ஒப்போ ரெனோ 6 ப்ரோ ஸ்மார்ட்போன்கள் விரைவில் அறிமுகம்.. என்ன சொல்கிறது லீக் தகவல்?

|

ஒப்போவின் ரெனோ தொடரில் ரெனோ 6 சீரிஸ் ஸ்மார்ட்போன்கள் விரைவில் வெளியிடப்படும் என்று எதிர்பார்க்கப்படுவதால், இப்போது, ​​வெளியீடு நெருங்கி வரும் நேரத்தில் பல கசிவுகள் ஏற்கனவே வெளிவர தொடங்கியுள்ளன, அந்த வரிசையில் இப்பொழுது வரவிருக்கும் ரெனோ 6 ப்ரோ ஸ்மார்ட்போனின் சில முக்கிய விவரக்குறிப்புகள் புதிய தகவல்களுடன் இணையத்தில் வெளியாகியுள்ளது.

ஒப்போ ரெனோ 6  ப்ரோ விரைவில் அறிமுகம்.. என்ன சொல்கிறது லீக்?

டிஜிட்டல் சாட் ஸ்டேஷன் என்ற அறியப்பட்டுள்ள லீக்ஸ் டிப்ஸ்டர் மூலமாக Weibo வழியில் இருந்து வெளிவந்துள்ளது. புதிய Reno6 புரோ ஸ்மார்ட்போன் மேல் இடது மூலையில் உள்ள ஒரு பஞ்ச் ஹோல் நாட்ச் உடன் வரும் என்பதை புகைப்படம் காட்டுகிறது. கர்வுடு முனைகளைக் கொண்ட 6.55 இன்ச் AMOLED டிஸ்பிளே உடன் இந்த ஸ்மார்ட்போன் வெளிவரும். இந்த ஸ்மார்ட்போன் 90 ஹெர்ட்ஸ் புதுப்பிப்பு வீதத்துடன் ஜோடியாக 1080 x 2400 பிக்சல்கள் கொண்ட எஃப்.எச்.டி பிளஸ் தெளிவுத்திறன் வழங்கும் டிஸ்பிளேவை கொண்டுள்ளது என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ரெனோ 6 ப்ரோ 64 மெகாபிக்சல் முதன்மை சென்சார் மூலம் பின்புறத்தில் ஒரு குவாட்-கேமரா அமைப்பைக் கொண்டிருக்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது, அதே நேரத்தில் விரிவான தகவல்கள் வெளியிடப்படாமல் வைக்கப்பட்டுள்ளது. முன்பக்கத்தில், கட்அவுட்டில் வைக்கப்பட்டுள்ள 32 எம்.பி சென்சார் இது செல்ஃபிக்களுக்குப் பயன்படுத்தப்படும். இந்த ஸ்மார்ட்போன் 4500 எம்ஏஎச் பேட்டரியுடன் 65W பாஷாட் சார்ஜிங்கை ஆதரிக்கும். ரெனோ 5 ப்ரோவில் 4350 எம்ஏஎச்சில் காணப்பட்டதை ஒப்பிடும்போது இந்த பேட்டரி அளவு பெரியது.

ஒப்போ ரெனோ 6  ப்ரோ விரைவில் அறிமுகம்.. என்ன சொல்கிறது லீக்?

இது தவிர, இரண்டு தலைமுறைகளுக்கிடையேயான ஒரே பெரிய வித்தியாசம் சிப்செட் ஆக இருக்கக்கூடும், ஏனெனில் ரெனோ 6 ப்ரோ ஸ்மார்ட்போன், ரெனோ 5 ப்ரோவில் உள்ள டைமன்சிட்டி 1000+ க்கு பதிலாக டைமன்சிட்டி 1200 சிப்செட் மூலம் சக்தியை ஈர்க்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ரெனோ 6 ப்ரோவின் அனைத்து விவரக்குறிப்புகளும் ரெனோ 5 ப்ரோவுடன் பொருந்துகின்றன, புதிய போனில் சற்று பெரிய பேட்டரி மற்றும் சக்திவாய்ந்த சிப்செட் வழங்கப்பட்டுள்ளது.

ஒப்போ ரெனோ 5 ப்ரோ 5 ஜி சிறப்பம்சம்

  • 6.55' இன்ச் 1,080x2,400 பிக்சல்கள் கொண்ட முழு எச்டி பிளஸ் OLED டிஸ்பிளே
  • ஆக்டா கோர் மீடியாடெக் டைமன்சிட்டி 1000+ சிப்செட்
  • 8 ஜிபி எல்பிடிடிஆர் 4 எக்ஸ் ரேம்
  • 128 ஜிபி யுஎஃப்எஸ் 2.1 சேமிப்பு
  • மைக்ரோ எஸ்டி கார்டு கிடையாது
  • ஆண்ட்ராய்டு 11உடன் கூடிய கலர்ஓஎஸ் 11
  • குவாட் கேமரா அமைப்பு
  • 64 மெகாபிக்சல் பிரைமரி கேமரா
  • 8 மெகாபிக்சல் இரண்டாம் நிலை சென்சார்
  • 2 மெகாபிக்சல் மேக்ரோ ஷூட்டர்
  • 2 மெகாபிக்சல் மோனோக்ரோம் சென்சார்
  • 32 மெகாபிக்சல் ஸ்னாப்பர்
  • டிஸ்பிளே கைரேகை சென்சார்
  • 5 ஜி மற்றும் 4 ஜி எல்டிஇ
  • வைஃபை 6
  • புளூடூத் 5.1
  • ஜிபிஎஸ் / ஏ-ஜிபிஎஸ்
  • என்எப்சி
  • யூ.எஸ்.பி டைப்-சி போர்ட்
  • 65W SuperVOOC 2.0 பாஸ்ட் சார்ஜிங்
  • 4,350mAh பேட்டரி
Best Mobiles in India

Read more about:
English summary
Oppo Reno 6 Pro key specifications tipped with battery details : Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X