Home
Mobile

அடுத்த ஒரு சக்திவாய்ந்த ஸ்மார்ட்போன்: ஒப்போ ரெனோ 6 ப்ரோ அம்சங்கள் இதுவா?

ஒப்போ ரெனோ 6 சீரிஸ் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஒப்போ நிறுவனம் ரெனோ தொடர் சாதனங்களை விரிவுப்படுத்த திட்டமிட்டுள்ளது. வெளியீடுக்கான நேரம் நெருங்கி வரும் நேரத்தில் இந்த ஸ்மார்ட்போன் குறித்த தகவல் தொடர்ந்து கசிந்த வண்ணம் உள்ளது. ரெனோ 6 ப்ரோ ஸ்மார்ட்போன் குறித்த சில முக்கிய விவரக்குறிப்புகள் வெளியாகியுள்ளது.

அடுத்த ஒரு சக்திவாய்ந்த ஸ்மார்ட்போன்: ஒப்போ ரெனோ 6 ப்ரோ அம்சங்கள் லீக்

ஒப்போ ரெனோ 8 ப்ரோ சாதனமானது 6.55 இன்ச் அமோலெட் டிஸ்ப்ளே மற்றும் வளைந்த விளிம்புகளுடன் வரும் என கூறப்படுகிறது. அதோடு இதில் மேல் இடது மூலையில் பஞ்ச் ஹோல் கட்அவுட் வரும் எனவும் வெய்போ மூலம் வெளிவந்த டிப்ஸ்டர் தகவல் தெரிவிக்கிறது. இந்த ஸ்மார்ட்போனானது 90 ஹெர்ட்ஸ் புதுப்பிப்பு வீத டிஸ்ப்ளேவுடன், 1080 x 2400 பிக்சல்கள் முழு எச்டி ப்ளஸ் தெளிவுத்திறன் உடன் வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ரெனோ 6 ப்ரோ ஸ்மார்ட்போனானது 64 மெகாபிக்சல் முதன்மை கேமராவுடன் பின்புறத்தில் குவாட் கேமரா அமைப்பைக் கொண்டிருக்கும் என கூறப்படுகிறது. மேலும் இதில் விரிவான உள்ளமைவு வடிவமைப்பு இருக்கிறது. முன்பக்கத்தில் 32 மெகாபிக்சல் செல்பி கேமரா அமைப்பு பொருத்தப்பட்டிருக்கிறது.

அடுத்த ஒரு சக்திவாய்ந்த ஸ்மார்ட்போன்: ஒப்போ ரெனோ 6 ப்ரோ அம்சங்கள் லீக்

ஒப்போ ரெனோ 6 ஸ்மார்ட்போனானது 4500 எம்ஏஎச் பேட்டரி உடன் வரும் என கூறப்படுகிறது. மேலும் இந்த ஸ்மார்ட்போனில் கூடுதலாக 65வாட்ஸ் வேகமான சார்ஜிங் வசதி இருக்கும் என குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் ரெனோ 5 ப்ரோ சாதனத்தில் 4350 எம்ஏஎச் பேட்டரி கொண்டிருந்தது அதைவிட பெரிய பேட்டரி இதில் இருக்கும் என கூறப்படுகிறது. அதேபோல் ரெனோ 6 ப்ரோ சாதனத்தில் டைமன்சிட்டி 1000+ பதிலாக டைமன்சிட்டி 1200+ செயலி மூலம் இயக்கப்படும் என கூறப்படுகிறது.

அதேபோல் ஒப்போ ரெனோ 6 ப்ரோ ஸ்மார்ட்போனின் அனைத்து விவரக்குறிப்புகளும் தெரியவில்லை என்றால் இந்த சாதனத்தின் விவரக்குறிப்புகள் ரெனோ 5 ப்ரோ உடன் ஒப்பிட்டு அம்சங்கள் தெரிவிக்கிறது. இதில் ஒப்போ ரெனோ 5 ப்ரோவை விட பெரிய பேட்டரி மற்றும் செயலியை தவிற பிற அம்சங்கள் ஒத்ததாக இருக்கும் என கூறப்படுகிறது. இறுதியாக வெளியான தகவலின்படி ஒப்போ ஒரு மேம்படுத்தல் சாதனத்தை கொண்டுவரும் என கூறப்படுகிறது.

ஒப்போ ரெனோ 5 ப்ரோ 5ஜி விலை
ஒப்போ ரெனோ 5 ப்ரோ 5ஜி விலை குறித்து பார்க்கையில், இதன் 8 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி சேமிப்பு விலை ரூ.35,990 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போன் ஜனவரி 22 முதல் ஒப்போ ஆஃப்லைன், ஆன்லைன் ஸ்டோர் மற்றும் பிளிப்கார்ட் மூலமாக விற்பனைக்கு கிடைக்கும்.

அடுத்த ஒரு சக்திவாய்ந்த ஸ்மார்ட்போன்: ஒப்போ ரெனோ 6 ப்ரோ அம்சங்கள் லீக்

ஒப்போ ரெனோ 5 ப்ரோ அம்சங்கள்
ஒப்போ ரெனோ 5 ப்ரோ ஸ்மார்ட்போன் 6.55 இன்ச் முழு எச்டி ப்ளஸ், 90 ஹெர்ட்ஸ் டிஸ்ப்ளே புதுப்பிப்பு வீதம் உள்ளிட்டவைகளுடன் வருகிறது. இதில் மீடியாடெக் டைமன்சிட்டி 1000 ப்ளஸ் எஸ்ஓசி-ஐ கொண்டிருக்கிறது. மேலும் இந்த ஸ்மார்ட்போன் ஆண்ட்ராய்டு 11 ஆதரவு, இரட்டை சிம் கார்ட்களுடன் வருகிறது.

கேமரா அம்சங்கள்
ஒப்போ ரெனோ 5 ப்ரோ ஸ்மார்ட்போனின் கேமரா அம்சங்கள் குறித்து பார்க்கையில், இது 64 மெகாபிக்சல் முதன்மை கேமரா, 8 மெகாபிக்சல் இரண்டாம் நிலை கேமரா, இரட்டை 2 மெகாபிக்சல் கேமரா கொண்டிருக்கிறது. பஞ்ச் கட்அவுட் அமைப்புடன் 32 மெகாபிக்சல் செல்பி கேமரா பொருத்தப்பட்டுள்ளது.

ஒப்போ ரெனோ 5 ப்ரோ இணைப்பு ஆதரவுகள்
ஒப்போ ரெனோ 5 ப்ரோ இணைப்பு ஆதரவுகள் குறித்து பார்க்கையில், இதில் டூயல் பேண்ட் வைஃபை, ப்ளூடூத் 5.1, பாதுகாப்பு அம்சத்திற்கு இன் டிஸ்ப்ளே கைரேகை சென்சார் உள்ளிட்டவைகள் இருக்கிறது. இந்த ஸ்மார்ட்போனில் 4350 எம்ஏஎச் பேட்டரி மற்றும் 65 வாட்ஸ் வேகமான சார்ஜிங் ஆதரவு உள்ளிட்டவைகள் உள்ளன.

Best Mobiles in India

English summary
Oppo Reno 6 Pro May Launching Soon with these Specification
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X