டன் ருத்துராஜ்.. வீடியோ வெளியிட்ட சிஎஸ்கே.. அடித்து கூறும் விசயங்கள்
- Automobiles
அனைவரும் எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் புதிய ஸ்கார்பியோ காரின் அறிமுகம் எப்போது?.. அதிகாரப்பூர்வ தேதி அறிவிப்
- Finance
பணவீக்கத்தினால் ஐடி பங்குகள் தடம் புரளுமா.. நிபுணர்களின் கணிப்பு என்ன?
- News
பெகாசஸ் உளவு வழக்கில் 29 செல்போன்கள் ஆய்வு! விசாரணை அறிக்கைக்கு காலஅவகாசம்! உச்சநீதிமன்றம் உத்தரவு
- Movies
வொர்க் அவுட்டை நிறுத்த மாட்டேன்... ஷூ கழண்டாலும் வொர்க் அவுட்டை நிறுத்தாத ஐஸ்வர்யா ரஜினி!
- Lifestyle
திருமணமான ஆண்கள் தினமும் 'இத' ஒரு கையளவு சாப்பிடுவது ரொம்ப நல்லதாம்... இது ஆண்களின் பல பிரச்சனையை போக்குமாம்..
- Education
ரூ.2.60 லட்சம் ஊதியத்தில் சென்னை துறைமுகத்தில் பணியாற்ற ஆசையா?
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
விரைவில் இந்தியாவில்- ஆனா ஒப்போ ரெனோ 7, ரெனோ 7 ப்ரோ மட்டும்தான் அது இல்ல- தரமான அம்சம், உச்சநிலை கேமரா!
ஒப்போ ரெனோ 7, ரெனோ 7 ப்ரோ ஸ்மார்ட்போன் குறித்த முக்கிய விவரங்கள் வெளியாகி இருக்கின்றன. மேலும் ரெனோ 7 எஸ்இ மாடல் நாட்டில் வருவதற்கு வாய்ப்பு இல்லை எனவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

ரெனோ 7, ரெனோ 7 ப்ரோ
ஒப்போ ஸ்மார்ட்போனானது ரெனோ 7, ரெனோ 7 ப்ரோ மற்றும் ரெனோ 7 எஸ்இ ஆகிய சாதனங்களை மிகவும் எதிர்பார்க்கப்பட்ட ரெனோ 7 தொடரின் கீவ் கடந்த வாரம் சீனாவில் அறிமுகம் செய்தது. தற்போது இந்த ஸ்மார்ட்போன் இந்திய வெளியீட்டிற்கு ஒப்போ தயாராகி வருவதாக கூறப்படுகிறது. ஒப்போ நாட்டில் ரெனோ 7 எஸ்இ சாதனத்தை அறிமுகப்படுத்தாது என்றதகவல் முன்னதாக வெளியான செய்தியாகும். தற்போது வெளியான தகவல் இதை மீண்டும் உறுதிப்படுத்தும் வகையில் இருக்கிறது. ஒப்போ ரெனோ 7 மற்றும் ரெனோ 7 ப்ரோ ஆகிய இரண்டு சாதனத்தின் விலையையும் நிறுவனம் வெளிப்படுத்தி இருக்கிறது.

இரண்டு சாதனத்தின் விலை விவரங்கள்
வெளியான புதிய அறிக்கையில் ஒப்போ ரெனோ 7 மற்றும் ரெனோ 7 ப்ரோ ஆகிய இரண்டு சாதனத்தின் விலை விவரங்களையும் தெரிவித்துள்ளது. அதில் ஒப்போ ரெனோ 7 ஸ்மார்ட்போன் ஆனது ரூ.28000 என்ற விலைப்பிரிவு முதல் ரூ.31,000 என்ற விலைப் பிரிவில் வரலாம் என கூறப்படுகிறது. அதேபோல் ப்ரோ மாடல் விலை குறித்து பார்க்கையில் இது ரூ.41,000 என்ற விலை முதல் ரூ.43,000 என அறிமுகம் செய்யப்படலாம் எனவும் கூறப்படுகிறது. அதேபோல் இந்திய சந்தையில் வெளியாகும் சரியான வெளியீட்டு தேதி தற்போது வரை தெரியவில்லை. இருப்பினும் வெளியாகும் தகவல் உண்மையாகும் பட்சத்தில் இந்த சாதனம் ஜனவரியில் இந்தியாவில் அறிமுகப்படுத்தப்படலாம் என கூறப்படுகிறது.

