Home
Mobile

ஒப்போ ரெனோ 7 4ஜி ஸ்மார்ட்போன் அறிமுகம்.! விலை மற்றும் விபரங்கள்.!

ஒப்போ நிறுவனம் புதிய ஒப்போ ரெனோ 7 4ஜி ஸ்மார்ட்போனை இந்தோனேசியாவில் அறிமுகம் செய்துள்ளது. குறிப்பாக இந்த ஸ்மார்ட்போன் தனித்துவமான அம்சங்களுடன் சற்று உயர்வான விலையில் வெளிவந்துள்ளது. அதேபோல் விரைவில் அனைத்து நாடுகளிலும் இந்த ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.. இப்போது ஒப்போ ரெனோ 7 4ஜி ஸ்மார்ட்போனின் விலை மற்றும் விபரங்களை சற்று விரிவாகப் பார்ப்போம்.

ஒப்போ ரெனோ 7 4ஜி

ஒப்போ ரெனோ 7 4ஜி ஸ்மார்ட்போனில் 6.43-இன்ச் ஃபுல் எச்டி பிளஸ் AMOLED டிஸ்பிளே வசதி உள்ளது. பின்பு 90 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட், 180 ஹெர்ட்ஸ் டச் சாம்ப்ளிங் ரேட், கார்னிங் கொரில்லா கிளாஸ் 5 பாதுகாப்பு உள்ளிட்ட பல்வேறு சிறப்பான அம்சங்களை கொண்டுள்ளது இந்தஅட்டகாசமான ஸ்மார்ட்போன் மாடல்.

ப்போ ரெனோ 7 4ஜி ஸ்மார்ட்போனில்

ஒப்போ ரெனோ 7 4ஜி ஸ்மார்ட்போனில் குவால்காம் ஸ்னாப்டிராகன் 680 எஸ்ஒசி சிப்செட் வசதி உள்ளது. எனவே இந்த ஸ்மார்ட்போனை பயன்படுத்துவதற்கு மிகவும் அருமையாக இருக்கும். பின்பு ColorOS 12.1 மூலம் இந்த ஸ்மார்ட்போன் இயங்கும் என்பது குறிப்பிடத்தக்கது.குறிப்பாக ஒப்போ ரெனோ 7 4ஜி ஸ்மார்ட்போனின் வடிவமைப்புக்கு அதிக கவனம் செலுத்தியுள்ளது இந்நிறுவனம்.

ஒப்போ ரெனோ 7 4ஜி

ஒப்போ ரெனோ 7 4ஜி ஸ்மார்ட்போனின் பின்புறம் 64எம்பி பிரைமரி சென்சார் + 2எம்பி மேக்ரோ லென்ஸ் + 2எம்பி டெப்த் லென்ஸ் என மொத்தம் மூன்று கேமராக்கள் உள்ளன. பின்பு செல்பீகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 32எம்பி கேமரா ஆதரவைக் கொண்டுள்ளது இந்தபுத்தம் புதிய ஸ்மார்ட்போன் மாடல்.

ஒப்போ ரெனோ 7 4ஜி ஸ்மார்ட்போனில் 8ஜிபி

இந்த ஒப்போ ரெனோ 7 4ஜி ஸ்மார்ட்போனில் 8ஜிபி ரேம் மற்றும் 256ஜிபி மெமரி வசதி உள்ளது. பின்பு காஸ்மிக் பிளாக் மற்றும் சன்செட் ஆரஞ்சு
நிறங்களில் இந்த புதிய ஒப்போ ரெனோ 7 4ஜி ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

ஒப்போ ரெனோ 7 4ஜி

ஒப்போ ரெனோ 7 4ஜி ஸ்மார்ட்போனில் 4500 எம்ஏஎச் பேட்டரி பொருத்தப்பட்டுள்ளது. எனவே சார்ஜ் பற்றிய கவலை இருக்காது. பின்பு 33 வாட் SuperVOOC பாஸ்ட் சார்ஜிங் வசதி, இன்-டிஸ்பிளே கைரேகை சென்சார் மற்றும் பல்வேறு சென்சார் ஆதரவுகளுடன் இந்த புதியஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

னோ 7 4ஜி ஸ்மார்ட்போ

ஒப்போ ரெனோ 7 4ஜி ஸ்மார்ட்போனில் 4ஜி எல்டிஇ, வைஃபை 5, புளூடூத் வி5.1, ஜிபிஎஸ்/ஏ-ஜிபிஎஸ், என்எப்சி, யுஎஸ்பி டைப்-சி போர்ட்,
3.5எம்எம் ஆடியோ ஜாக் உள்ளிட்ட பல்வேறு இணைப்பு ஆதரவுகளை கொண்டுள்ளது இந்த புதிய ஒப்போ ரெனோ 7 4ஜி ஸ்மார்ட்போன். மேலும் இந்த ஸமார்ட்போனின் விலை இந்திய மதிப்பில் ரூ.27,420-ஆக உள்ளது.

Best Mobiles in India

English summary
Oppo Reno 7 4G With Snapdragon 680 SoC Launched: Specs, Features and More: Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X