புதிய லீக்: ஒப்போ ரெனோ 7 முக்கிய அம்சங்கள், விலை இதுதானா?- தாராளமா வெயிட் பண்ணி வாங்கலாம்!

|

ஒப்போ ரெனோ 7 என்ற புதிய தொடருக்கான பணியை நிறுவனம் தொடங்கியிருப்பதாக தெரிவிக்கப்படுகிறது. இது இந்த ஆண்டு இறுதிக்குள் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும் என கூறப்படுகிறது. வெண்ணிலா ரெனோ 7 அதன் முந்தைய மாடல் போன்ற ஒரே மாதிரியான வடிவமைப்பைக் கொண்டிருக்கிறது. இதன் கேமரா விவரக்குறிப்புகள் குறித்து முன்னதாகவே தெரிவிக்கப்பட்டது. இது ரெனோ 6 சாதனத்தில் இருந்து மேம்பட்ட அம்சங்களை கொண்டுள்ளது. புதிய கசிவு ரெனோ 7-ன் முக்கிய அம்சங்கள் குறித்த கூடுதல் விவரங்கள் தெரிவிக்கிறது.

ஒப்போ ரெனோ 7 முக்கிய அம்சங்கள்

ஒப்போ ரெனோ 7 முக்கிய அம்சங்கள்

ஒப்போ ரெனோ 7 முக்கிய அம்சங்கள் ஆனது புதிய கசிவின் மூலம் வெளிப்படுத்தப்பட்டுள்ளது. ஒப்போ ரெனோ 7 சமீபத்திய கசிவு வெய்போவில் சீன டிப்ஸ்டர் மூலமாக தெரிவிக்கப்பட்டுள்ளது. வரவிருக்கும் புதிய ஸ்மார்ட்போன் முன்னதாகவே வெளியான சாதனத்தை போன்ற பிளாட் எட்ஜ் டிஸ்ப்ளேவுடன் வரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. டிப்ஸ்டர் தகவலின்படி இந்த ஸ்மார்ட்போன் 6.5 அங்குல டிஸ்ப்ளே மற்றும் ஓஎல்இடி பேனல் உடன் வரும் என கூறப்படுகிறது. இந்த ஸ்மார்ட்போனானது 1080x2400 பிக்சல்கள் முழு எச்டி ப்ளஸ் தீர்மானத்துடன் வரும் என கூறப்படுகிறது. இது 90 ஹெர்ட்ஸ் புதுப்பிப்பு வீதத்தை கொண்டிருக்கும் என தெரிவிக்கப்படுகிறது. பஞ்ச் ஹோல் கேமரா கட்அவுட் முந்தைய கசிவுகள் மூலம் உறுதி செய்யப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

டைமன்சிட்டி 920 செயலி

டைமன்சிட்டி 920 செயலி

ஒப்போ ரெனோ 7 ஸ்மார்ட்போனானது டைமன்சிட்டி 920 செயலி பொருத்தப்பட்டிருக்கும் என கூறப்படுகிறது. இந்த ஸ்மார்ட்போன் 12 ஜிபி எல்பிடிடிஆர்4எக்ஸ் ரேம் மற்றும் 256 ஜிபி உள்சேமிப்பு வசதியோடு அறிமுகம் செய்யப்படும் என கூறப்படுகிறது. மெமரி விரிவாக்க வசதி குறித்து எந்த கசிவு தகவலும் தெரிவிக்கவில்லை. அதேபோல் இதில் நீராவி-அறை திரவ குளிரூட்டப்பட்ட அடுக்கு மற்றும் இசட் அச்சு நேரியல் உள்ளிட்ட கேம் மைய அம்சங்களுடன் இந்த சாதனம் வரும் என தெரிவிக்கப்படுகிறது.

4500 எம்ஏஎச் பேட்டரி ஆதரவு

4500 எம்ஏஎச் பேட்டரி ஆதரவு

ரெனோ 7 சாதனத்தில் மேலும் பாதுகாப்பு அம்சத்துக்கு என இன் டிஸ்ப்ளே கைரேகை ஸ்கேனர் வழங்கப்படும் என தெரிவிக்கப்படுகிறது. மேலும் இந்த ஸ்மார்ட்போன் 4500 எம்ஏஎச் பேட்டரி ஆதரவை கொண்டிருக்கும் எனவும் 65 வாட்ஸ் ஃபாஸ்ட் சார்ஜிங் தொழில்நுட்பத்தை இது ஆதரிக்கும் எனவும் கூறப்படுகிறது.

ஒப்போ ரெனோ 7 விலை குறித்த தகவல்

ஒப்போ ரெனோ 7 விலை குறித்த தகவல்

ஒப்போ ரெனோ 7 விலை விவரங்கள் குறித்து பார்க்கையில் இந்த தகவல் டிப்ஸ்டர் மூலம் பகிரப்பட்டுள்ளன. இந்த ஸ்மார்ட்போன் 8 ஜிபி ரேம் மற்றும் 256 ஜிபி உள்சேமிப்பு வசதியோடு வருகிறது. இந்த ஸ்மார்ட்போன் ஆனது 2999 யுவான் ஆக இருக்கிறது. இதன் இந்திய மதிப்பு சுமார் ரூ.34,965 ஆக இருக்கும் என கூறப்படுகிறது. அதேபோல் இதன் 12 ஜிபி ரேம் மற்றும் 256 ஜிபி உள்சேமிப்பு விருப்ப வேரியண்ட் ஆனது 3299 யுவான் ஆக இருக்கும் என கூறப்படுகிறது. இதன் இந்திய மதிப்பு சுமார் ரூ.38,000 என்ற விலையில் தொடங்கப்படும் என கூறப்படுகிறது.

நவம்பரில் அதன் வெளியீடு

நவம்பரில் அதன் வெளியீடு

ஒப்போ ரெனோ 7 தொடர் வெளியீட்டுக்கான காலக்கெடுவை நிறுவனம் தற்போது வரை அறிவிக்கவில்லை. இந்த ஆண்டு நவம்பரில் அதன் வெளியீடு இருக்கும் என கூறப்படுகிறது. வரும் வாரங்களில் நிறுவனம் இதுகுறித்த விவரங்களை வெளியீடும் என கூறப்படுகிறது.

Most Read Articles
Best Mobiles in India

English summary
Oppo Reno 7 May Launching With 50MP Primary Camera and More: Specs, Price Leak

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X