Home
Mobile

Oppo ரெனொ 7 ப்ரோ ஸ்மார்ட்போனுக்கு அதிரடி விலைகுறைப்பு.!

ஒப்போ நிறுவனம் திடீரென ஒப்போ ரெனோ 7 ப்ரோ ஸ்மார்ட்போனுக்கு விலைகுறைப்பு அறிவித்துள்ளது. குறிப்பாக இந்த ஒப்போ ரெனோ 7 ப்ரோ தரமான அம்சங்களுடன் தான் இந்தியாவில் அறிமுகமானது.

ஒப்போ ரெனோ 7 ப்ரோ விலைகுறைப்பு

ஒப்போ ரெனோ 7 ப்ரோ விலைகுறைப்பு

அதாவது ஒப்போ ரெனோ 7 ப்ரோ ஸ்மார்ட்போனின் முந்தைய விலை ரூ.39,999-ஆக இருந்தது. தற்போது இந்த ஸ்மார்ட்போனுக்கு விலைகுறைக்கப்பட்டுரூ.36,999-விலையில் விற்பனை செய்யப்படுகிறது. மேலும் இந்த ஒப்போ ரெனோ 7 ப்ரோ மாடலை Croma, பிளிப்கார்ட், ஒப்போ ஆன்லைன் ஸ்டோர்களில் வாங்கமுடியும்.

சூப்பரான டிஸ்பிளே

சூப்பரான டிஸ்பிளே

ஒப்போ ரெனோ 7 ப்ரோ ஸ்மார்ட்போன் 6.5-இன்ச் முழு எச்டி ப்ளஸ் சூப்பர் AMOLED டிஸ்பிளே உடன் வருகிறது. குறிப்பாக 1,080x2,400 பிக்சல்ஸ், 90ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட், 180 ஹெர்ட்ஸ் டச் சாம்ப்ளிங் ரேட் மற்றும் கார்னிங் கொரில்லா கிளாஸ் 5 பாதுகாப்பு வசதியுடன் வெளிவந்துள்ளது
இந்த அட்டகாசமான ஒப்போ ஸ்மார்ட்போன்.

  தரமான பிராசஸர்

தரமான பிராசஸர்

புதிய ஒப்போ ரெனோ 7 ப்ரோ ஸ்மார்ட்போனில் மீடியாடெக் Dimensity 1200-Max ஆக்டோ-கோர் பிராசஸர் வசதி உள்ளது. எனவே இந்த ஸ்மார்ட்போன் இயக்கத்திற்கு மிகவும் அருமையாக இருக்கும். அதேபோல் இந்த ஸ்மார்ட்போனின் வடிவமைப்புக்கு அதிக கவனம் செலுத்தியுள்ளதுஒப்போ நிறுவனம்.

கலர் ஓஎஸ் 12

கலர் ஓஎஸ் 12

இந்த ஒப்போ ரெனோ 7 ப்ரோ ஸ்மார்ட்போன் ஆனது கலர் ஓஎஸ் 12 மூலம் இயக்கப்படுகிறது. பின்பு 12ஜிபி ரேம் மற்றும் 256ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜ் ஆதரவைக் கொண்டுள்ளது இந்த அட்டகாசமான ஒப்போ ஸ்மார்ட்போன்.

 அட்டகாசமான கேமரா

அட்டகாசமான கேமரா

ஒப்போ ரெனோ 7 ப்ரோ ஸ்மார்ட்போன் 50எம்பி பிரைமரி கேமரா + 8எம்பி அல்ட்ரா வைடு லென்ஸ் + 2எம்பி மேக்ரோ சென்சார் என்கிற ட்ரிபிள் ரியர் கேமரா ஆதரவைக் கொண்டுள்ளது. மேலும் செல்பீகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 32எம்பி எம்பி கேமரா ஆதரவுடன் வெளிவந்துள்ளது இந்த அசத்தலான ஒப்போ ஸ்மார்ட்போன்.

பாஸ்ட் சார்ஜிங் வசதி

பாஸ்ட் சார்ஜிங் வசதி

4500 எம்ஏச் பேட்டரி வசதியுடன் வெளிவந்துள்ளது இந்த ஒப்போ ரெனோ 7 ப்ரோ ஸ்மார்ட்போன். மேலும் 665W SuperVOOC பாஸ்ட் சார்ஜிங், கைரேகை ஸ்கேனர் அம்சங்களை கொண்டுள்ளது இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன் மாடல். எனவே இந்த போனை வாங்கினால் சார்ஜ் பற்றிய கவலை இருக்காது.

 கனெக்டிவிட்டி

கனெக்டிவிட்டி

5ஜி, 4ஜி எல்டிஇ, வைஃபை 6, புளூடூத் வி5.2, ஜிபிஎஸ்/ஏ-ஜிபிஎஸ் மற்றும் என்எப்சி போன்ற கனெக்டிவிட்டி ஆதரவுகளை கொண்டுள்ளது இந்த ஒப்போ ரெனோ 7 ப்ரோ ஸ்மார்ட்போன். அதேபோல் ஸ்டார்ட்ரெயில்ஸ் ப்ளூ, ஸ்டார்லைட் பிளாக் நிறங்களில் இந்த ஸ்மார்ட்போன்அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

மேலும் தொழில்நுட்பம், விண்வெளி மற்றும் அறிவியல் தொடர்பான இன்னும் கூடுதல் சுவாரசியமான செய்திகள் பற்றி அறிந்துகொள்ள எங்கள் கிஸ்பாட் சேனல் உடன் இணைந்திருங்கள். உங்களின் கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்துகொள்ளுங்கள்.

Best Mobiles in India

English summary
Oppo Reno 7 Pro Price Slashed in India Check the phone’s new price: Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X