அடுத்த ஜென் ரெனோ 7 தொடர் ஸ்மார்ட்போன்
ஒப்போ ரெனோ 7 மற்றும் ரெனோ 7 ப்ரோ ஸ்மார்ட்போன் ஆகிய இரண்டு மாடல்களும் சீன மாடல்களை போன்றே அம்சங்களுடன் இந்தியாவில் அறிமுகம் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. அடுத்த ஜென் ரெனோ 7 தொடர் ஸ்மார்ட்போன் மறுவடிவமைப்பு செய்யப்பட்ட கேமரா தொகுதி மற்றும் முதன்மை தர அம்சங்களை வெளிப்படுத்துகிறது. ஒப்போ ரெனோ 7 ஸ்மார்ட்போனானது 6.43 இன்ச் முழு எச்டி ப்ளஸ் (1080 x 2400 பிக்சல்கள்) AMOLED டிஸ்ப்ளே உடன் வரும் என கூறப்படுகிறது. இந்த ஸ்மார்ட்போன் 90 ஹெர்ட்ஸ் புதுப்பிப்பு வீதத்துடன் வரும் எனவும் இது குவால்காம் ஸ்னாப்டிராகன் 778ஜி எஸ்ஓசி உடன் வரும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது. இந்த ஸ்மார்ட்போன் 12 ஜிபி ரேம் மற்றும் 256 ஜிபி உள்சேமிப்பு வசதியுடன் இணைக்கப்பட்டுள்ளது.

கலர் ஓஎஸ் 12 உடன் ஆண்ட்ராய்டு 11 இயங்குதள ஆதரவு
இந்த ஸ்மார்ட்போன் கலர் ஓஎஸ் 12 உடன் ஆண்ட்ராய்டு 11 இயங்குதள ஆதரவையும் கொண்டுள்ளது. ஸ்மார்ட்போன் மூன்று பின்புற கேமரா அமைப்பைக் கொண்டிருக்கிறது. இந்த ஸ்மார்ட்போனில் 64 மெகாபிக்சல் முதன்மை கேமரா, 8 மெகாபிக்சல் வைட் ஆங்கிள் லென்ஸ் மற்றும் 2 மெகாபிக்சல் மேக்ரோ ஷூ்ட்டர் கேமராவை கொண்டிருக்கிறது. இந்த ஸ்மார்ட்போனின் முன்புறத்தில் 32 மெகாபிக்சல் சோனி ஐஎம்எக்ஸ்709 செல்பி கேமரா அம்சத்தை கொண்டிருக்கிறது. இது 60 வாட்ஸ் ஃப்ளாஷ் சார்ஜ் மற்றும் ஃபாஸ்ட் சார்ஜிங் ஆதரவை கொண்டிருக்கிறது. இந்த ஸ்மார்ட்போனானது 4500 எம்ஏஎச் பேட்டரி மூலம் இயக்கப்படுகிறது.

