Home
Mobile

ஒப்போ ரெனோ 6 மற்றும் 6 ப்ரோ 5ஜி இந்தியாவில் அறிமுகம்.. விலை மற்றும் விற்பனை தேதி இது தான்..

ஒப்போ நிறுவனம் இறுதியாக ரெனோ 6 மற்றும் ரெனோ 6 புரோ ஆகிய இரண்டு புதிய மாடல்கள் உள்ளடக்கிய ரெனோ 6 தொடரை இன்று இந்தியாவில் அறிவித்துள்ளது. இரண்டு மாடல்களும் முதலில் மே மாதத்தில் ரெனோ 6 புரோ பிளஸ் மாடல் உடன் அறிமுகம் செய்யப்பட்டன, ஆனால் ரெனோ 6 புரோ பிளஸ் இந்தியாவுக்குக் கொண்டுவரப்படுமா என்பது குறித்த எந்த தகவலையும் ஒப்போ வெளியிடவில்லை. ஒப்போ ரெனோ 6 மற்றும் 6 ப்ரோ விலை மற்றும் சிறப்பம்ச விபரங்களை இந்த பதிவில் பார்க்கலாம்.

ஒப்போ ரெனோ 6 மற்றும் 6 ப்ரோ இந்தியாவில் அறிமுகம்

ஒப்போ ரெனோ 6 மற்றும் 6 ப்ரோ இந்தியாவில் அறிமுகம்

ஒப்போ ரெனோ 6 மற்றும் 6 ப்ரோ ஆகிய இரண்டு ஸ்மார்ட்போன் மாடல்களும் ஒற்றை சேமிப்பு வேரியண்ட் விருப்பத்தில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இரண்டு சாதனங்களும் அரோரா மற்றும் ஸ்டெல்லர் பிளாக் ஆகிய இரண்டு வண்ண வகைகளில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதன் விற்பனை பிளிப்கார்ட் வலைத்தளம் மற்றும் ஒப்போ நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ வலைப்பக்கத்தின் வழியாக நடைபெறும் என்று நிறுவனம் கூறியுள்ளது.

ஒப்போ ரெனோ 6 ஸ்மார்ட்போனின் சிறப்பம்சம்

ஒப்போ ரெனோ 6 ஸ்மார்ட்போனின் சிறப்பம்சம்

இந்த சாதனம் 6.43 இன்ச் முழு எச்டி பிளஸ் கொண்ட 1080 x 2400 பிக்சல்கள் உடைய பிளாட் அமோலேட் டிஸ்ப்ளேவை கொண்டுள்ளது. இது 90 ஹெர்ட்ஸ் புதுப்பிப்பு வீதத்துடன் உள்ளது. இந்த ஒப்போ ரெனோ 6 5ஜி ஸ்மார்ட்போன் மீடியாடெக் டைமன்சிட்டி 900 சிப்செட் உடன் 8 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி ஸ்டோரேஜ் விருப்பத்துடன் வருகிறது. ஆண்ட்ராய்டு 11-அடிப்படையிலான கலர்ஓஎஸ் 11.3 இயங்குதளத்தில் இது இயங்குகிறது.

கேமரா மற்றும் இணைப்பு அம்ச விபரங்கள்

கேமரா மற்றும் இணைப்பு அம்ச விபரங்கள்

கேமரா அம்சத்தைப் பொறுத்த வரையில் இந்த ஸ்மார்ட்போன் 64 எம்.பி பிரதான லென்ஸ், 8 எம்பி அல்ட்ரா-வைட்-ஆங்கிள் லென்ஸ் மற்றும் 2 எம்பி மேக்ரோ ஷூட்டர் ஆகியவற்றைக் கொண்ட மூன்று பின்புற கேமரா அமைப்பை கொண்டுள்ளது. முன்பக்கத்தில் பஞ்ச்-ஹோல் கட்அவுட்டில் வைக்கப்பட்ட 32 எம்.பி செல்பி கேமராவை கொண்டுள்ளது. இது 65W SuperVOOC 2.0 பாஸ்ட் சார்ஜிங்கை ஆதரிக்கும் 4,300 mAh பேட்டரியை கொண்டுள்ளது.

இது 5 ஜி, வைஃபை 6, புளூடூத் வி 5.2, ஜிபிஎஸ், யூ.எஸ்.பி டைப்-சி போர்ட் மற்றும் பாதுகாப்புக்காக இன்டிஸ்ப்ளே கைரேகை ஸ்கேனர் ஆகியவற்றை ஆதரிக்கிறது.

ஒப்போ ரெனோ 6 ப்ரோ அம்சங்கள்

ஒப்போ ரெனோ 6 ப்ரோ அம்சங்கள்

ஒப்போ ரெனோ 6 ப்ரோ சாதனம் சற்று பெரிய 6.55 இன்ச் FHD + AMOLED டிஸ்ப்ளேவை கொண்டுள்ளது. இது, அதே 90 ஹெர்ட்ஸ் புதுப்பிப்பு வீதத்தையும் 2400 x 1080 பிக்சல்கள் தீர்மானத்தையும் கொண்டுள்ளது. இது 32 எம்பி முன் கேமரா சென்சார் வைக்க ஒரு பஞ்ச்-ஹோல் கட்அவுட்டையும் கொண்டுள்ளது. இந்த மாடல் மீடியா டெக் டைமன்சிட்டி 1200 சிப்செட் உடன் 12 ஜிபி ரேம் மற்றும் 256 ஜிபி ஸ்டோரேஜ் மூலம் இயக்குகிறது.

கேமரா மற்றும் இணைப்பு அம்ச விபரங்கள்

கேமரா மற்றும் இணைப்பு அம்ச விபரங்கள்

ஆண்ட்ராய்டு 11-அடிப்படையிலான கலர்ஓஎஸ் 11.3 இயங்குதளத்தில் இது இயங்குகிறது. ரெனோ 6 ப்ரோ குவாட்-கேமரா அமைப்பைக் கொண்டுள்ளது. இது 64MP முதன்மை சென்சார், 8MP வைடு ஆங்கிள் லென்ஸ், 2MP மேக்ரோ மற்றும் மற்றொரு 2MP டெப்த் சென்சார் வழங்கப்பட்டுள்ளது. இதுபோக 5 ஜி, வைஃபை 6, புளூடூத் வி 5.2, ஜிபிஎஸ், யூ.எஸ்.பி டைப்-சி போர்ட் மற்றும் பாதுகாப்புக்காக இன்டிஸ்ப்ளே கைரேகை ஸ்கேனர் ஆகியவற்றை ஆதரிக்கிறது.

ஒப்போ ரெனோ 6, ரெனோ 6 ப்ரோ விலை மற்றும் விற்பனை

ஒப்போ ரெனோ 6, ரெனோ 6 ப்ரோ விலை மற்றும் விற்பனை

இந்தியாவில் நிலையான ஒப்போ ரெனோ 6 5 ஜி ஸ்மார்ட்போனின் 8 ஜிபி + 128 ஜிபி சேமிப்பு கொண்ட ஒரே ஸ்டோரேஜ் வேரியண்ட் மாடலுக்கு ரூ. 29,990 என்ற விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இது ஜூலை 29 முதல் விற்பனைக்கு கிடைக்கும். மறுபுறம், ஒப்போ ரெனோ 6 ப்ரோ 5 ஜி ஸ்மார்ட்போன் மாடல் 12 ஜிபி ரேம் + 256 ஜிபி ஸ்டோரேஜ் உடன் வெறும் ரூ. 39,990 விலையில் ஜூலை 20 ஆம் தேதி முதல் விற்பனைக்குக் கிடைக்கும். 4,000 கேஷ்பேக் மற்றும் Paytm பரிவர்த்தனைகளில் உடனடி 15 சதவீதம் கேஷ்பேக் சலுகையும் கிடைக்கிறது.

Best Mobiles in India

English summary
Oppo Reno 6 and Oppo Reno 6 Pro 5G With 90Hz Display Launched In India : Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X