பெரிய டிஸ்ப்ளே வடிவமைப்பு
ரெனோ 7 ப்ரோ ஸ்மார்ட்போனானது பெரிய டிஸ்ப்ளே வடிவமைப்பைக் கொண்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போன் 6.55 இன்ச் முழு எச்டி ப்ளஸ் 1080 x 2400 பிக்சல்கள்) AMOLED டிஸ்ப்ளே அம்சத்தை கொண்டுள்ளது. இது மீடியாடக் டைமன்சிட்டி 1200-மேக்ஸ் எஸ்ஓசி வசதியோடு வருகிறது. மேலும் இந்த ஸ்மார்ட்போன் 12 ஜிபி ரேம் மற்றும் 256 ஜிபி உள்சேமிப்பு வசதியோடு வருகிறது. ப்ரோ மாடல் சாதனமும் டிரிபிள் ரியர் கேமரா அமைப்புடன் வருகிறது. இந்த ஸ்மார்ட்போன் 50 மெகாபிக்சல் பிரதான கேமரா உடன் வருகிறது. அதேபோல் முன்புறத்தில் 32 மெகாபிக்சல் செல்பி கேமரா அம்சத்தையும் 65 வாட்ஸ் வேகமான சார்ஜிங் வசதி மற்றும் 4000 எம்ஏஎச் பேட்டரி உடன் வருகிறது. பாதுகாப்பு அம்சத்துக்கு என 4500 எம்ஏஎச் டூயல் செல் பேட்டரி அம்சத்தை கொண்டிருக்கிறது. பாதுகாப்பு அம்சத்துக்கு என இன் டிஸ்ப்ளே கைரேகை ஸ்கேனர் வசதி இருக்கிறது.

புதிய ஜோடி இயர்பட்ஸ்கள் மற்றும் ஒப்போ வாட்ச் ஃப்ரீ
ரெனோ 7 தொடர் ஸ்மார்ட்போன்களை தவிர ஒப்போ ஒரு புதிய ஜோடி இயர்பட்ஸ்கள் மற்றும் ஒப்போ வாட்ச் ஃப்ரீ ஆகியவற்றையும் நாட்டில் கொண்டுவர நிறுவனம் திட்டமிட்டிருக்கிறது. இயர்பட்ஸ்களின் பெயர் மற்றும் விவரங்கள் முழுமையாக தெரியவில்லை, இருப்பினும் என்கோ ஃப்ரீ2ஐ ஆக இதன் பெயர் இருக்கும் எனவும் கூறப்படுகிறது.

ரெனோ 6 தொடரின் வாரிசாக இருக்கலாம்
ஒப்போ இந்த ஆண்டு இந்தியாவில் ரெனோ 6 தொடரை அறிமுகம் செய்தது. தற்போது நிறுவனம் அதன் வாரிசு தொடரை நாட்டில் அறிமுகம் செய்யும் பணியில் நிறுவனம் ஈடுபட்டு வருகிறது. ரெனோ 7 சீரிஸ் என குறிப்பிடப்படுகிறது. இந்த தொடரில் ரெனோ 7, ரெனோ 7 ப்ரோ மற்றும் ரெனோ 7 ப்ரோ ப்ளஸ் உள்ளிட்ட ஸ்மார்ட்போன்கள் அடங்கும் என கூறப்பட்டது. ஒப்போ ரெனோ 7 ப்ரோ வடிவமைப்பு ஆன்லைனில் கசிந்தது. ரெனோ 7 ப்ரோ ஸ்மார்ட்போனை சுற்றி மெல்லிய உளிச்சாயுமோரம் கொண்ட பிளாட் டிஸ்ப்ளேவை கொண்டிருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆக்டா-கோர் குவால்காம் ஸ்னாப்டிராகன் 888 சிப்செட் மற்றும் 65W பாஸ்ட் சார்ஜிங் ஆதரவுடன் 4500 எம்ஏஎச் பேட்டரி ஆகியவை அடங்கும். 50MP முதன்மை சென்சார், 64MP செகண்டரி சென்சார் மற்றும் மூன்றாம் நிலை டெலிஃபோட்டோ லென்ஸ் கொண்ட டிரிபிள்-கேமரா மாட்யூல் ஆகியவை அடங்கும்.
-
54,535
-
1,19,900
-
54,999
-
86,999
-
49,975
-
49,990
-
20,999
-
1,04,999
-
44,999
-
64,999
-
20,699
-
49,999
-
11,499
-
54,999
-
7,999
-
8,980
-
17,091
-
10,999
-
34,999
-
39,600
-
25,750
-
33,590
-
27,760
-
44,425
-
13,780
-
1,25,000
-
45,990
-
1,35,000
-
82,999
-
17,999